(Reading time: 31 - 62 minutes)

தே சமயம், மற்றவர்களுக்கு கேக்கை பாஸ் பண்ண சொல்ல எண்ணி அஞ்சனா பக்கம் திரும்பிய சசியும் இதை கவனித்தாள்.

தன் சைகை கேள்விக்கு பெரிதாக விழி விரித்து, “ம்ம்ம்!!! சூப்பர்!!!!”, என்ற அஞ்சனாவின் கண்களை ஊடுருவியவனின் பார்வை.. அடுத்து அவள்..

”உங்களுக்கும் ரெட் வெல்வெட் பிடிக்குமா?”, ஆர்வமாக கேட்டதும்.. அவன் கவனம் கேக்கிற்கு செல்லாமல்...

‘ரெட் வெல்வெட்’, தனக்குள் உச்சரித்த படி... மெல்ல அந்த பவள இதழின் வரிப் பள்ளங்களில் நோக்கி பாய்ந்து அங்கே தேங்க….

அசையவில்லை அவன் விழிகள்!!! தலை மட்டும் லேசாக அசைந்தது ஆமோதிப்பது போல!!! சத்தியமாக அவன் கேக்கை சொல்லவே இல்லை!!!

இது தெரியாமல்,

அவன் தலையசைப்பில் மலர்ந்தவள், “பிடிக்குமா? அப்புறம் ஏன் எடுத்துக்கலை?”,

தலையை சரித்துக் கேட்டதும்.. அதுவரை இதழ்களை மையிட்ட அவன் விழிகள்..

“எடுத்துக்கிறதா??”, என்று அதிர்ந்து அவள் கண் நோக்க....

“ஆமாம்! உங்க குண்டு முழி”, என்று தன் கண்களை பெரிதாக விரித்து காட்டி,

“நான் சாப்பிடுறதை கண்ணு வைச்சா வயிறு வலிக்குமே!”, என்று வெள்ளந்தியாக  பேசும் அவள் கண்களைப் பார்க்க இவன் நெஞ்சம் சுட்டது!

‘ஏன்டா இவ்வளோ கேவலமா உன் எண்ணம் போகுது? அதுவும் ஹர்ஷ் உன்னை நம்பி..!’, என்று அவன் நெஞ்சே அவனை குற்றம் சாட்ட ஆரம்பித்த பொழுது,

இருவர் கவனத்தையும் கலைத்தது... சசியின் சற்றே காட்டமான அழைப்பு - அது அஞ்சுவிற்கு! கூடவே முறைப்பு இது ஆர்யமனுக்கு!!!

அவன் கவனத்தை கலைத்தது போல வந்தது சசியின் சற்றே காட்டமான அழைப்பு - அது அஞ்சுவிற்கு! கூடவே முறைப்பு இது ஆர்யமனுக்கு!!!

அஞ்சனா வேண்டுமானால் அவன் பார்வையை புரிய முயலாமல் இருக்கலாம்... அவள் தோழிக்கு எல்லாமே புரிந்தது! சும்மாவே அவன் மீது தவறு கண்டுபிடிப்பவள்.. இப்பொழுது கேட்கவா வேண்டும்!

“என்ன ஆச்சு சசி? கோபமா இருக்கே?”, என்று கேட்ட அஞ்சனாவைத் தனியே இழுத்துச் சென்றவள்.

“என்ன தான் ஃப்ரண்ட்ன்னாலும் பாய்ஸ் ஆர் பாய்ஸ்!  ஆர்யமன்கிட்ட பேசு! ஆனா, இப்படி தனியா நின்னு பேசாதே! இந்த விஷயத்தில் என் பேச்சு பிடிக்கலைன்னாலும் கேட்டே ஆகணும்!”, என்று அதிகாரமாக பேசிய விதம் அவளை  பாலாஜியின் மறு உருவாய் காட்டியது அஞ்சனாவிற்கு! மண்டையை மண்டையை ஆட்டி அதைக் கேட்டுக் கொண்டாலும்...

‘ஆர்யா ஹர்ஷ்ஷோட ஃப்ரண்ட்! அப்படி எல்லாம் பிகேவ் செய்ய மாட்டார்! ’ என்று எண்ணிக் கொண்டவள் மனம் சசியையோ... ஆர்யமனையோ இல்லை... ஹர்ஷவர்தனை மட்டும் தான் நம்பியது!

சசியுடன் பேசி விட்டு ஆர்யமனை கண்களால் துளாவிட.... அவன் அந்த அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான் - அஞ்சனாவிற்காகவோ.. சசிக்காகவோ இல்லை.. ஹர்ஷவர்தனுக்காக - அவன் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக!!

டிசம்பர் 8

பரபரப்பாக காவல் நிலையத்திற்கு கிளம்பிய வாசு... இரவு வேலை பார்த்து விட்டு இன்னும் தூங்கிக் கொண்டிருந்த ஆர்யமனின் காதருகே வந்து..

“மாப்ளே! நானே டென்ஷனா இருக்கேன்! கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம தூங்கிட்டு இருக்கே! நீயெல்லாம் ஒரு நண்பனா???”, என்று தொன தொணவென்று புலம்ப....

தூக்க கலக்கத்திலே எழுந்தமர்ந்த ஆர்யமன் சோம்பல் முறித்த படி, “ப்ச்... ஐ. ஜி ஆபிஸ்க்கு கூப்பிட்டு கண்டிப்பா சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுக்க போறாங்க! இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுறே! கூல் மச்சி!!!”

என்று கூலாக ஆர்யமன் சொல்ல..

“ஏன்டா உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?”, வாசு கேட்டதும்,

“பார்க்கிறது எடுபிடி வேலை! இதில் பார்ட் டைம்மா... பல்டி சாமியார் பிஸ்னஸ் பண்ணா வீட்டுக்கு அனுப்பாம என்ன பண்ணுவாங்களாம்..” - ஆர்யமன்.

“பல்டி சாமியார்ன்னு சொல்லாதே! போலி சாமியார் மாதிரியே ரைம் ஆகுது! பல்டி கன்சல்டன்சி சர்வீஸஸ்.. ஷார்ட்டா PCS CEO ன்னு சொல்லு!”, என்ற வாசுவின் சுயபுராணத்தை கேட்டு அவனை ஏன் தான் பிள்ளையாருக்கு குட்டிக்கரணம் போட வைத்தோம் என்று தோன்றினாலும்..

“என்ன தான் CEOவானுலும்.. விதை நான் போட்டது மச்சி!”, என்றான் ஆர்யமன் பெருமையை கையகபடுத்தி கொண்டவனாக..

“என்னது விதை போட்டியா? அது விஷ விதை! என் காதல் செடியை கருக வைச்ச விதை! அந்த பாவம்... ஆண் பாவம் உன்னை சும்மா விடாது!”, என்று வாசு சூளுரைக்க... அதற்கு அலட்சியப் பார்வை பார்த்தவன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.