(Reading time: 30 - 59 minutes)

"தேவா.... அவளை விட நான் தான் உனக்கு க்ளோஸ்... அதனால நீ என்னோட பேச்சை தான் கேக்கனும்" - சங்கவி.

"அதெல்லாம் அப்போ... இப்போ நான் தானே உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் ... அதனால என்னோட பேச்சை தான் கேக்கனும்..." - யுக்தா.

"அய்யோ ரெண்டுப்பேரும் இப்படி மாத்தி மாத்தி இதையே சொல்லாதீங்க.. டேய் தேவா ஏதாவது சொல்லேண்டா..." - பாட்டி.

"சங்கு... யுக்தா கொஞ்ச நாள் இங்க இருக்கட்டுமே..." என்று தேவா சொன்னதும்...

"எனக்கு தெரியும் தேவா... நீ எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்னு..." என்று யுக்தா சொன்னாள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

"பாட்டி இப்போ நைட் ஆயிடுச்சு... அதனால நான் இப்போ ஊருக்குப் போக முடியாது... அதனால நான் காலையில கிளம்பறேன்..." என்று சொல்லிவிட்டு விருவிருவென்று மொட்டை மாடிக்கு கோபமாக சென்றாள் கவி.

"டேய் ஏண்டா யுக்தாக்கு சாதகமா அவக்கிட்ட பேசின... என்ன இருந்தாலும் அவ நம்ம வீட்டுக்கு வரப்போற மருமக... போ அவளைப் போய் சமாதானப்படுத்து...' என்று பாட்டி சொன்னதும்...

"ஆமா தேவா... நீ அப்படி பேசி இருக்கக் கூடாது... ஏதோ அவளை வெறுப்பேத்த நான் அப்படி பேசினா... நீயும் எனக்கு சப்போர்ட் பண்றா மாதிரி பேசிட்டியே... போ தேவா போய் அவளை சமாதானப் படுத்து..." என்றாள் யுக்தா.

"அடப்பாவிங்களா... சும்மா இருந்தவன் மனசுல காதலை வளர்த்துட்டு... இப்போ நீங்களே அதுக்கு சங்கு ஊதுறீங்களா...??

நீங்க எதுக்கு அமைதியா இருக்கீங்க தாத்தா... நீங்களும் ஏதாவது சொல்லுங்க...

இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கல... அதுக்குள்ள எங்க காதல் முடிஞ்சிடும் போலேயே... அப்படி மட்டும் ஏதாவது நடக்கட்டும்... அப்புறம் இருக்கு உங்களுக்கு... " என்று கூறிவிட்டு மாடிக்குப் போனான்.... அவன் சென்றதும் மூவரும் சிரித்தனர்.

அங்கே மாடியில் உள்ள மதில் சுவரில் கை வைத்து கவி நின்றுக் கொண்டிருந்தாள்... தேவா படிக்கட்டுகள் ஏறி கடைசி படியில் நிற்க... அவள் அந்தப்பக்கம் பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள்...

அவள் கோபத்தை எப்படி சரி செய்வது... என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என்று அவனுக்கு  தெரியவில்லை... யுக்தா சென்னைக்கு போகவேண்டும் தான்... ஆனால் இவனால் எப்படி நேராக யுக்தாவிடம் சென்னைக்கு போ என்று சொல்ல முடியும்...

அன்றைக்கு அவளுக்கு ஒரு பிரச்சனை என்ற போது இவனிடம் தானே உதவிக் கேட்டாள்... ஏன் சங்கவிக்கு இவன் மேல் உள்ள காதலையும் அவள் தானே புரிய வைத்தாள்... இதுவரைக்கும் சங்கவிக்கும் இவனுக்கும் இருந்தது போல்... யுக்தாவிற்கும் இவனுக்கும் நெருக்கம் இருந்ததில்லை... ஆனால் இன்று ஒரு நல்ல தோழியாய் அவள் இருக்கிறாள்...

தானாகவே அன்றைய நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்தது... அன்று விடியற்காலை தூங்கிக் கொண்டிருந்த போது போன் அடிக்க எடுத்துப் பார்த்தால் அழைத்ததோ யுக்தா... இந்த நேரம் இவள் எதுக்கு அழைக்கிறாள் என்று அட்டண்ட் செய்ததும்... நான் வடபழனியில் இருந்து பஸ்ல வந்துட்ருக்கேன்... டி.நகர் பஸ் ஸ்டாப்க்கு வரமுடியுமா தேவா... என்று யுக்தா கேட்டதும்... முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.... இருந்தாலும் கிளம்பினான்....

பஸ் வருவதற்கு முன்பே இவன் நின்றிருக்க கையில் ஒரு பையோடு இறங்கினாள் யுக்தா... அங்கே வைத்து எதுவும் பேச முடியாது என்பதால்... தான் தங்கியிருக்கும் அறைக்கு அவளை அழைத்துப் போனான்... தனியாக ஒரு பெண்ணை அழைத்து வந்தால் தவறாக பேசுவார்கள் என்று எண்ணி.... தான் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரிடம் தன் மாமா பெண் தான்... ஒரு பிரச்சனை அதனால் தான் பேச அழைத்து வந்திருக்கிறேன் என்றதும்... இவனை பற்றி அவர்களுக்கும் தெரிந்ததால் சரி என்றனர்...

பின் அவளிடம் என்னப் பிரச்சனை என்று கேட்டதும்... "தேவா எனக்கு தங்க ஒரு இடம் வேணும்... கொஞ்சம் அரேஞ் பண்ணி தர முடியுமா...?? கொஞ்ச நாளைக்கு தான்... எனக்கு இங்க சென்னையில உன்னையும் வரூனையும் தவிர வேற யாரையும் தெரியாது... வரூன்கிட்ட இப்போ ஹெல்ப் கேக்க முடியாது அதான்..." என்றாள்.

"யுக்தா என்ன பிரச்சனை... வீட்ல சொல்லிட்டு வந்தீயா... இல்லை சொல்லாம வந்துட்டியா..?? எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போ... அங்கப் போய் பேசிக்கலாம்..."

"இல்லை தேவா... லெட்டர் தான் எழுதி வச்சிட்டு வந்திருக்கேன்... நான் கொஞ்ச நாள் தனியா இருக்கனும்னு நினைக்கிறேன்... எனக்கு இப்போ வீட்டுக்கு போக வேண்டாம்... ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு..."

"நீ தனியா இருக்கனும்னு நினைச்சா சரி... ஆனா அதுக்கு வீட்ல சொல்லாம வரனும்னு இல்லை... சரி வீட்ல இருக்க யாருடைய போன் நம்பராவது கொடு... நானே பேசறேன்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.