(Reading time: 18 - 35 minutes)

பெண்ணே!! உனக்குள்

ஏன் இத்தனை சோகம்?

ஏன் தெரியுமா?

உன்னை நீ நேசிக்க மறுக்கிறாய்.

யாருக்கு தான் இல்லை கவலை?

நீ நினைப்பது எல்லாம் 

நினைத்தவுடன் நடக்க வேண்டும் என்றால்...

அது முட்டாள் தனம் 

அதனால், நீ நினைப்பதை நிறுத்திவிடாதே,

உன் கனவுகளும் நிறைவேறும் காலம் வரும் 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்... 

காத்திருப்பது காதலர்களுக்கு மட்டும் தான் சுகம்,

என்று சொன்னவர்கள் முட்டாளா?

தெரியவில்லை.

கடமையை செய்ய காத்திருப்பதும் சுகமே!

சபாஷ் பெண்ணே !!

உன் கனவை கடமை என்கிறாயே 

இந்த எண்ணமே விரைவில் வெற்றி பெரும்.

சொன்னது?

இப்படிக்கு, 

மனட்சாட்சி.

என்ன பாடுபட்டாலும் எத்தனை ராத்திரி கனவு கண்டாலும் தன் காதல் நிறைவேறாது ...

இதனூடே சிவா எழுந்துவிட அவளுக்கு எளிதில் ஜீரணமாக கூடிய கஞ்சி கொடுத்தாள் .. அவளுக்கு ஜுரம் கொஞ்சம் குறைந்தது போல் இருக்க அவளுடன் கொஞ்சம் காமெடியாய் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள் ... ஆனால் சிவா அவ்வளவாக பேசவில்லை .. ஜுரத்தில் தாக்க்களாக இருக்கும் என விட்டுவிட்டால் ..

கல்லூரி பத்தி பேசும்போது சிவா இவளை பேய் அறைந்த மாதிரி பார்த்தாள் ... ரஞ்சியின் கேட்ட நேரமோ இல்லை சிவாவின் நல்ல நேரமோ .. அந்த பார்வையை ரஞ்சி கவனிக்க வில்லை ...

உணவு முடிந்து சிவா தூங்கி விட இவளுக்கு தனிமை மீண்டும் தாக்கியது .. 

தனிமை இனிமையானதா? இந்த ஒரு கேள்விக்கான விடை நமக்கு இன்னும் சில கேள்விகளிலிருந்தே கிடைக்கும். யாருக்கு? எப்போது? எவ்வளவு நேரம்? என்றெல்லாம் கேள்விகள் விரியும்.

தனிமையில் நாம் மௌனத்தின் மகத்துவத்தை அது அருமருந்தாக ஆவதை, ஓசையின் ஊறிலிருந்து தற்காலிக விடுதலையை அனுபவிக்கிறோம்.

மனிதன் தனியாக இருக்கப் படைக்கப்படவில்லை. உண்மையே. அதே சமயம் தன் தனித்தன்மையை அவன் உணரும் பட்சத்தில் தனிமை அமையும் நேரங்களில்தான் அவன் தன்னைத் தானே மீட்டெடுக்கிறான்.

தனிமையில் பலவிதம் உண்டு .. இவள் தனிமை .விரும்பி ஏற்றுக் கொண்ட தனிமை..தானே உருவாக்கிய தனிமை, ஆறுதலுக்காக உருவாக்கப்பட்ட  தனிமை.. தனிமை கொள்வதே ஆனந்தம் என உணரும் தனிமை.

தங்கை நன்றாக தூங்கியதால் கடற்கரை செல்ல தீர்மானித்தாள் ...அம்மா அப்பா இருக்கும்போது இருவரும் தினமும் செல்வார்கள் .. இப்பொழுது வேலை முடிந்து செல்வதானால் மிகவும் நேரம் ஆகிவிடுகிறது எனவே இவர்கள் செல்வதில்லை ..

கடற்கரை மாலை நான்கு மணி முதலே நடைப் பயிற்சி செய்பவர்களால் களை கட்டிக் கொண்டிருந்தது. தான் மட்டும் கேட்கிற மாதிரி சிலர் காதிலிருந்து “ஐ பாட்”டுக்கு ஒயர்களை மாட்டியிருந்தனர். சிலர் மொபைலிலிருந்து ஒயரே இல்லாமல் “ப்ளூ டூத்” தில் பேசியபடி நடந்தனர். சிலர் குட்டிச் சுவரின் மீது அமர்ந்து அகப்பட்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். உதிரியாக மணல் நெடுக ஏகப்பட்டவர் அமர்ந்திருந்தனர். கட்டு மரங்கள், ‘மோட்டர் போட்’டுகள், தூரத்தில் ஒரு கப்பல்.

அந்த காட்சிகளை காணும்போது மனதின் பளு குறைந்தது போல் ஒரு எண்ணம்....

சங்கீதா அவளைத்தேடி நேராக கடற்கரை வந்துவிட்டாள் ... வெள்ளை நுரையுடன் கடலை காணும்போதே மனம் சிறுபிள்ளையாய் மாறியது .... தோழிகள் இருவரும் நிறைய பேசி விளையாடிக்கொண்டே ... மணலில் கால் புதைத்து நடந்தார்கள் ..

நேரம் ஆனதும் வீட்டிற்கு போய் எளிமையான டிபன் செய்துவிட்டு மூவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது சங்கீயின் கணவர் வர அவரும் டிபன் முடித்துவிட்டு அவர்கள் கிளம்பினார்கள் 

போகும் முன் உள்ளே வந்த சங்கீ .. டி என்ன ஆச்சு சிவா மூஞ்சே சரியில்லை 

அவளுக்கு உடம்பு சரியில்லை  டி உனக்கு தெரியாதா ???

இல்லை அதையும் தாண்டி என்னவோ சரி இல்லை அவளை கூப்பிட்டு விசாரி ..

அதற்குள்ளாக லே ஆகுது என அண்ணா கூப்பிட அவள் சென்று விட்டாள் .... தொடர்ந்து பாத்திரங்களை கழுவுவதில் நேரம் செலவிட்ட ரஞ்சிக்கு இது மறந்தே போனது 

வெளிர் நீல வண்ண இரவு விளக்கொளியும், கொசு விரட்டும் திரவத்தின் வாசனையும், பக்கத்துக் குடியிருப்புக்களிலிருந்து வரும் குழப்பமான டிவி ஒலியும் ஆன இந்த நேரம் இவளுக்கு விக்ரமுடனான நேரம் இந்த நேரத்தில் அவள் அவனை பத்தி மட்டுமே யோசித்து தூங்கி போவாள் இன்றும் போனால் ...

சங்கீ சொன்ன விஷயத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் பின்னாளில் வரும் பல சோகங்களையும் இழப்புக்களையும் தடுத்திருக்கலாம் என தெரிந்திருந்தால் இவள் இப்படி நிம்மதியாக தூங்கி இருக்க மாட்டாள்.....

sorry  சிஸ்டர்ஸ் பாமிலியா வகேஷன் போனதுல ரொம்ப ஸ்பெல் செக் அந்த டீடைல் எபிசோட் குடுக்கமுடியால .... நெஸ்ட் time கண்டீப்பா முயற்ச்சி பண்ணறேன் 

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:997}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.