(Reading time: 30 - 59 minutes)

"ப்படி சங்கே சொன்னாளா..??"

"இல்லை அவ சொல்லல... ஆனா எனக்கு தெரியும்... அவ உன்னைப்பத்தி பேசறப்போ அவ கண்ணுல நான் காதலை பார்த்துருக்கேன்...

நானும் பிருத்விய லவ் பண்ணவ தான் தேவா... ஆனா பிருத்வியப் பத்தி நான் யார்க்கிட்டேயும் பேசினதில்ல... ஆனா பிருத்வி மேல இருக்க லவ் பத்தி நான் யார்க்கிட்டாயாவது ஷேர் பண்ணிக்கனும்னு நினைச்சிருக்கேன்... ஆனா அப்படி யார்க்கிட்டேயும் சொல்லவும் என்னால முடியல... அப்பல்லாம் கவி உன்னைப் பத்தி பேசும்போது எனக்கு அது நிச்சயம் காதல் தான்னு தெரிஞ்சுது...

ஆனா அவக்கிட்ட நேரா இதப்பத்தி நான் கேட்டதில்ல... அதுக்கு காரணம் நான் பிருத்வி பத்தி அவக்கிட்ட சொல்லலையேன்னு ஒரு குற்ற உணர்வு... அப்புறம் அவளா இதப்பத்தி சொல்லுவான்னு நினைச்சேன்.... அதுவரைக்கும் நம்மளா அவக்கிட்ட கேக்க வேண்டாம்னு நினைச்சேன்...

ஆனா ஏனோ இதப்பத்தி அவ சொல்லவேயில்ல... சரி இந்தியா வந்ததும் இதப்பத்தி கேக்கலாம்னு விட்டுட்டேன்... ஆனா இங்க வந்ததும் தான் விஷயமே தெரிஞ்சுது... இதுல தேவாவை ஏன் வேண்டாம்னு சொன்னன்னு என் மேல வேற மேடம்க்கு கோபம்... அப்போ தான் ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட அவ ஷேர் பண்ணிக்கிலன்னு தெரிஞ்சுது...

அதப்பத்தி அவக்கிட்ட அப்புறமா பேசனும்னு நினைச்சேன்... ஆனா அதுக்குள்ள என்னோட லைஃப்ல ஏதேதோ நடந்து இப்போ நாங்க பேசிக்கிறதுமில்ல... அதான் இதப்பத்தி உன்கிட்டயாவது பேசனும்னு நினைச்சேன் தேவா...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

கண்டிப்பா அவ உன்னை லவ் பண்றா... இது எனக்கு கன்பார்மா தெரியும்... ஆரம்பத்துல இருந்தே உன்னையும் கவியையும் சேர்த்து ஜோடியா தான் நினைச்சுப் பார்த்திருக்கேன்... ஒருவேளை நான் பிருத்விய காதலிக்காம இருந்திருந்தா கூட நான் உன்னை வேண்டாம்னு தான் சொல்லியிருப்பேன்... ஏன்னா நீ கவிக்குன்னு தான் என்னோட மனசு நினைக்கும்..." என்று இவள் கவியின் காதல் பற்றி பேசிக்கொண்டிருந்த போது... அங்கே வந்த தாத்தா பாட்டியும்..

"ஆமாண்டா யுக்தா சொன்னது உண்மை தான்... எங்களுக்கும் கவி உன்னை விரும்புறாளோன்னு அப்பப்ப தோணும்.." என்றனர்.

"என்ன பாட்டி சொல்றீங்க... நிஜமாவா..??" என்றான் தேவா... யுக்தாவும் வியப்பாக பார்த்தாள்..

"ஆமாண்டா நிஜம்தான்... நாங்க கவிக்கிட்ட பேசும்போதெல்லாம் முக்காவாசி பேச்சு உன்னைப்பத்தி தான் இருக்கும்... எங்க ரெண்டுப்பேருக்கும் கவி உன்னை விரும்புறான்னு தோணும்... ஆனா உங்கம்மா உனக்கும் யுக்தாவுக்கும் கல்யாணம் பண்ணனும்னு சொல்லுவா... அவளை மீறி நாங்க பேச முடியுமா..?? நீயும் உங்க அம்மா பார்க்கிற பொண்ணை கல்யாணம் செஞ்சுப்பன்னு சொல்லிட்ட... நாங்களும் அமைதியாயிட்டோம்...

அப்பத்தான் யுக்தாக்கிட்ட உங்கம்மா கல்யாணத்துக்கு சம்மதம் கேட்டு அவ வேண்டாம்னு சொன்னதும்... கவிப்பத்தி உன்கிட்ட பேசனும்னு நினைச்சிக்கிட்டு இருந்தோம்... ஆனா அதுக்குள்ள யுக்தாவே உன்கிட்ட சொல்லிட்டா... அக்கா தங்கச்சி ரெண்டுபேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க... இவளுக்காக அவ காதலையே மனசுக்குள்ள மறைச்சு வச்சிக்கிட்டான்னா.. இவளோ அவ சொல்லாமலேயே அவ மனசை புரிஞ்சு வச்சிருக்கா...

எனக்கு கவியை பார்க்கறப்போ சின்ன வயசுல என்னை பார்க்கிற மாதிரி தோனும்... ஆனா நீ உன்னோட தாத்தா பேரையே வச்சிருக்க தேவசேனன்னு ஆனா அவரை மாதிரி எங்க இருக்க... உன்னோட அப்பா மாதிரி தத்தியா இருக்க..." என்று பாட்டி சொன்னதும்..

"என்ன பாட்டி அப்படி சொல்றீங்க..." என்றான் தேவா.

"பின்னே என்னடா... அப்பவே உங்க தாத்தா என்னோட கண்ணைப் பார்த்தே என்னோட மனசுல இருக்கறத தெரிஞ்சு.. என்னை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொன்னவரு.. ஆனா நீ எங்கே அப்படி இருக்க... கவி மனசுல என்ன இருக்குன்னு கூட உனக்கு தெரியல.." என்று பாட்டி சொன்னதும்...

"என்னப் பாட்டி உங்களோடது லவ் மேரேஜா...?? சொல்லவேயில்ல.." என்று கேட்டாள் யுக்தா...

"காதல் கல்யாணமெல்லாம் இல்லம்மா... எனக்கு இவரு மாமா பையன்... எங்கம்மாக்கும் எங்க மாமாக்கும் எங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கனும்னு ஆசை... அத கேட்டு நாங்களும் மனசுலேயே ஆசையை வளர்த்துக்கிட்டோம்... ஆனா வெளிய சொல்லிக்கில...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.