(Reading time: 30 - 59 minutes)

வளின் கோபத்தை தேவா ரசித்தான்... இப்போதெல்லாம் அவளின் ஒவ்வொரு செய்கையிலும் தன் மீது அவளுக்கு இருக்கும் காதலை உணர்கிறான் இவன்... இவன் மீது அவளுக்கு இருக்கும் அக்கறை... இதோ இப்போது இவனிடம் காட்டும் அவளின் கோபம் எல்லாம் அவனுக்கு பிடித்திருந்தது... இதுவரையில் இதையெல்லாம் அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டான்... உண்மையிலேயே சங்கவி தன் வாழ்க்கை துணையாய் வருவது அதிர்ஷ்டம் என்றே நினைத்தான் அவன்...

அவளை சமாதானப்படுத்த அவள் அருகில் சென்றவன்... "சங்கு நான் யுக்தாக்காக சப்போர்ட் பண்ணிட்டேன்னு உனக்கு கோபம் இருக்குன்னு புரியுது... நான் தான் அவளை இங்கே கூட்டிட்டு வந்தேன்..  பட்டுன்னு அவக்கிட்ட சென்னைக்கு போன்னு எப்படி சொல்ல முடியும்... நீ இன்னைக்கு வரலைன்னாலும் நானே அவக்கிட்ட பேசி... அவளை சென்னைக்கு கூட்டிக்கிட்டு வந்திருப்பேன்..." என்றதும்

"எப்போ இன்னும் ஒரு வருஷம் கழிச்சா..." என்று கேட்டாள் அவள்.

"என்ன சங்கு... யுக்தா இங்க இருக்கறதை பத்தி சொல்லாததுக்கும்... யுக்தாக்கு சப்போர்ட் பண்ணதுக்கும் ஸாரி..."

"நீ யுக்தாக்கு சப்போர்ட் பண்ணதுக்கு நான் கோச்சுக்கிட்டதா சொன்னேனா.."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"அப்ப கோபமா மேல வந்தது...??"

"அவ என்னை வெறுப்பேத்துனா இல்ல... அதுக்குதான்... நீ சம்யூ இங்க இருக்கறத பத்தி சொல்லலையேன்னு கோபம் இருந்தாலும்... அவளுக்கு ஹெல்ப் பண்ணி அவளை பாதுகாப்பா இங்க வச்சிருக்கியே  அதை நினைச்சு சந்தோஷமா இருக்கு தேவா...

அவ எங்க இருக்காளோ... என்னப் பண்றாளோ... சரியா சாப்ட்றாளா... அவ இருக்குற இடம் பாதுகாப்பானதா.... இப்படியெல்லாம் ரொம்ப கவலையா இருந்துச்சு... இப்போ தான் பெட்டரா ஃபீல் பண்றேன் தேவா... அதுவும் நான் உன்னை திட்டிக்கிட்டு இருக்க கூலா உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தாளே அதை பார்த்தப்போ... அவ கவலையெல்லாம் மறந்து இருக்கான்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு தேவா... எனக்கு தெரியும் தாத்தா பாட்டிக் கூட இருந்தா நல்லா தான் இருப்பா... அதுக்கு நான் உனக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் தேவா..

ஆனா அம்மா, சித்தப்பா, சித்தி எல்லாரையும் பத்தி யோசிச்சுப் பாரு.... அவங்க இவளை நினைச்சு ரொம்ப கவலையா இருக்காங்க... எப்போ இவளை பார்ப்போம்னு இருக்காங்க... அவங்களுக்கு தகவல் சொல்லாம இருக்கமுடியுமா..?? சம்யூ சந்தோஷமா இருக்கான்னா இன்னும் கொஞ்ச நாள் இங்க இருக்கறத பத்தி எனக்கு ஒன்னும் இல்ல...

எனக்கும் சம்யூக்கும் இது எங்களோட தாத்தா பாட்டி வீடு தான்... ஆனா பெரியவங்களுக்கு அப்படி இல்ல... அவங்கள பொறுத்தவரைக்கும் இது அவங்க பொண்ணை கொடுத்த சம்மந்தி வீடு.. இங்க குடும்ப விஷயம் பேச தயங்குவாங்க... ஒரு கல்யாணம் ஆன பொண்ணு இங்க தனியா தங்கி இருக்கறதை எல்லோரும் ஏற்கனவே கவனிச்சிருப்பாங்க... இப்போ எல்லோரும் வந்தா என்னவோ ஏதுன்னு நினைப்பாங்க... அதை விட லஷ்மி அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகும்... ஏற்கனவே சம்யூ பத்தி தப்பா பேசுவாங்க... அதனால தான் தேவா அவளை சென்னைக்கு வரச்சொல்ல சொல்றேன்..."

"புரியுது சங்கு.. ஆனா நீயே இதை அவக்கிட்ட சொல்லலாமில்ல... அவக்கிட்ட நான் கோபப்பட்டு பேசாம இருந்திருக்கக் கூடாது தேவான்னு எப்படியெல்லாம் ஃபீல் பண்ணி பேசுன... இப்போ என்ன வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறுது...??"

"வீட்டை விட்டு வெளியே வந்தவளுக்கு உன்கிட்ட ஹெல்ப் கேக்கனும்னு தோனுச்சு... ஆனா என் ஞாபகம் வரல இல்ல... நான் அவ மேல கோபத்துல இருந்தேன் தான்... அவளுக்கும் என்மேல கோபம் இருந்திருக்கலாம்... ரெண்டுப்பேர்ல யாரு முதல்ல பேசறதுன்னு தயக்கத்தோட இருந்திருக்கலாம்... ஆனா அந்த சமயத்துல என்னை தேடி அவ வந்திருந்தா நான் ஏன் என்கிட்ட வந்தேன்னு கேட்ருப்பேனா... ஒருவேளை நான் அப்படி கேட்டிருந்தா கூட... என்ன ரெண்டு அடி அடிச்சு நான் உன்கூட தான் இருப்பேன்... நீ என்ன கேக்கறதுன்னு சொல்ல தான் அவளுக்கு உரிமை இல்லையா...???

அவளை காணும்னு தெரிஞ்சப்ப நான் பட்ட வேதனையை வெறும் வார்த்தையால சொன்னா புரியாது தேவா... இதெல்லாம் அவளுக்கு புரிய வேண்டாமா..?? அதான் நான் பேசலன்னு வச்சிக்கோயேன்..."

"உங்களை சின்னதுல இருந்தே ஒன்னா தான் பார்த்திருக்கேன்... ஆனா நீங்க கூட சண்டை போட்டுப்பீங்கன்னு இப்போ தான் தெரியுது... "

"எந்த ஒரு ரிலேஷன்ஷிப்லேயும் எப்பவும் வெறும் அன்பு மட்டுமே இருந்தா போர் அடிக்கும்... சின்ன சின்ன சண்டைங்க இருந்தா தான் சுவாரசியமா இருக்கும்..."

"ஓ... ஹோ.." என்று தேவா சொன்னதும்... கவி சிரித்தாள்.

தேவாவிடம் கவியின் காதலைப் பற்றி சொன்னதே நான் தான்... தேவாவும் இப்போது கவியை காதலிக்க ஆரம்பித்த பின் இப்போது கவி தேவாவிடம் கோபித்துக் கொள்ள நானே காரணமாகிவிட்டேனே என்று வருத்தத்துடன் தேவா கவியை சமாதானப்படுத்தினானா என்று பார்க்க வந்த யுக்தா அவர்களின் உரையாடலை முழுதும் கேட்டாள்... அவளுக்கு அவள் கவியைப் பற்றி தெரியும்... இருந்தும் ஒரு பயத்தோடு வந்தவளுக்கு கவியின் பேச்சு சந்தோஷத்தை அளித்தது...

அவர்களின் உரையாடலில் இடை புகாமல் வீட்டிற்குள்ளும் செல்லாமல் படிக்கட்டு பக்கத்தில் உள்ள வழியாக வீட்டின் பின்புறம் சென்று அமர்ந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.