அவள் சொன்னதும்... லேசாக சலசலத்துக் கொண்டிருந்த கூட்டம் ஒரு கணம் அமைதியாகி அவள் சொன்னதை கிரகிக்க... ஆர்யமன் கலவரமாய் அவளைப் பார்த்தான்..
மலை போன்ற பிரச்சனையைக் கூட நிதானமாக கையாள்பவன்.. அப்பொழுதும் நிதானத்தை கடைபிடிக்க நினைத்தான் தான்...
“Act Your Age! Not your shoe size!!!!”, என்றான் கோபத்தை அடக்கி..
விளைவு தெரியாமல் ஜாலியான மோட்டில் இருந்த அஞ்சனாவோ...
“ஆஹான்!!! ஷூ சைஸ்ஸா???. இது ஹவர் கிளாஸ்ன்னு தெரியுற அளவுக்கு வளர்ந்திருக்கேன்!!!”, என்று பேசிக் கொண்டே போனவளை..
சொடக்கிட்டு நிறுத்தியவனின் கரம் வாசலை சுட்டி நீண்டது.. ‘வெளியே போ’ என்பதை சொல்கிறான் என்று அதிர்ந்து விழித்தவள்... அவன் கோபப் பார்வையை அப்பொழுதும் இயல்பாகவே எடுத்துக் கொண்டு
“ஆர்யா!!!!”, என்று சமாதானப் படுத்த முயல.. அவளை நோக்கி குனிந்து கண்ணோக்கி பார்த்தவன்..
“இனி ஒரு வார்த்தை என்கிட்ட பேசணும்ன்னு நினைச்சே.. நான் ஒரேடியா இங்கிருந்து போயிருவேன்!”,
தன் சீற்றத்தின் தாக்கம் மற்றவர் அறியாத வண்ணம் அவளுக்கு மட்டும் கேட்கும் படி மிரட்டி விட்டு நிமிர்ந்தவனின் கூரிய விழிகளில்.. பின் வரிசையில் இருந்தவன்...
“கோகிலா சைஸ்சை பாஸ்வேர்ட்டா வைச்சிட்டாரோ”, என்று பக்கத்தில் உள்ளவனிடம் ரகசியம் பேசுவது பட்டு விட கோபம் பல மடங்காகி ஆக்ரோஷ மூர்த்தியானான்.
ஆவேசத்துடன் அவனை நோக்கி சென்றவன் கொத்தாக அவன் சட்டையைப் பிடித்து தூக்கி,
“வாய் இருந்தா இஷ்டத்துக்கு பேசுவியா?”, என்று சீறினான் அவன் கன்னத்தை பழுக்க வைக்க துடித்த கரத்தை கடினபட்டு அடக்கி...
இவன் ஆங்காரத்தில் நடுநடுங்கி போனான் அவன்.. “ஸா.. ஸாரி ”, என்று திணறியவனை விடுவித்தவாறு...
“ஒரு பண்பு தெரியலை! என்னத்தை சாதிக்க போறே! கோ ஆன் அன்ட் கெட் லாஸ்ட்”, என்று கர்ஜிக்க... அவனை அங்கிருந்து வெளியேற்றி விட்டு திரும்ப.. இன்னும் அங்கிருந்து அகலாமல் நடப்பதை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவை பார்த்ததும் இன்னும் கொந்தளித்தான்...
“உனக்கு என்ன??? வெளியே போன்னு க்ரீக்ல சொன்னா தான் விளங்குமா?”, என்று கத்த...
அத்தனை பேருக்கு மத்தியில் நின்று கொண்ட குத்தலாக அவன் சொன்ன விதம் மனதை வெகுவாக காயப்படுத்த கலங்கிய விழிகளுடன் அங்கிருந்து வெளியேறினாள் அஞ்சனா!
அவள் இன்னும் அவனை கொந்தளிக்க வைப்பாள்..
அவன் இன்னும் அவளை அழ வைப்பான்...
பெல்லி பாய் எப்படி இவர்களை சேர்த்து வைப்பார்????
தொடரும்
{kunena_discuss:922}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.