(Reading time: 11 - 22 minutes)

தில் பேசாமல் அந்த குரலுக்கு கட்டுப்பட்டு சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்தான். கண்களை மூடி ஒரு ஆழமான சுவாசம் எடுத்துக்கொண்டவனுக்குள் சட்டென  ஏதோ நிகழ்வது போல் இருந்தது. அந்த மேஜை மேலிருந்த ரோஜாப்பூக்களின் வாசம் அவனது சுவாசத்தில் உள்ளுக்குள் இறங்க திடுக்கென கண் திறந்தான். அவனது பார்வை அந்த பூக்களின் மேல் விழ...

'சாரி... சாரிண்ணா... நான் எடுத்திடறேன் அதை...' என்றபடி ஷிவா அவன் அருகில் ஓடி வர...

மேஜையில் அமர்ந்திருந்தவனின் பார்வை நேராக ரஞ்சனியை அடைந்தது. மெல்ல பார்வையை திருப்பிக்கொண்டாள் அவள். ஏதோ புரிந்தது போலே இருந்தது அவனுக்கு.

ஷிவா அருகே வந்து அந்த பூக்களை எடுக்க முயல ,அதற்குள் அவற்றை கொத்தாக கையில் எடுத்தான் இவன். சில நிமிடங்கள் அவற்றையே பார்த்திருந்தான். வார்த்தையில் விவரிக்க முடியாத ஏதேதோ உணர்வு போராட்டங்கள் அவனுக்குள்ளே. மறுபடியும் அந்த பூக்களை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு எழுந்து விட்டான்

'நான் கிளம்பறேன்மா...' சுமித்ராவை பார்த்து சொல்லி விட்டு அவன் நகர

'டேய்.. சின்ன குழந்தையா நீ... இதுக்கெல்லாம் போய்... அம்மா சொல்றேன்ல சாப்பிட்டு போ...' அவனை தடுக்க முயன்றார் சுமித்ரா.

'மா... இப்போ இருக்கிற மனநிலையிலே என்னாலே சாப்பிட முடியும்னு நீங்க நிஜமாவே நினைக்கறீங்களா???' சுமித்ராவின் கண்களை நேராக பார்த்து அவன் கேட்க... பதிலில்லை அவரிடம்.

கொஞ்சம் தடுமாறி சுதாரித்து 'டேய்... எனக்காக சாப்பிட்டு போடா.. மறுபடியும் நீ திரும்ப வர எத்தனை நாள் ஆகுமோ. நீ எங்கே இருக்கியோ எப்படி இருக்கியோ தினமும் பயமா இருக்குடா.. இந்த வேலையை விடுன்னாலும் நீ கேட்க மாட்டேங்கறே..' என்றார் அவர்.

சின்ன சிரிப்புடன் இடம் வலமாக தலை அசைத்தான். 'என் வேலைதான் இப்போ எனக்கு எல்லாம். அதை விட முடியாது. கருங்கல்மா நான். எனக்கு ஒண்ணும் ஆகாது. நீங்க கவலை படாதீங்க. அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா உங்க கையாலே சாப்பிடறேன். வரட்டுமா ...' சொல்லிவிட்டு யார் பதிலுக்கும் நிற்காமல் தனது பெட்டியை இழுத்துக்கொண்டு நடந்தான் அவன்.

அவனை பற்றிதான் எல்லாருக்கும் தெரியுமே!!! இனி நிற்க மாட்டான் அங்கே. அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர் அம்மாவும் அப்பாவும்.

அவன் சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த போது நேரம் பத்தரையை தாண்டிக்கொண்டிருந்தது.

'அது ஏன்??? அது எப்படி??? அவனுக்கே புரிவதில்லை. விமான நிலையத்துக்குள் நுழைந்ததும் எங்கிருந்து வருகிறதாம் அவனுக்கு இப்படி ஒரு உற்சாகம்???

'ஹாய்... குட்.. மார்னிங்... ஸோ.. வேர் யூ ஆர் ஆஃப் டூ???' கேட்டுக்கொண்டே நடக்கும் அவனது பளீர் சிரிப்பு அங்கே இருக்கும் அவனது சக ஊழியர்களிடமும் தொற்றிக்கொள்ளும்.

அங்கே இருந்த கணினியில் செக் இன் செய்தபடியே 'சும்னே மாத்தாடுத்தா இத்ரே ஏனு ஆக்ல்லா. மதுவே மாடுக்கொள் மகா.........

அங்கே நின்றுக்கொண்டு ஒரு பெண்ணுடன் கன்னடத்தில் பேசிக்கொண்டிருந்த ஒரு விமானியை, அந்த பெண்ணை  திருமணம் செய்துக்கொள்ள சொல்லி சீண்டினான் இவன். இந்த வேலையில் இருப்பதில் இன்னொரு நன்மை எல்லா மொழிகளும் அவனுக்கு அத்துபடி

'அய்யோ.. அப்படி எல்லாம் இல்லை சார்... நான் சும்மாதான் பேசிட்டிருந்தேன்..' அவன் பதறி தமிழுக்கு மாற ,

அழகாக மலர்ந்து சிரித்து 'ஏன்யா பயப்படுறே...' என்று அவன் தோளை தட்டிவிட்டு, தனது பயண திட்டத்தை ப்ரின்ட் அவுட் எடுத்தான் அவன்!!!!.

'6 லெக்ஸ்... நாட் பேட்...' மகிழ்ச்சியான முறுவல் அவனிடத்தில்!!! அடுத்த 15 மணி நேரத்தில் ஆறு விமானங்கள்!!!

அடுத்த சில நிமிடங்களுக்கு தன்னுடன் வரப்போகும் கேபின் உறுப்பினர்களுடன் சேர்ந்து விமானத்தை, பயண திட்டங்களை, வானிலையை என எல்லாவற்றையும் சரி பார்க்கும் பணிகள்.

அதன் பிறகு விமானத்தில் பயணிகள் ஏறிக்கொள்ள, வந்தது எப்போது வருமென அவன் எப்போதும். அவன் காத்திருக்கும் அந்த நிமிடம்.

விமானத்தில் ஏறினான் அவன். காக்பிட்டில் சென்று அமர்ந்தான் தனது சிம்மாசனத்தில். அந்த காக்பிட்டே அவனது அரசவை என எப்போதும் தோன்றும் அவனுக்கு. அவனது இந்த பயணம் டெல்லியை நோக்கி.

அவனது பல சக விமானிகள் புலம்புவார்கள் பல நேரங்களில்.....

'கொல்றானுங்க... எத்தனை மணி நேரம்டா இந்த காக்பிட்லேயே கிடக்குறது.???'

ஆனால் இவனை பொறுத்தவரை இவன் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதே நடுவானில் இருக்கும் போது தானே!!!!

ஒரு மகிழ்ச்சியான ஆழமான சுவாசத்துடன் மைக்கில் அறிவிக்க துவங்கினான் இவன்.

'குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்... திஸ் இஸ் யுவர் கேப்டன் 'விவேக் ஸ்ரீனிவாசன்'. ப்ளீஸ் ஃபாசென் யுவர் சீட் பெல்ட்ஸ் ..... இட்ஸ் டைம் ஃபார் டேக் ஆஃப்...'

அடுத்த சில நிமிடங்களில் ஓடு பாதையில் வேகமெடுத்தது விமானம்.

'வி1..' அருகில் வேகத்தை கண்காணித்து கொண்டிருக்கும் துணை விமானியிடமிருந்து அவனுக்கு அறிவிப்பு வர...  விமானம் இன்னும் கொஞ்சம் வேகமெடுக்க....

'ரொடேட்....' அறிவிப்பு வர... விவேக் எலிவேடரை இயக்க ..... மேலே எழும்ப ஆரம்பித்தது விமானம்....  உற்சாகத்தில் பொங்கி எழும் அவனது மனதை உள்ளத்தை போல...மேலே எழும்பியது அது!!!!  ' மேலே.......... மேலே......மேலே....

தொடரும்......

Episode # 02

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.