(Reading time: 14 - 28 minutes)

ல் தி பெஸ்ட் ஜெய்! ஈவ்னிங்க் பார்க்கலாம்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் ஆதர்ஷ்.

எந்த குருட்டு நம்பிக்கையில் இங்க வந்து நிக்கிற ஜெய்? அவளை இங்க பார்க்க முடியும்னு நீ எப்படி நினைக்கலாம்? அப்படியே அவள் வந்தாலும் இந்த பீக் அவர்ல உன்னோட ரொமான்ஸ் சீனுக்கு இடமே இருக்காதே? என்று அவனிடம் கேள்விகளை அடுக்கியது அவனது மனம்.  உனக்கு என்ன தெரியும்? அவளை பார்க்க தானே இவ்வளவு ப்ளேன் செய்து அவள் சேர்ந்த அதே காலேஜுல சேர்ந்ததே.  அதிருக்கட்டும்! இப்போ நான் ரொமான்ஸ் பண்ண வந்தேன்னு யாரு சொன்னது? அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் போகனும்னு உனக்கே தெரியாதா? இரண்டு பேரும் ஒரே இடத்திலிருந்து வரவங்கறதால எங்கிட்ட அவள் பேசுவா… அதனால… என்று அவன் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட அவன் மனது ஹி ஹி ஹி! நீ சொல்லறதை நான் நம்பனுமா? உனக்கே இது உலக மகா நடிப்பா தெரியல?... என்றது.  சரி விடு நான் தான் அவளிட்ட பேச ஒரு சான்ஸ் கிடைக்கும்னு இங்க வந்தேன். போதுமா?! என்று தன் மனதிடம் சரண்டரானான் ஜெய்.  அது அந்த பயமிருக்கட்டும்.  நான் ஒன்னும் மைத்ரீ இல்லை உன்னை நம்பறதுக்கு, உனக்குள்ளே தான் இருக்கேன் என்பதை மறந்திடாதே என்று அவன் எண்ணத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியைப் பெருமையாக தெரிவித்தது அவனது மனம்.

ஜெய், தன் மனதின் கேள்விக்கணைகளுக்கு சலியாமல் பதில் சொல்லிக்கொண்டிருந்த வேளையில், தண்ணீருக்காக ஏங்கி கிடந்த வறண்ட நிலத்தில் விழுந்த முதல் மழைத்துளியாய் அவளின் வருகை அவன் நெஞ்சத்தை நனைத்தது.  மழைக்கும் மண்ணுக்குமான பந்தம் அவைகளின் சங்கமத்தினால் வெளிபடும் மண்வாசனை.  அவன் நெஞ்சமானது காதல் வாசத்தை வெளியிட்டது.  காதல் வாசத்தில் கட்டுண்டவன் தன்னையும் மறந்து அவளைப் பார்த்திருந்தான்.  இவ்வளவு நேரமாக அவனை கேலிப்பேசிய மனது இப்போது அவனோடு சேர்ந்து அவளை தன்னோடு சேர்த்து தைப்பதில் முனைந்திருந்தது.

இங்கு நடக்கும் எதையும் அறியாத அவளோ பஸ் வரவும் அதன் முன்கதவின் வழியாக ஏறினாள்.  அவள் பஸ்ஸினுள் எறி மறையவும் உணர்வு வந்தவனாக ஜெய் ஓடிச் சென்று பஸ்ஸின் பின் கதவின் வழியாக ஏறினான்.  ஜெய்யிற்கு உட்கார இடம் கிடைத்தது.  அவளோ நின்றிருந்தாள்.  பெங்களூருவின் பஸ்களின் முன்பகுதியில் உள்ள சீட்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டவை.  அப்படி பெண்களுக்காகவே இருக்கும் சீட்டுகளில் ஆண்கள் உட்கார்ந்தால் தண்டம் (ஃபைன்) செலுத்த வேண்டும்.  பின்னே இருக்கும் சீட்டுகளில் ஆண் பெண் என இருபாலரும் அமரலாம்.  ஆனால் பெண்கள் பின்னிருக்கும் சீட்டுகள் காலியாக இருந்தாலும் அதில் அமருவதென்பது மிகவும் அரிதானது.  தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சீட்டுகள் காலியாக இல்லையென்றால் பஸ்ஸின் முன் பகுதியில் நின்று கொள்வார்கள்.  அதேபோல் ஆண்களும் பின் பகுதியின் சீட்டுகள் காலியாக இல்லையென்றால் பின்பகுதியிலேயே நின்றுகொள்வார்கள்.  இதனால் ஆண்கள் பெண்களை உரசுவது போன்ற எந்த குழப்பும் ஏற்படுவதில்லை.  இவ்வழக்கம் எல்லோராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.  ஊருக்கு புதிதாக வந்த ஆண்கள் பஸ்ஸின் முன்பகுதியில் நின்றிருந்தால் நடத்துனர் அவரை பின்பகுதிக்கு அனுப்பி வைப்பார். 

அவள் நின்றிருட்டிருக்காளே? என்ன செய்றது இந்த பஸ்ஸில இவளுக்குனு ஒரு சீட்டு கூட இல்லை.  என்னோட வந்தாள்னா கார்ல அப்படியே இளவரசி போல அழைச்சிட்டு போவேன்.  நீ வருத்தபட்டதெல்லாம் போதும்.  எது நடந்தாலும் அது நன்மைக்கே.  அவளை சைட் அடிக்க உனக்கு கிடைச்ச இந்த நல்ல சான்ஸை மிஸ் செய்யாதே என்று அவனது மனம் அவனுக்கு இலவச அறிவுரை வழங்கியது.  நீ சொல்லறதும் சரி தான்.  இப்போ என்னால் வேறெதுவும் செய்யவும் முடியாது என்று தன் மனம் சொன்னதை செயலக்கினான்.

அந்நேரம் பளாரென்று அவள் அங்கிருந்த ஒருவன் கன்னத்தில் அறைந்தாள்.  அவளை சைட் அடிப்பதில் ஈடுபட்டிருந்த ஜெய்யிற்கு அவள் ஏன் அறைந்தாள் என்று புரியவில்லை.  அறை வாங்கியவன் எதுவுமே பேசாது நின்றிருந்தான்.  பின்புறம் சீட்டுகள் காலியாக இல்லாதாதால் சற்று முன் பஸ்ஸில் ஏறியவன் நடத்துனர் பின்னே போக சொல்லியும் போகாது கதவின் அருகேயே நின்றிருந்தான்.  கதவின் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்ணின் துப்பட்டா சற்று விலகியிருந்ததையே பார்த்தபடி நின்றிருந்தான்.  இதை சிறிது நேரம் கவனித்தவள் அவனை ஓங்கி அறைந்து “எவ்வளவு கட்டுப்பாடுகள் அரசாங்கம் விதித்து மக்களுக்கு நல்லது பண்ணினாலும் நாம் தப்பான வழியில் செல்லாமல் சுய கட்டுப்பாட்டோடு இருக்கும்போது தான் நாட்டிலிருக்கும் எல்லா பிரச்சனையும் சரியாகும்” என்று பொதுவாக கன்னடத்தினில் கூறினாள்.  என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் ஓரளவுக்குப் புரிய அவனுக்கு அவமானமாக போனது. ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கிவிட்டான்.

யாரோ ஒரு பெண்ணுக்காகவே இப்படி அறைஞ்சா நீ அவளை சைட் அடிச்சது தெரிந்தால் உனக்கு எப்படி விழும் அறை? என்ஜாய் என்றது ஜெய்யின் மனம்.  என்னை சைட் அடிக்கவும் சொல்லிட்டு இப்போ அறையும் வாங்கி தரலாம்னு இருக்கியா? உன் பேச்சை நான் கேட்கமாட்டேன்.  இனிமேல் நான் நல்ல பிள்ளையா இருக்க போறேன்.  என்னதான் அவளைப் பார்க்க கூடாது என்று நினைத்தாலும் அவன் கண்கள் அவளையே சரணடைந்தன.

சஞ்சய் அவனுடைய முத்தை கண்டுபிடித்துவிட்டானா?  அந்த முத்து இவனின் சிப்பிக்குள் பொருந்துமா??..

முத்து ஒளிரும்…

Episode 01

Episode 03

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.