(Reading time: 30 - 59 minutes)

துல எப்படி இவனுக்கு நீங்க ரெண்டுப்பேரு அத்தைப் பொண்ணுங்க இருக்கீங்களோ... அதுபோல இவருக்கு மாமாப் பொண்ணு இருந்தா.. எங்க அத்தைக்கோ அவங்க அண்ணன் பொண்ணுதான் மருமகளா வரனும்னு ஆசை... இவங்க குடும்பமே பொண்டாட்டிக்கு அடங்கி போறவங்கம்மா... என் புள்ள எப்படி அவன் பொண்டாட்டி பேச்சை கேக்கறானோ... இவரு எப்படி என்னோட பேச்சை கேக்கறாரோ... அதபோல எங்க மாமாவும் எங்க அத்தைப் பேச்ச தான் கேப்பாரு..." என்று பாட்டி சொல்லிக் கொண்டிருக்கும் போது...

இடையில் யுக்தாவோ... "என்ன தாத்தா.. பாட்டி உங்க குடும்பத்தை இப்படி சொல்றாங்க..." என்று கேட்டாள்.

அதற்கு தாத்தாவோ...  "பொண்டாட்டிக்கு சம உரிமை கொடுத்து வச்சிருந்தா... இப்படியெல்லாம் பேச்சு வரும்.. அதெல்லாம் கண்டுக்காதம்மா இதுல அவங்களுக்கு ஒரு சந்தோஷம் அதை ஏன் நாம கெடுக்கனும்..." என்றார்..

"ஆ போதும் போதும்.. எதுவும் தெரிஞ்சு வச்சுக்காம.. எல்லாம் பொண்டாட்டி பார்த்துப்பான்னு விட்டுட்டு... இப்போ சம  உரிமைன்னு பெருமை பேசறது.." என்று தாத்தாவை மொக்கை செய்துவிட்டு பேச்சை தொடர்ந்தார் பாட்டி...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

"எங்க மாமாவோ அத்தைப் பேச்சைக் கேட்டுக்கிட்டு அந்தப் பொண்ணுக்கும் இவருக்கும் பரிசம் போட கிளம்பிட்டாங்க... எங்கம்மாவுக்கு வருத்தம் இருந்தாலும் அதை காமிச்சுக்காம நிச்சயத்துக்கு கிளம்பனதும் இல்லாம என்னையும் கூப்பிட்டாங்க... நானும் மனசுல கஷ்டத்தோடு போனேன்...

என்னோட மனசுல என்ன இருக்குன்னு இவருக்கும் தெரியல... இவரோட அம்மா பேச்சையும் மீற முடியாம பரிசம் போட போன இடத்துல... அங்க என்னோட முகத்தை பார்த்தவருக்கு என்ன தோனுச்சோ தெரியல... நான் கற்பகத்தை தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டாரு... இவரோட மாமாவும் பிள்ளையோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க மாட்டீயான்னு தன்னோட தங்கையை திட்டினாரு...

அப்புறம் பெரியவங்க பேசி எங்க கல்யாணம் முடிஞ்சுது... பரிசம் போட போன இடத்துல உன் முகமே சரியில்ல... உன்னோட கண்ணு வேற லேசா கலங்கியிருந்துச்சு... எனக்கும் அந்த நிச்சயத்துல விருப்பம் இல்ல... அதான் பட்டுன்னு அங்கேயே உன்னை தான் கட்டிப்பேன்னு சொல்லிட்டேன்னு சொன்னப்போ... எனக்கு சந்தோஷமா இருந்துச்சும்மா... ஆனா இவரோட மாமா பொண்ணை நினைச்சு வருத்தமா இருக்கும்... ஊரறிய பரிசம் போட வந்து அது நின்னுப் போனா... அந்த பொண்ணுக்கு கல்யாணம் எப்படி நடக்கும்னு கவலைப்படுவேன்...

இவரும் என்ன சமாதானப்படுத்துவாரு... இருந்தாலும் மனசுல ஒரு உறுத்தலோட தான் வாழ்ந்தேன்... அப்புறம் அந்த பொண்ணுக்கு நல்லப்படியா கல்யாணம் ஆனதும் தான் மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு... கவியை பார்த்தாலும் எனக்கு அப்படிதான் தோனும்... சுயநலமா யோசிக்காதப் பொண்ணு அவ...

இங்கப்பாரு தேவா... நீ எங்கக்கிட்ட சொல்லுவியே... ஏன் இங்க ரெண்டுப்பேரும் தனியா கஷ்டப்பட்றீங்க அம்மா அப்பா கூட வந்து அங்க இருங்கன்னு... இப்போ சொல்றேன் தேவா... நீ கவியை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு வை... எங்களுக்கு முடியாத காலத்துல உன்கூட வந்து இருப்போம்டா... எங்களை கவி நல்லாப் பார்த்துப்பா... என்று பாட்டி தேவாவிடம் சொல்லிக் கொண்டிருக்க... அதை ஏதோ ஒரு ஏக்கத்தோடு பார்த்து நின்றுக் கொண்டிருந்தாள் யுக்தா...

அதைப் பார்த்த பாட்டியோ... "என்னடா அப்படி பார்க்குற... தாத்தாவும் பாட்டியும் கவிக்கூட மட்டும் தான் இருப்பாங்கன்னு பார்க்கிறியா... இங்கப் பாரு உன்னோட மாமனார் மாமியார் பத்தி கேள்விப்பட்ருக்கோம்... ரொம்ப தங்கமானவங்களாமே... தேவா கவிக்கூட இருக்க சென்னைக்கு வரப்போ உன்னோட வீட்டுக்கு வந்து தங்குவோம்... ஆளுக்கொரு கொள்ளு பேத்தியோ இல்லை பேரனோ பெத்து கொடுங்க நிரந்தரமா சென்னயிலேயே உன்னோட வீட்ல பத்து நாள்... இவங்க வீட்ல பத்து நாள்னு இருந்து பொழுதை கழிக்கிறோம்..." என்று சொன்னதும்... என்ன சொல்வதென்று தெரியாமல் யுக்தா அங்கிருந்து சென்றுவிட்டாள்...

"என்னப் பாட்டி அவ இப்ப இருக்குற நிலமையில... அவக்கிட்ட இப்படியெல்லாம் பேசறீங்க.." என்றான் தேவா.

"உனக்கு தெரியாதுடா... அவளுக்கும் அவ புருஷனோட சந்தோஷமா வாழனும்னு ஏக்கம் இருக்கு... அதான் நான் அப்படி சொன்னேன்... அவக்கூட பேசனப்போ ஏதோ சதி பண்ணி அவ புருஷனை கல்யாணம் செஞ்சுக்கிட்டதா சொன்னா... ஆனா எனக்கு அப்படி தோணலைடா... அவ அப்படியெல்லாம் செய்யற பொண்ணா தெரியல... கவலைப்படாத சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்.." என்றார் பாட்டி...

அன்றைக்கு  யுக்தா, பாட்டி பேசியதெல்லாம் நினைத்துக் கொண்டு தேவா நின்றிருக்க... அந்தப்பக்கம் திரும்பி நின்றுக் கொண்டிருந்த கவிக்கோ பின்னால் யாரோ நிற்பது போல் உணர திரும்பி பார்த்தாள்... அங்கு தேவா நின்றிருப்பதை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.