(Reading time: 30 - 59 minutes)

வளுக்கு யார் மீதும் கோபமில்லை... யார் மீதும் வருத்தமுமில்லை...  கவியோடு பேசக் கூடாது... கவியிடம் செல்லக் கூடாது என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை... இவர்களையெல்லாம் விட்டு வெகுதூரம் செல்லவும் நினைக்கவில்லை... அதனால் தான் தேவா உதவியை இவள் நாடியது... அன்றைக்கு பிருத்வி அப்படி பேசியதும்... ஏனோ அதன்பிறகு அவளுக்கு அங்கு இருக்கவே ஒருமாதிரி இருந்தது... மனமோ தனிமையை நாடியது... யாரையும் பார்க்க வேண்டுமென்று தோன்றவில்லை...

ஏதேதோ கனவுகளோடு இந்தியா வந்தவளுக்கு... அவளையும் மீறி அவள் வாழ்க்கையில் அவள் எதிர்பார்க்காததெல்லாம் நடந்துவிட்டதாக தோன்றியது... பிருத்வி அன்று கோபமாக பேசியதும்.. அத்தை மாமாவிடம் சொல்லிவிட்டே அவள் வீட்டை விட்டு வந்திருக்கலாம்... அம்மா அப்பா இங்கு இல்லையென்றாலும் சாவிம்மாவோடோ இல்லை பெங்களூரில் கவியோடோ இருந்திருக்கலாம் தான்... ஆனால் அவளுக்கு அப்படி செய்ய தோன்றவில்லை...

தன் அம்மா, சாவிம்மா, மதி அத்தை மூவரும் எப்படி பிரச்சனையை சரி செய்து இவர்கள் இருவரையும் வாழ வைக்கலாம் என்றே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்... கவியோ வழக்கம் போல் பிருத்வி மீது கோபப்படுவாள்... அப்பாவுக்கும் பிருத்வி மீது கோபம் வரும்... ஏற்கனவே இந்த கல்யாணத்தை ஏன் செய்து வைத்தோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்... இதெல்லாம் இப்போதும் அவர்கள் சிந்தித்துக் கொண்டு தான் இருப்பர்...

ஆனால் அவர்கள் கூட இவள் இருந்தால்... திரும்பவும் வீட்டுக்கு போம்மா என்று அம்மாவும் சாவிம்மாவும் சொன்னால் இவளால் மீற முடியாது... அப்பா திரும்பவும் வருத்தப்பட்டு பேசினாள் இவளால் தாங்கிக் கொள்ள முடியாது... கவி ஏதாவது சொல்லிவிட்டால் இவளால் அதை கேக்க முடியாது... அதுக்கும் மேலே மதி அத்தையும் பிரணதியும் வீட்டுக்கு வரச் சொல்லி கெஞ்சினால் வர முடியாது என்று இவளால் மறுக்க முடியாது...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

எல்லாருக்காகவும் இவள் யோசித்தால்... திரும்பவும் பிருத்வியை கஷ்டப்படுத்துவது போல் ஆகிவிடும்... கொஞ்ச நாட்களாவது பிருத்வி இவள் இல்லாமல் சந்தோஷமாக இருக்கட்டும்... எதிர்காலத்தையாவது எப்படி வாழனும்னு யோசிக்கட்டும்... இப்படி நினைத்து தான் இவள் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் கிளம்பி வந்தாள்... ஆனால் பிருத்வி என்ன முடிவெடுப்பான் என்று தெரியவில்லை... எவ்வளவு நாள் இப்படி ஒளிந்து கொண்டிருப்பது என்றும் புரியவில்லை... இப்படி தான் இந்த இரண்டு மாதங்களை ஓட்டினாள்...

இப்படி குழப்பத்தோடு இங்கிருந்தாலும்... ஏதோ ஒரு நிம்மதியை இங்கு உணர்ந்தாள் இவள்... தாத்தா பாட்டியின் அன்னியோன்யம்... அவர்கள் இவளிடம் பழகும் முறை... தேவாவின் நட்பு... இவள் வந்ததிலிருந்து பாட்டியின் ஏற்பாட்டால் அக்கம் பக்கம் உள்ள பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுப்பதன் மூலம் அந்த பிள்ளைகளோடு விளையாடுவது... அவர்கள் குறும்புதனத்தை ரசிப்பது என்று இவள் பொழுது போனது...

இவ்வளவு நாள் இதெல்லாம் இழந்துவிட்டதை போல் உணர்ந்தாள்... சிறுவயதிலிருந்தே கவி பிருத்வி பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதும்... அவர்களை தவிர மற்றவரிடமிருந்து விலகி இருந்ததும் தவறோ என்று தோன்றியது... அவர்கள் இப்போதும் இவளுக்கு முக்கியம் தான்... ஆனால் அதையும் தாண்டியும் உலகம் இருக்கிறது என்பதை அறிய தவறிவிட்டேனோ என்று மனம் சிந்தித்தது...  இப்படி இருந்ததால் தான் அவர்களின் புறகணிப்பில் துவண்டுவிட்டேனோ... என்ற கேள்வி  தோன்றியது...

"என்ன தீவிர சிந்தனை..." என்றான் அங்கு வந்த தேவா...

"என்ன உன்னோட ஆளு என்னை சென்னைக்கு பேக்அப் பண்ண  சொன்னாளே... அதை சொல்லத் தானே வந்த..."

"ஹே அப்படியெல்லாம் இல்ல..."

"நான் தான் அவ சொன்னத கேட்டேனே... நீ அதுக்கு தலையை ஆட்டியதையும் பார்த்தேனே... ஆனா இப்படி ஃபிகரை பார்த்ததும் ஃப்ரண்ட டீல்ல விடுவேன்னு நான் நினைக்கல தேவா..."

"என்னது ஃபிகரா...?? என்னோட ஆள் என்ன உனக்கு ஃபிகரா..??"

"ஆமாம் காதலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் இன்னும் காதலை சொல்லாம வெறும் ஸைட் மட்டும் அடிச்சிட்டு இருந்தா... ஃபிகருன்னு சொல்லாம என்ன சொல்லுவாங்களாம்..."

"நாங்க நேரம் வரும்போது சொல்லுவோம்... இப்போ நீ என்ன சொல்ற... முன்னாடியே நான் சொன்னப்படி அவக்கிட்ட சொல்லியிருந்தா இப்படி வேதாளம் திரும்ப முருங்கை மரம் ஏறுமா..?? இப்போ அவ உன்கிட்ட பேசமாட்டாளாம்.. இப்போ என்ன பண்ணுவ..."

"எவ்வளவு நாள் அவ என்கிட்ட பேசாம இருக்கான்னு பார்க்கிறேன்... நான் ஏன் அவக்கிட்ட நான் இங்க இருக்கறத சொல்ல வேண்டாம்னு சொன்னேன்னு இப்போ தெரியுதா...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.