(Reading time: 30 - 59 minutes)

ப்படி தான் அப்பா அம்மாக்கிட்ட சொல்லிடுவா... எல்லோரும் வந்து இந்த விஷயத்தை பெரிய இஷ்யுவாக்கிடுவாங்க... என்னோட நிலைமையோ... இல்லை பிருத்வியோட மன நிலைமையையோ யாரும் யோசிக்க மாட்டாங்க... இப்போ நான் சென்னைக்கு போகனும்... அப்புறம் பிருத்வி வீட்டுக்கு போகனும்... அப்புறம் பிருத்வியோட நிம்மதி என்னால கெடும்... இது தான் இப்போ நடக்கப் போகுது..." என்று கவலையாக கூறினாள்...

"இப்போ மட்டும் பிருத்வி நிம்மதியா இருப்பான்னு நீ நினைக்கிறியா...??" என்று தேவா சொன்னதும் அதிர்ச்சியாகப் பார்த்தாள் யுக்தா...

"என்ன சொல்ற தேவா..??"

"நீயே சொல்லுவியே பிருத்விக்கு என்மேல காதல் இல்லைன்னாலும் அன்பு இருக்கு அப்படின்னு... அப்போ நீ எங்க இருக்கன்னு தெரியாம பிருத்வி வருத்தப்படுவானா...?? இல்லை சந்தோஷப்படுவானா...?? தன்னால தான் யுக்தா வீட்டை விட்டுப் போய்ட்டதா பிருத்வி வருத்தப்படமாட்டானா...?? இந்த சமயத்துல அடுத்து என்ன முடிவெடுக்கனும்னு பிருத்வியால சிந்திக்க தான் முடியுமா..?? என்று கேட்டதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை யுக்தாவிற்கு... அவள் அமைதியாக இருந்தாள்...

"பிருத்வி மேல யாரும் கோபப்படாதீங்கன்னு லெட்டர் எழுதி வச்சிட்டு வந்தா யாரும் பிருத்வி மேல கோபப்படமாட்டாங்கன்னு நீ நினைச்சியா..?? எதுவும் சொல்லைன்னாலும் எல்லோருடைய பார்வையும் பிருத்வியத் தானே குற்றம் சாட்டும்.. அப்போ பிருத்வியால நிம்மதியா இருக்க முடியுமா...?? இன்னொன்னு தெரியுமா..?? நீ வீட்டை விட்டு வந்த நாளிலிருந்து பிருத்வி அப்பா அவன் கிட்ட பேசல.."

"என்ன சொல்ற தேவா.. நீ இதெல்லாம் என்கிட்ட ஏன் சொல்லல..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

G Adarsha's "My really really really really really REALLY weird story" - Come let us sneak peek into the mind of a ten year old kid...

படிக்க தவறாதீர்கள்... 

"இதை எப்பவோ உன்கிட்ட என்னால சொல்லியிருக்க முடியும்... ஆனா நீ மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்ட் மாதிரி இருந்த... நீ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கனும்னு நினைச்சேன்... அப்புறம் பிருத்வி வேதனைப்பட்டாலும் நீ இல்லாத நேரங்களை அவன் எப்படி உணருவான்னு அவனே தெரிஞ்சிக்கனும்... அதான் அமைதியா இருந்தேன்... இதனால எல்லோரும் என்னை திட்டுனாக் கூட பரவாயில்லை..."

"அப்போ நான் தப்பா முடிவெடுத்திட்டேனா தேவா... இப்படி நான் செஞ்சிருக்க கூடாதா...??"

"அதனால ஒன்னும் பிரச்சனையில்லை... ஆனா இப்போ நீ சென்னைக்கு போ... சாவிம்மா சங்குக்கூட உங்க வீட்லயே இரு... இதப்பத்தி பேச வேண்டாம்னு நான் எல்லார்க்கிட்டேயும் சொல்றேன்... நீ கிடைச்சது தெரிஞ்சா பிருத்வி கொஞ்சம் கவலையில்லாம இருப்பான்... அப்போ அடுத்து என்ன செய்யலாம்னு யோசிப்பான்... அப்புறம் ரெண்டுப்பேரும் பேசனாலே பிரச்சனை சரியாயிடும்... என்ன புரிஞ்சுதா..??"

"சரி தேவா நீ சொன்ன மாதிரியே செய்றேன்... நான் சென்னைக்கு கிளம்பறேன்... நீ இதை கவிக்கிட்ட சொல்லிட்டு அவளை சாப்பிட அழைச்சிட்டு வா... நான் போய் எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..." என்று அவள் எழுந்துப் போனாள்.

யுக்தா சென்னைக்கு வர சம்மதித்ததை கவியிடம் தேவா கூறினான்... அதைக் கேட்டு கவி சந்தோஷப்பட்டாள்... எப்படி தேவா அவளை சம்மதிக்க வைத்தான் என்று ஆச்சர்யப்பட்டாள்.. என்னத்தான் கவியிடம் தேவா வெளிப்படையாக சொன்னாலும் சம்யூ  தேவாவை வேண்டாம் என்று சொன்னதால் தேவாவிற்கு வருத்தம் இருக்குமோ என்று கவி அடிக்கடி நினைப்பாள்... ஆனால் இப்போதோ  அப்படியெல்லாம் நினைக்க தோன்றவில்லை கவிக்கு... தேவா சம்யூவிற்கு ஒரு நல்ல நண்பனாக இருக்கிறான் என்று அவள் சந்தோஷப்பட்டாள்.

அன்று எல்லோரும் வீட்டில் இருந்தனர்... அதுவும் ஹாலிலேயே இருந்தனர்... அப்போது சுஜாதாவிடம் இருந்து மதிக்கு போன் வர அதை அட்டண்ட் செய்து பேசியவள் சந்தோஷப்பட்டாள்... பின் போன் பேசி முடித்ததும் "என்னங்க நம்ம யுக்தா கிடைச்சிட்டாளாம்..." என்று சந்தோஷமாக சொன்னாள் மதி. அதைக்கேட்டு செந்தில், பிருத்வி, பிரணதி எல்லோரும் சந்தோஷப்பட்டனர்.

"என்ன சொல்ற மதி... யுக்தா இவ்வளவு நாள் எங்க இருந்தாளாம்... அவ இருக்குற இடம் இவங்களுக்கு எப்படி தெரிஞ்சுதாம்...."

"அவ தேவாவோட பாட்டி வீட்ல தான் இருக்காளாம்... கவி அங்கப் போனப்ப பார்த்தாளாம்..."

"என்ன சொல்ற மதி...  தேவாவும் சேர்ந்து தானே நம்மக் கூட யுக்தாவை தேடினான்..."

"அது தேவா தான் யுக்தாவை அவங்க பாட்டி வீட்ல தங்க வச்சிருக்கான்... யுக்தா சொல்ல வேண்டாம்னு சொன்னதாலையும்... விஷயத்தை எல்லார்க்கிட்டேயும் சொன்னா அவ வேற எங்கேயாவது போய்டுவாளோன்னு சொல்லாம விட்ருக்கான்... சுஜாதா மாதவன் கூட அவனை திட்டியிருக்காங்க..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.