(Reading time: 14 - 28 minutes)

ஞ்சய் சாப்பிட்டபடி, “சூப்பர் மா… கலக்கிட்டீங்க… ம்ம்ம்ம்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு” என்று பனியாரத்தை சுவைத்தான்.  அவன் ருசிப்பதை ரசித்துக்கொண்டிருந்த வடிவு தட்டிலிருந்த பனியாரம் முடியவும் பாசத்தோடு இன்னும் இரண்டு பனியாரத்தை வைத்தார்.

“இன்னும் இரண்டு சாப்பிடு டா கண்ணா! உனக்காக மட்டும் தான் இதை சமைச்சது.”

“உங்க பாசம் தாங்கலை! எனக்கும் பனியாரம் பிடிக்கும்.  ஆனாலும் அவனுக்குமட்டும் தான் கொடுக்கிறீங்க, நல்லா சாப்பிட்டிட்டு என்னை விரட்டுறதுக்கா?” என்று அவன் முதுகில் ஓங்கி அடித்தாள் மைத்ரீ.

“உனக்கு என்னடி வந்தது பிசாசே? எனக்கு எங்க அம்மாவை பிடிக்கும் எங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும்.  நான் உன்னை மாதிரி பகாசூரன் இல்லை, எல்லாத்தையும் சாப்பிட்டு முடிச்சிடறதுக்கு.  அம்மா உன்னையும் மனசுல வச்சு தான் நிறையவே சமைச்சிருக்காங்க.  நீயும் சாப்பிட்டுட்டு கிளம்பு.  நான் காலேஜ் போகனும், உன்னை மாதிரி டைம் வேஸ்ட் பண்ண முடியாது” என்று அவளை சீண்டினான்.

“இவ்வளவு நேரம் என்னை ஓடவிட்டுட்டு, இப்போ உனக்கு டைம் இல்லையா? எல்லாம் காலக் கொடுமை!” சலித்துக்கொண்டாள் மைத்ரீ.

“மைத்ரீ, காலையிலேயே அவனை வம்பிழுக்கலைனா உனக்கு நாளே தொடங்காதே! சமத்தா சாப்பிட்டுட்டு காலேஜுக்கு கிளம்பு” என்றார் வடிவு.

“அப்படி சொல்லுங்க என் ஆசை அம்மா!” என்று ஜெய் வடிவின் கழுத்தை பின்னிருந்து கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினான்.

அப்போது சாப்பிட வந்த ஆதர்ஷைப் பார்த்த மைத்ரீ, “சீக்கிரம் வா அண்ணா! இல்லைனா, ஒரு குரங்கு அம்மா கழுத்தை கட்டியிருக்க அழகை மிஸ் பண்ணிடுவ”

“என்னடி சொன்ன? என் பிள்ளை உனக்கு குரங்கா?” என்று அவளை அடிக்க வடிவு எத்தனிக்க அவள் தப்பித்து ஓடினாள்.

“நீ என்னைக்கும் எனக்கு ராஜா தான் ஜெய்” என்று நெட்டி முறித்தார்.

“இது ஒன்னும் புதுசில்லையே, விடுங்கம்மா! இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டாமலிருந்தால் தான் அதிசயம்” என்றபடி சாப்பிட அமர்ந்தான் ஆதர்ஷ்.

“எங்களை சரியா புரிஞ்சிட்டிருக்க மச்சா!” என்று புன்னகைத்தான் ஜெய்.

ஆதர்ஷ் சாப்பிட்டு முடித்ததும் “அம்மா நான் கிளப்புறேன்” என்றபடி வாசலை நோக்கி நடந்தான்.

“மச்சா! நானும் வரேன். என்னை பஸ் ஸ்டாப்பில் விட்டிடு” என்றான் ஜெய்.

“என்னது பஸ்ல போறியா? உன்னோடு கார் என்னாச்சு ஜெய்?”

“கார் நல்லாதான் இருக்கு.  நான் தான் பஸ்ல போலாம்னு நினைச்சேன்”

“என்னடா இது! தக்காளி செடியில முருங்கைக்காய் காய்க்குதே.  இவனாவது பஸ்ல போறதாவது?” என்றெண்ணியபடி தன் பையினில் மதிய உணவு டப்பாவை திணித்து கொண்டிருந்தாள் மைத்ரீ.

“இதெல்லாம் சரிபடாது ஜெய்.  உன்னோட கார்ல போக விருப்பமில்லைனா நான் உன்னை காலேஜ்ல விடட்டுமா?” என்றான் ஆதர்ஷ்.

“இதுவரைக்கும் மைத்ரீ என்னோடவே இருந்தா.  ஆனால் இப்போ நான் தனியா தான் போகனும்.  பஸ்ல போனா அங்க வர பசங்க ஈஸியா பழகுவாங்க. கார்ல போனா சாதாரணமான பசங்க என்னோட பழகமாட்டாங்க.  இதனால தான் ஒரு நாளாவது காலேஜுக்கு பஸ்ல போகலாம்னு நினச்சேன்.” என்று வருந்தினான்.

“இப்போ எதுக்கு வயலின் வாசிக்குற?  நீ நினைத்த மாதிரி பஸ்ல போறதும் சரிதான்.  நானே உன்னை பஸ் ஸ்டாப்பில் விடுறேன்”

“தேங்க்ஸ் மச்சா” என்ற ஜெய் ஆதர்ஷோடு சேர்ந்து நடந்தான்.

“உன்னை ட்ராப் பண்ண ஆள் கிடைத்த உடனே என்னை மறந்திட்டியேடா எரும?” என்று அவனை நிறுத்தினாள் மைத்ரீ.

“ஹி ஹி ஹி! உங்க நட்பை எங்களுக்கு நல்லாவே தெரியும்.  எதுக்காக இப்போ சீன் போடற?” என்றான் ஆதர்ஷ்.

“ஆதர்ஷ்! இதில் நீ தலையிடாதே”

“நீ என் காலில் விழுந்து கேட்டினாலும் உங்க விளையாட்டில் நான் தலையிடமாட்டேன்.  அதுக்கெல்லாம் நேரமில்லை எனக்கு.  நிறைய வேலையிருக்கு.  சீக்கிரம் வா ஜெய்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் ஆதர்ஷ்.  

“நீயும் எங்கூடவே இன்ஜினியிரிங் சேர்ந்திருந்தா இப்படி வருத்த படாமல் இருந்திருக்கலாம்”.

“ரொம்பதான் ஆசைடா உனக்கு.  ஏன் நீ எம்.ப்.பி.எஸ் சேர்ந்திருக்கலாமே?”

பதிலேதும் சொல்லாமல் ஜெய் அசடு வழிந்தான்.

“பார்க்க சகிக்கலை… சரி அதை விடு. என்ன மேட்டர்? எதுக்காக பஸ்ல போற ஜெய்?”

“ஆதர்ஷ்ட்ட சொன்னேனே, நீ கேட்கலையா?”

“நான் என்ன அவனை மாதிரி லூசா? நீ என்ன சொன்னாலும் நம்பறதுக்கு”.

‘மைத்ரீ கண்டுபிடிச்சிட்டா.  இப்போ நான் என்ன சொன்னாலும் நம்பமாட்டாள்.  சரணடைந்திட வேண்டியதுதான் ஒரே வழி’ என்று ஜெய் யோசித்திக் கொண்டிருந்தபோதே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.