(Reading time: 31 - 62 minutes)

வர் அழைத்த பின் தான் இன்னும் டிபன் கேரியரை வாங்க போகவில்லை என்பது நினைவுக்கு வர.... இன்னும் சாப்பிடவில்லை என்றால் அடுத்த நிமிஷமே அது பவதாரிணி காதை எட்டி விடுமே என்று அந்த அழைப்பை எடுக்க.. எதிர்பார்த்த படியே அவரும் சாப்பாடைப் பற்றி விசாரிக்க..

“பயங்கர டேஸ்டி ஆண்ட்டி!! சாப்பிட்டுகிட்டே இருக்கேன்! நடுவில் கொஞ்சம் கூட டிஸ்டர்ப் பண்ண கூடாது!”, என்று சமாளித்து அழைப்பை வைத்தவள்...

‘முதல் வேலையா லஞ்ச் கலெக்ட் செய்யணும், பட், அதுக்கும் முன்னாலே நம்ம அவசர வேலையை முடிச்சிடணும்!!! பாவிங்க ஏசி இவ்வளோ ஏத்தி வைச்சா!!!’, என்று தனக்குள் புலம்பிய படி..

பாத்ரூம் அறைக் கதவை திறந்து கொண்டு நுழைந்த பொழுது..... அவள்  காலருகே வந்து விழுந்தது சிகரெட் லைட்டர்!!!

தன் பான்ட் பாக்கெட்டில் இருந்து அதை தவற விட்ட பெண்... வேகமாக  அதை எடுக்க வருவதற்குள் அஞ்சனா அதை எடுத்து கொடுக்க..  அவளுக்கு நன்றி சொல்லி வாங்கிக் கொண்டவள் மீது குப்பென்று வந்த சிகரெட் வாசம் அஞ்சனாவின் ஆர்வத்தை வெகுவாக கிளற,

“நீங்க ஸ்மோக் செய்வீங்களா????”, கண்கள் மின்ன அவள் கேட்டதும்...

சராசரி பெண்களைப் போல எந்த அருவருப்பும் காட்டாது அஞ்சனாவின் முகத்தில் இருந்த ஆர்வத்தையும் அவள் நாகரீகத் தோற்றத்தையும் கண்டு,

“எஸ்!!!! நீங்களுமா?”, என்றாள் அந்த பெண் அதே ஆர்வத்துடன்!

மறுப்பாக தலையசைத்த அஞ்சனா,

“இந்த தம் இருக்கே தம்!!!! அதை விரலுக்கு நடுவில் ஸ்டைல்லா வைச்சுகிட்டு, உறிஞ்சி உறிஞ்சி மணிரத்னம் மூவி எபெக்ட்ல புகையை விடணும்ன்னு ஆசை தான்.. ஹூம்...!!!!”, என்று ஏகத்துக்கும் பெரு மூச்சு விட்டு  தோள்களை தளர்த்தி...

“எங்க வீட்டிலே கேர்ல்ஸ் ஸ்மோக் பண்ணக் கூடாதுன்னு ஒரு டெஸ்ட் ஸ்மோக் கூட பண்ண விடலை...!!!”, என்று சோகமாக உதட்டைப் பிதுக்கியவள்.. பின் மீண்டும் வியப்பு மேலிட...

“உங்களுக்கு அப்படி எதுவும் சொல்லலையா?”, என்று கேள்வியாய் அந்த பெண் முகத்தையே பார்த்து நிற்க, அதைக் கேட்டவள் சிரித்த படி விடைபெற யத்தனிக்க அஞ்சனாவோ விடாது,

“ஹே... ஸ்மோக்கிங் சூப்பர் கேர்ள்!! லெட்ஸ் பி ஃப்ரண்ட்ஸ்!!!”, என்று கைகுலுக்கி தன்னை அறிமுகம் செய்த கையோடு அவள் பெயர் ஃபிலோமினா என்றும் அறிந்து கொண்டாள்!  இன்னும் நிறைய பேச ஆசை தான் அஞ்சனாவிற்கு ஆனால், இயற்கை இம்சை பொறுக்க முடியாமல்...

“இப்போ பேச முடியலை! ஜஸ்ட் ஒன் விஷ்! ”ஃபிலோமினா தம் அடிக்கிற கெத்தை நான் பார்த்தே ஆகணும்!!”, என்று ஆர்வத்துடன் கேட்க...

அவளை விந்தையாக பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே, “ஸ்யூர்!!!”, என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து அகன்றாள் ஃபிலோமினா!

அவள் மட்டும் அறிமுகமாகவில்லை.. அஞ்சனாவிற்கு சிக்கல்களும் அறிமுகமாகி விட்டது என்பதை அறியாமல் தன் உணவு கேரியரை எடுத்துக் கொண்டு காஃபடேரியாவிற்கு விரைந்தவள் ஃபிலோமினாவைப் பார்த்த சந்தோஷத்தை சொல்ல சசியைத் தேட...

அப்பொழுது தான் முகுந்த்துடன்  அலைபேசியில் பேசி விட்டு பரபரப்புடன் வந்த சசி அஞ்சனாவைக் கண்டதும்,

“அஞ்சு! ஆர்யமன் அடுத்த மாசம் US போறாராம்! புது அசைன்மேன்ட்டாம்!”, என்றாள்!

அஞ்சனா ஹர்ஷிடம் பேசிய பொழுது... இன்னும் சில வாரங்களில் அவன்  முழு நேரமும் பயிற்சியில் இருப்பேன் என்று சொன்னது மனதில் வர, ஹர்ஷிற்கு உதவியா ஆர்யா போகிறானோ என்று தோன்றியது! சசியோ அந்த அசைன்மென்ட் பற்றி பேச ஆரம்பித்தவள்..

“USல  இருக்கிற  ஹர்ஷவர்தன்.... ஓ... ஹர்ஷவர்தன்!!! உனக்கு தெரியாதுலே....”, என்று அவள் விளக்கம் கொடுக்க.. தோழியிடம் நடிக்க மனதிற்கு கஷ்டமாக இருந்தது அஞ்சனாவிற்கு! உண்மையை சொன்னால் விலகி போய்விடுவாளோ என்று அமைதி காக்க சசி தொடர்ந்தாள்!

“அவர் ஆரம்பிக்கிற மல்டி பில்லியன் வென்ச்சர்ல ஆர்யமன் வொர்க் செய்ய போகிறாரானாம்! முகுந்த் ஒரே புலம்பல்! இந்த வாய்ப்பு எனக்கு கொடுக்கலாம்லேன்னு! அவனும் ஆர்யமனை விட என்ன குறைஞ்சு போயிட்டான்! BITS ல படிச்சு USலே MS முடிச்சவன் தான்! ”, என்றாள் வருத்தத்துடன்!

அஞ்சனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியாமல்,

“முகுந்த்க்கும் அதே போல நல்ல சான்ஸ் கிடைக்கும் சசி!”, என்றாள் தேற்றுதலாக!

“ஆர்யமன் அப்படி எதையும் நடக்க விட மாட்டான்! அவன் டீம்க்கு என்னை எடுத்தானே! எதுக்குன்னு  நினைக்கிறே? முகுந்த் விட என்னோட சம்பளம் அதிகமாக்கி அவனை மட்டம் தட்ட தான்!!!”, என்று குற்றம் சாட்ட...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.