(Reading time: 31 - 62 minutes)

செயின் ஸ்மோக்கர் ரேஞ்ச்சுக்கு கேட்கிறாளே’, என்று எண்ணி சிரித்துக் கொண்ட ஹர்ஷ்,

“ப்ராக்டிஸ் போகுதே! ஸ்மோக் செய்தா கோச் கொன்னே போடுவார்!”

“இதுலாம் ஒரு ரீசன்னா??? கோச் சொன்னா கேட்டுகிறதா? ஒரு திருட்டு தம் கூட அடிக்கலைன்னா என் பார்ட்னர் அதுவும் க்ரைம் பார்ட்னர்ன்னு சொல்லிக்க கேவலமா இருக்கும்!”, என்றாள் ரோஷமாக!

“புரியது பார்ட்னர் உன் ஃபீலிங்ஸ்! நம்ம ஹார்ட் ஒர்க் வீணாகக் கூடாது பாரு! எல்லாத்தையும் தியாகம் செய்துட்டேன்!” - ஹர்ஷ்!

“ஹூம்... நீன்னாலும் கொஞ்ச நாளைக்கு! நான் தம், தண்ணி வாசனை தெரியுறதுக்கு முன்னாடியே அதையெல்லாம் தியாகம் செய்திட்டேனே!!!”

என்று அலுத்துக் கொண்ட அஞ்சனாவிற்கு் அவன் செய்வதை எல்லாம் தானும் செய்தாக வேண்டும்! அதற்கு கட்டுபாடு விதித்தது அவளை கட்டி போட்டது போலாகி விட்டது! அமெரிக்காவில் வளர்ந்த ஹர்ஷ்வர்தனுமே  இந்த கட்டுபாடுகள் பதினெட்டு வயதிற்கு பிறகு அனாவசியம் என்றே நினைத்திருக்க....

“அத்தை பயங்கர ஸ்மார்ட்டா சத்தியம் வாங்கிட்டாங்க!  தாத்தா வீட்டுக்கு வர்றப்போ அதை விட ஸ்மார்ட்டா அந்த சத்தியத்தில் ஏதாவது லூப் ஹோல் இருக்கான்னு பார்க்கலாம்!”, என்றான் ஹர்ஷ்!

“ஹூம்கும்!!! அந்த பாஜி எதையும் செய்ய விட மாட்டானே!”, என்று அஞ்சனா சோகமாக சொல்லவும்..

“அவனுக்கு தெரியாம தம் அடிக்க லொகேஷன் கண்டு பிடிச்சு கொடுக்கிற  நீயா இப்படி சொல்றது!”, என்று ஹர்ஷ் கேட்க,

இப்படியாக இரு கூட்டுக் களவாணிகளும் எதிர்கால திட்டம் தீட்டுவதை பற்றி சிறிது நேரம் பேசி விட்டு..

“லேட் நைட் ஆச்சு!! காலையில் சீக்கிரம் ப்ராக்டிஸ் போகணும்!”, என்று விடை பெற யத்தனித்த ஹர்ஷ்,

“போன தடவை போல ஆகாம இந்த முறை முதல் ஆளா ஃபினிஷ் செய்து ஒலிம்பிக் மெடலோட திரும்பணும்ன்னு விஷ் மீ லக் பார்ட்னர்!!!”,

இயல்பாக ஆரம்பித்தான் தான்! ஆனால், நான்கு வருடம் முன்பு அதே பனிச்சறுக்கு விளையாட்டில் சறுக்கி விழுந்து அடிபட்டு போட்டியை விட்டு வெளியேறியது மனதை அழுத்த... முடிக்கும் பொழுது ஆழ்ந்து.. அவளிடம் அதை எதிர்பார்ப்பது போல முடிக்க... அதை கேட்டவளின் மனமும்  நொடிப்பொழுதில் அவனுக்காக ஓடியது..

“மெடல் எதுக்கு குதிரை? மாடல் காண்பிச்சா நம்ம ஆசாரியே சூப்பரா மெடல் செய்து கொடுப்பார்!  நீ எதுக்கு கஷ்ட படுறே! கடைசி வந்தா கூட எனக்கு கவலையே இல்லை...”

“ஆனா, உன்னை குப்புற தள்ளி... அத்தனை உழைப்பையும் வீணடிச்சு.... போட்டியை விட்டே வெளியேத்தி அவமான படுத்தின அந்த ஸ்னோவை... நீ  ஜெயிக்கணும் - உன்னாலே எவ்வளோ வேகமா முடியுதோ அவ்வளோ வேகமா!!!!!”

வேகமா என்ற வார்த்தையை அத்தனை அழுத்தமாக உத்வேகம் ததும்ப எந்த யோசனையும் இன்றி மனதில் இருந்ததை அப்படியே ஒப்பித்தாள்!

போட்டி போட சொல்லாமல்.. போராட சொல்கிறாள்! அவனுக்கு அவள் சொன்ன விதம் ஒரு இதம் கொடுத்தது! போட்டியை பற்றிய மலைப்பும் எட்டச் சென்றது போல தோன்றியது....

“ஸ்யூர் பார்ட்னர்!!!”, என்றான் நெகிழ்ச்சியாக. அதில் மகிழ்ந்தவளாக..

“நீ வொர்ரி பண்ணாதே பார்ட்னர்! என்னோட ஹக்ஸ் அன்ட் ப்ரேயர்ஸ் எப்பவும் உன்கூடவே இருக்கும்! இப்போதைக்கு குட் நைட்! ஸ்லீப் டைட்! லவ் யு!!!”

“லவ் யு டூ!!!!”, என்று அவனும் விடைபெற.... அஞ்சனாவிற்கு பரம திருப்தி!!    

பிஸ்னஸ், ஃப்ராக்டிஸ் என்று அல்லாடும் ஹர்ஷ் ஆர்யமன் சொல்லி தான் தன்னுடன் பேசியிருக்கிறான் என்பது புரிய... தன் மகிழ்ச்சியை அவனிடம் பகிர நினைத்த பொழுது அவளிடம் வந்த சசி,

“நிஜமாவே குதிரை தான் உன் கசின் பேரா?”, நம்ப முடியாத பாவனையில் கேட்க....

“ஹா!! ஹா!!!”, என்று சிரித்த அஞ்சனா, “அவன் யார்ன்னு தெரிஞ்சா நீ தாங்க மாட்டே!”, என்று சொல்ல...

“அவ்வளோ பெரிய அப்பாடக்கரா அந்த குதிரை?”, என்று சசி கேட்டதும் அவளால் ஹர்ஷை விட்டு கொடுக்கவும் முடியாமல்.. உண்மை சொல்லவும் முடியாமல்..

“அல்பைன் ஸ்கீயிங்ல வேர்ல்ட் சாம்பியன்! அப்பாடக்கரா என்னன்னு நீயே முடிவு செய்துக்கோ”, என்றாள் சமாளிப்பாய்!

அதைக் கேட்டு வாய் பிளந்த சசி,  “அப்போ அப்பாடக்கர் தான்!”, என்று ஒப்புதலாக தலையசைக்க... ஆர்யமனிடம் பேச நினைத்த அஞ்சனா,

“சசி நீ சாப்பிட போ.. நான் ஊருக்கு பேசிட்டு வந்துடுறேன் !”, என்று அவளை அனுப்பி விட்டு ஆர்யமனை அழைக்க அவனோ அழைப்பை எடுக்கவில்லை! சரி தகவல் அனுப்பலாம் என்று  நினைக்கும் பொழுது சரியாக சைலஜா அழைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.