(Reading time: 31 - 62 minutes)

ஞ்சனா முகத்தில் பரிதாபம் மட்டுமே இருந்தது! தனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசாமல் இருப்பதைக் கண்டதும்,

“இதை ஏன் உன்கிட்ட சொல்றேன்! அவன் உனக்கு ஃப்ரண்ட் ஆச்சே!”, என்றாள் ஆற்றாமையில்! அஞ்சனாவிற்கு தர்மசங்கடமாக போயிற்று! யாருக்காக பேச முடியும்? அவளை நோக்கி நிமிர்ந்து.. 

“ஏன் சசி அப்படி நினைக்கிறே? நீயும் என் ஃப்ரண்ட்! உன்னையும் யாருக்காகவும்.. அது ஆர்யாவா இருந்தாலும் சரி, விட்டு கொடுக்கவே  மாட்டேன்! ”, என்று உண்மையாக சொன்னாள்! உறுதியாக சொன்னாள்!!!

‘லஞ்ச் ஆன்’ மீட்டிங்கிற்கு சென்றிருந்த தினேஷ்ஷிற்கும் ஆர்யமன் அமெரிக்கா செல்வது பற்றி அப்பொழுது தான் தெரிய வந்தது.

இன்னும் இரண்டு வாரத்தில் தன் அக்காவின் திருமணம் இருக்க... அதற்கு  அத்தனை ஏற்பாடுகள் செய்து கொடுத்து பக்கபலமாக இருப்பவன் ஆர்யமன் தானே! அவன் கல்யாணத்திற்கு இருக்க மாட்டானா என்ற கவலை வர...

மீட்டிங் முடிந்து திரும்புகையில் தனிமையில் ஆர்யமனிடம்,

“US ட்ரிப் தூனே முஜே பதாயா நகி! தீதி ஷாதி கே லி யே ”, ,

உரிமை கலந்த கோபம் கலந்த வருத்தத்தில் தாய்மொழி தங்கு தடையின்றி பொங்கி வர படபடத்தான்.. அதைக் கண்டு சினேகமாக புன்னகைத்த ஆர்யமன்,

“தீதி கல்யாணத்திற்கு நான் இல்லாமலா?”, என்றான் உவகை பொங்க! ஆம், தினேஷ்ஷின் அக்கா அன்பு இல்லத்திற்கு பகுதி நேர சேவை செய்யும் மருத்துவர்! அந்த நன்றி மேலிட்டது அவனுள்!

“பயப்படாதே! இன்னும் மூணு வாரம் இங்கே தான் இருப்பேன்! டிசம்பர் 15 தான் கிளம்புவேன் !”

என்றதும் நிம்மதி அடைந்த தினேஷ், அவன் சொன்ன தேதியை அசை போட்ட படி...

“ஆஃபர் லெட்டர் தேனே கே  லியே... தூ அனுப்பி வைச்ச... தாட் கேண்டிடேட் பரணிதரன்.....”

என்று தினேஷ் உதிர்த்த வார்த்தையில் வெகுவாக காயப்பட்டு போக..

“என்னது???!!!! நான் அனுப்பி வைச்சேனா??!!! அவனை ரிஜெக்ட் செய்த பிறகும்.. நீ தானே என்கிட்ட அனுப்பினே!!”

என்று கடித்து குதறாத குறையாக வள்ளென்று விழ பேச்சே வரவில்லை தினேஷ்ஷிற்கு! தயங்கி தயங்கி  “ஸாரி ஆர்.சி! மேனே..”,  என்று இழுக்க,

கையமர்த்தியவன்.. முகம் இறுக

“நெவர் அகைன்!!!”, என்றான் முடிவாக!!!!

நமக்கு பழக்கமானவர்களே நம் பலவீனத்தை உபயோகம் செய்யும் பொழுது மனம் காயப்பட்டு தானே போகும்! அப்படி தான் ஆர்யமனுக்கும்!

‘என்னை கார்னர் செய்து முடிவெடுக்க வைச்சிட்டு... நான் அனுப்பி வைச்சேனாம்லே’, என்று மனம் பொருமிக் கொண்டே இருந்தது! 

உணவு இடைவேளை முடிந்ததுமே அவசர மீட்டிங்கிற்கு ஆர்யமன் அழைப்பு விடுத்திருக்க.. மொத்த குழுவினரும் அந்த கான்ஃபிரன்ஸ் அறையில் அவன் வருகைக்காக காத்திருக்க.. கிடைத்த நேரத்தை வீணடிக்காத அஞ்சனாவோ மும்முரமாக கேன்டி க்ரஷ் விளையாட....

“ஃபோன் சார்ஜ்ஜ ஓச்சுபுட்டு(ஓய்த்து விட்டு)... அப்புறம் இன்டர்காம்லே பல்பு வாங்க வைப்பே! உன்னாலே இரண்டு பல்பு வாங்கிட்டேன்! போதும்!”, என்று சசி அவள் அலைபேசியை வாங்கி வைக்க, சசியை நோக்கி யோசனையை நிமிர்ந்து..

“குதிரை ஒரு பல்பு தானே கொடுத்தான்.... இரண்டுங்கிற?”, அஞ்சனா கேட்க,

“ம்ம்ம்??? காலையில் எமன் பாட்டை பாடுனதுக்கு வாங்கின பல்பை எங்கே வைக்க?”, என்று சசி சொன்ன பொழுது.... அந்த அறைக்குள் கையில் ஒரு பெரிய அட்டை பெட்டியை சுமந்த படி  புயலென நுழைந்த ஆர்யமன்,

“சசி அன்ட் சுகுமார்! உங்க உதவி எனக்கு வேணும்! ”,  என்று இருவரையும் அழைக்க...

எழுந்து செல்ல யத்தனித்த சசியின் காதில் கிசுகிசுத்தாள் அஞ்சனா! “ நீ வாங்கிற பல்பை வைக்க எமன் பாக்ஸ்சே எடுத்துட்டு வந்திருக்கார் பாரு !”, என்று!!!

அவள் கிசுகிசுப்பதை இவன் விழிகளே படித்து விட.. அதுவரை தினேஷ்ஷை எண்ணி பொருமி கொண்டிருந்த மனது சமன்பட்டு, ‘பல்பு பாக்ஸ்ஸா... ஹா....ஹா..’, என்று தனக்குள் சிரித்தது!

சசியையும், சுகுமாரையும் அந்த பெட்டியைத் அதை திறந்து தர சொன்னவன்..

மொத்த குழுவினரையும் பார்த்து பேச ஆரம்பித்தான்..

“ஹாய் டீம்! மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா? அப்படி ஒரு முக்கியமான டீம் சேன்ஜ்ஜ சொல்ல தான் இந்த மீட்டிங்! ”, என்று ஆரம்பித்து வேறு ஃப்ராஜெக்ட்டிற்காக அமெரிக்காவிற்கு  செல்வதை அறிவிக்க... அங்கே அப்படி ஒரு நிசப்தம்!!! அனைவர் முகத்திலும் அதிர்ச்சி! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.