(Reading time: 14 - 28 minutes)

ன்ன புது கதை சொல்லாம்னு யோசிக்கிறியா?  ‘பாம்பின் கால் பாம்பறியும்’  உன்னை நான் அறிவேன்” என்று தன் பழமொழி திறமையைக் காட்டினாள்.

“ஹி ஹி ஹி… நீ என்னோட மைதியாச்சே, கண்டுபிடிச்சிட்டியே”

“போதும் ஐஸ் வச்சது.  விஷயத்தை சொல்லு நேரமாகுது.  நீ சீக்கிரமா போகலைனா ஆதர்ஷ் என்னை தான் திட்டுவான்” என்று தன் ஆர்வத்தை கட்டுபடுத்த முடியாமல் பழியை அண்ணனின் மீது சுமத்தினாள்.  அதுவே உண்மையும் கூட.

“இப்பவே சொல்ற அளவுக்கு சின்ன கதையில்லை.  இப்போ காலேஜுக்கு போவோம்.  சாயங்காலம் பேசலாம்”.

“இல்லை ஜெய்.  இப்போவே சொல்லு”

“ஜெய் எனக்கு நேரமாகுது.  சீக்கிரமா வா” என்று வாசலிலிருந்தபடி உரக்க அழைத்தான் ஆதர்ஷ்.

இதுதான் சமயமென்று மைத்ரீயிடமிருந்து நழுவினான் ஜெய்.

“தப்பிச்சா போற? சாயங்காலம் மாட்டுவல்ல அப்போ இதெல்லாம் செல்லாது”.

“ஆல் தி பெஸ்ட் மைதி. பை” என்று தன் வலக்கையை உயர்த்தி ஆட்டியபடியே சென்று ஆதர்ஷின் காரினுள் ஏறினான்.

“பரவாயில்லையே ஜெய்! இன்னைக்கே வந்துட்டே.  நாளைக்கு தான் வருவியோன்னு நினைச்சேன்” என்று கேலிப் புன்னகையை உந்திர்த்தான் ஆதர்ஷ்.

“உன்னை காரணங்காட்டி தான் சீக்கிரம் வந்தேன் மச்சா”.

ஜெய்யின் போன் சிணுங்கவும் ஆதரஷ், ”யாரு? மைத்ரீதானே?”

“சரியா சொல்லிட்ட மச்சா! அவளே தான்” என்றபடி போனில் பேச ஆரம்பித்தான்.

“ஹலோ! சொல்லு மைதி”

“என்னத்த சொல்ல? ஆல் தி பெஸ்ட்ன்னு நான் இங்கொருத்தி சத்தமா சொல்லிட்டிருக்கும்போதே உனக்கென்ன வந்ததுன்னு கிளம்பி போயிட்ட” என்று குறைப்பட்டாள்.

“சாரி! அவசரமா வந்ததால கவனிக்கலை.  இப்போ சொல்லு நிதானமா கேட்கிறேன்”.

“போடா எரும! அப்படியெல்லாம் சுலபமா சொல்லிட முடியாது.  இப்போ சொன்னேன்னா எனக்கு என்ன கிடைக்கும்?”

“எதுவுமில்லை”

“எதுவுமில்லையா? சரி கொரங்கே.  காலேஜ் முதல் நாள் ஸ்பெஷல் உன்னோட பையிலிருக்கு.. எடுத்து பாரு”

“அதையே தான் உனக்கு நானும் சொல்லுறேன்”

‘இவன் என்ன லூசா? நான் சொன்னதையே திரும்ப சொல்றான்’ என்று யோசிக்க, சட்டென உரைத்தது அவளுக்கு ஜெய் தனக்காக ஏதோ வைத்திருக்கிறான் என்பது.

“அப்படியே லைன்ல இரு” என்று அவனுக்கு சொல்லிவிட்டு தன் பையை துழாவினாள்.  கைக்கு கிடைத்தது ஒரு நீல நிற பார்க்கர் பேனா.  அதை பார்த்தவளுடைய கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.  இலவச இணைப்பாக புன்னகையும் அவளின் உதடுகளில் குடிகொண்டன.  அதே சமயம் தனது பையை துழாவிய ஜெய்யிற்க்கும் நீல நிற பார்க்கர் பேனா கிடைத்தது.  இந்த பேனாவும் அவன் மைத்ரீக்கு கொடுத்த பேனாவும் ஒரே மாதிரியானவை எனத் தெரிந்து போனில் ஆச்சரியத்தை வெளிபடுத்திய நேரம் அவளும் அதையே சொன்னாள்.

ஜெய், “எப்படி அதே பேனா?”

“எப்படிடா அதே பேனா?” என்று மைத்ரீயும் ஒரே நேரத்தில் கேட்க இருவரும் சிரித்தனர்.

“எங்க இருக்க நீ? முதல் நாளே காலேஜுக்கு லேட்டா போக மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப என்ன பண்ணிட்டிருக்க?”

“இதோ அப்பா வந்திட்டார்.  நாம் சாயங்காலம் பேசலாம்.  பை ஃபார் நௌ”

“பை மைதி” என்று போனை கட் செய்தவன் ஆதர்ஷை பார்த்து ஒரு புன்சிரிப்போடு

“எப்படியிருக்கு? இது மைத்ரீயோட கிஃப்ட்” என்று அவள் கொடுத்த பேனாவை மிகவும் பெருமையாகக் காண்பித்தான்.

“நீ பேசினதை நான் கேட்டிட்டுதானே இருந்தேன்.  உங்க ஃப்ரெண்ட்ஷிப்பை பார்த்து நிறைய முறை வியந்திருக்கேன்.  ஆனால் இன்னைக்கு பொறாமையா இருக்கு ஜெய்.  ஃப்ரெண்ட்ஸ்னா ஒரே மாதிரி யோசிக்க கூட முடியுமா?! இப்படி ஒரே மாதிரியான பொருளை ஒரே சமயத்தில் கிஃப்ட் பண்ணிக்கிறீங்க.  எனக்கு இப்படி ஒரு ஃப்ரெண்டு இல்லைனாலும் உங்களை நான் பக்கத்திலிருந்து பார்க்கிறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.  வாழ்க்கையில் நீங்க எப்போதுமே உங்களோட கிரேட் ஃப்ரெண்ஷிப்பை யாருக்காகவும் விட்டு கொடுக்கக்கூடாது”

“நிச்சயமா மச்சா… யாருக்காவும் மைத்ரீயை விட்டுகொடுக்க மாட்டேன்.  அவள் எனக்கு ஃப்ரெண்டா மட்டுமில்லாம எல்லா கஷ்டத்திலும் மாரல் சுப்போர்ட்டா இருந்திருக்கா…. அதேபோல் எப்போவுமே இருப்பான்னு நம்புறேன்”.   

காலமோ அவர்களின் நட்பை ஜெய்யின் செயலை கொண்டே அவர்களின் நட்பை அசைத்திடும் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

“தேங்க்ஸ் மச்சா” பஸ் ஸடாப்பில் இறங்கிய ஜெய் சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.