(Reading time: 30 - 59 minutes)

"ல்லை தேவா... நான் கொஞ்ச நாள் யாரையும் பார்க்க விரும்பல... ப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணு... முடியாதுன்னா கூட சொல்லிடு... நான் எப்படியாவது பார்த்துக்கிறேன்..." என்று சொல்லிவிட்டு அவள் வெளியே போக கையில் பேகை எடுத்ததும்.. அவளை தடுத்து நிறுத்தினான்...

அவனுக்கு அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் போன் நம்பர் தெரியாது... இந்த நேரத்தில் கவிக்கோ... இல்லை அத்தை மாமாவுக்கோ... இல்லை சாவித்திரி அத்தைக்கோ யுக்தா பற்றி கூறினால் பதட்டப்படுவார்கள்... அப்படி ஏதாவது செய்வது தெரிந்து இவள் எங்கேயாவது சென்றுவிட்டாள் என்ன செய்வது என்று யோசித்தவன்... இப்போதைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு கூட்டிப் போக முடிவெடுத்தான்... பின் எல்லோருக்கும் தகவல் கொடுக்கலாம் என்று நினைத்தான்...

தாத்தா பாட்டி வீட்டுக்கு அழைத்ததும் யுக்தா வர மறுத்துவிட்டாள்... "நான் இருக்கும் இடம் இப்போ யாருக்கும் தெரிய வேண்டாம்... அங்க இருந்தா லஷ்மி அத்தைக்கு தெரிஞ்சிடும்..." என்றாள்.

"அப்பாவுக்கு இப்போ உடம்பு சரியில்லாததால அம்மாவும் அப்பாவும் தாத்தா பாட்டிய பார்க்க இப்போ வரமாட்டாங்க... தர்ஷினியும் கல்யாணம் ஆயிட்டதால இப்போ அங்க வரமாட்டா... நான் மட்டும் தான் அவங்களை அடிக்கடி பார்த்துட்டு வருவேன்... அதனால நீ அங்க இருக்கலாம்... தாத்தா பாட்டியும் யார்க்கிட்டேயும் சொல்ல மாட்டாங்க..." என்று தக்க காரணங்களை கூறி அவளை சம்மதிக்க வைத்து அங்கே அழைத்து போனான்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

அவளும் அப்போது தான் எல்லோருக்கும் மெயில் அனுப்பினாள்... பின் அங்கே தாத்தா பாட்டியிடம் விஷயத்தை கூறி அவளை அங்கே தங்க வைத்தான்... பின் நீ இங்கேயே கூட கொஞ்ச நாள் இரு... ஆனால் எல்லோருக்கும் நீ இங்கே தான் இருக்கிறாய் என்று தகவல் சொல்லிவிடலாம் என்று அவளை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தான்...

யாரிடமும் சொல்ல வேண்டாம்... சொன்னால் நான் வேறு எங்காவது சென்றுவிடுவேன் என்று பயமுறுத்தினாள் யுக்தா... தாத்தாவும் பாட்டியும் அந்த பொண்ணுக்கு ஏதோ மனசு சரியில்லைன்னு நினைக்கிறேன்... அதனால கொஞ்ச நாள் இருக்கட்டுமே... கொஞ்சம் மனசு சரியானதும் சொல்லிக்கிலாம் என்றதும்... இவனும் வேறு வழியில்லாமல் சம்மதித்தான்...

ஆனால் யுக்தா காணவில்லை என்று தெரிந்து கவி இவனிடம் வருத்தமாக பேசியதும்... கவியிடமாவது சொல்லலாம் என்று யுக்தாவிடம் தேவா கூற... வேண்டாம் கவிக்கு கூட நான் இங்கே இருப்பது தெரிய வேண்டாம்... என்று கெஞ்சினாள் அவள்...

இவள் இருக்குமிடம் தெரிந்தும் யாருக்கும் சொல்லாமல் அவர்களோடு சேர்ந்து அவளை தேடுவது என்பது ரொம்ப வருத்தமாகவும் குற்ற உணர்வாகவும் இருந்தது இவனுக்கு...

அதற்கு பின் அடிக்கடி யுக்தாவை பார்க்க ஊருக்கு வந்தான்... அப்போதெல்லாம் அவள் மனதை மாற்றும் முயற்சியையும் மேற்கொண்டான்... ஆனால் அவள் தான் பிடிவாதமாக இருந்தாள்... இங்கே வரும்போதெல்லாம் என்ன என்று கவி கேட்டபோது தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை என்று சமாளித்தான்....

அப்படி வரும்போதெல்லாம் யுக்தாவுக்கும்  இவனுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவானது... மனசை திறந்து எல்லாவற்றையும் இவனிடம் கூறவில்லையென்றாலும்... சில விஷயங்களை இவனிடம் பகிர்ந்து கொள்வாள்... இவனும் நட்பாக யுக்தாவிடம் பேசுவான்... அப்படி ஒருநாள் பேசும்போது தான் சங்கவி பற்றி கூறினாள் யுக்தா...

ஒருநாள் வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள் அப்போது...

"தேவா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னதுக்கு நீ நிஜமாவே வருத்தப்படலல்ல..."

"யுக்தா நிஜமாவே எனக்கு எந்த வருத்தமும் இல்லை... உண்மையா தான் சொல்றேன்..."

"இல்லை தேவா... அத்தை அடிக்கடி இந்த விஷயத்தை உன்கிட்ட பேசியிருப்பாங்க... அதை வச்சு நீ என்னை கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசைப்பட்றுக்கலாம் இல்ல... அதான் கேட்டேன்..."

"இல்லை யுக்தா... என்னதான் நமக்குள்ள உறவுமுறை இருந்தாலும்... நாம பேசிக்கிட்டதே கொஞ்சம் தான்... அதுக்கூட சங்கவி பேசச் சொல்லி தான் நான் பேசியிருக்கேன்... அதனால அம்மா சொன்னதுக்கு நான் சரின்னு சொன்னாலும்... மனசுக்குள்ள காதல் கனவுன்னு எதுவும் யோசிச்சதில்லை..."

"ஒருவேளை கவியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அத்தை சொல்லியிருந்தா...??"

"சரின்னு தான் சொல்லியிருப்பேன்... நான் அம்மாக்கிட்ட சொல்லியிருக்கேன் அவங்க பார்க்கிற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கறதா..."

"ஒருவேளை கவி உன்னை லவ் பண்ணான்னா...??" என்று யுக்தா கேட்டதும் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக பார்த்தான்...

"லவ் பண்ணான்னா என்ன அவ உன்னை லவ் பண்றா... அப்போ என்ன செய்வ...??"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.