(Reading time: 31 - 62 minutes)

முதல்ல உங்க டிபார்ட்மெண்ட் உன்னை சும்மா விடுதான்னு பார்ப்போம்”, என்று சொல்ல.. விழி பிதுங்கிய வாசு  பீதியுடன் ஐ. ஜி. அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றான்.

என்ன தான் வாசுவை கிண்டல் செய்தாலும் அவனுக்கு என்ன பிரச்சனையோ என்று அலுவலகம் வந்த பின்னும் ஆர்யமனுக்கு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது!

அலுவலகத்தின் இன்னோவேஷன் க்ளப் மூலமாக ஒவ்வொரு மாத முதல் வாரத்தில் அவன் நடத்தும் டெக்னாலஜி வொர்க்ஷாப்பிற்கு தயார் படுத்தி கொண்டிருந்தான்! அமெரிக்கா செல்ல இன்னும் ஒரு வாரமே இருந்ததால் அது தான் கடைசி வொர்ஷாப்பும் கூட... 

அப்பொழுது வாசுவின் அலைபேசி அழைப்பு வர... அதையே எதிர்பார்த்திருந்தவன்... அவன் அழைப்பை சட்டென்று எடுத்ததும்

“மாப்ளே! என்னை சைபர் க்ரைம்க்கு மாத்திட்டாங்க!”, என்றான் வாசு குதூகலமாக!

“வாவ்! கன்கிராட்ஸ் மச்சி! ப்ரமோஷன் இருக்கா?”, கேட்டான் ஆர்யமன் சந்தோஷமாக...

“அதெல்லாம் எதுக்குடா.. இப்படியே ஏசி ரூம்லே கிடைச்சாலே போதும்!”, என்று அவன் சிலாகிப்பாய் சொல்ல.. இவனோ சலிப்படைந்து...

“அப்போ ப்ரமோஷன் இல்லை! அதே கான்ஸ்டபிள்ன்னு சொல்லு”, என்றதும்,

வாசு,“ஹெட் கான்ஸ்டபிள்!!!”, என்று கர்ஜித்தான் சிலிர்த்த சிங்கமாக!

அவன் செல்ஃப் டப்பாவை கேட்க முடியாதவனாக, “எப்படியும் AC ஆக மாட்டே! ACல யாவது இரு! வைக்கிறேன் பை!!!”, ஆர்யமன் அழைப்பைத் துண்டிக்கப் போக...

“டேய்.. மாப்ளே... வைச்சிடாதே!! உன்கிட்ட முக்கியமான விஷயம் கேட்கணும்”, என்றான் வேக வேகமாக தடுக்க.. ஆர்யமன் என்னவென்று கேட்க...

“நேத்து இங்கிலீஷ் அறிவை வளர்த்துக்க ஒரு மேகஜின் வாங்கி கொடுத்த தானே.. அதில் கும்முன்னு ஒரு பாப் சிங்கர்... பேரு கூட பியான்ஸின்னு சொன்னியே?”

ஆர்யா, “ம்ம்ம்.. அதுக்கு என்ன இப்போ?”,

வாசு, “இங்க எனக்கு கம்ப்யூட்டர் இருக்கு மாப்ளே!!”, என்று இழுக்க...

“சரி!!!!!! விஷயத்துக்கு வா...”, என்றான் அவன் சுத்தி வளைத்து வருவதைக் கண்டு எரிச்சலாக..

“முதன் முதலா கம்ப்யூட்டர்! சோ பாஸ்வேர்ட் கொஞ்சம் கிளுகிளுப்பா...”

“பியான்ஸிக்கு ஸ்பெல்லிங் வேணுமா?!”, கேட்டான் ஆர்யமன்..

“நண்பேன்டா.. என் மனசையும் வாலிப வயசையும் புரிஞ்சிகிட்ட நண்பேன்டா”, என்று ஓவராக புகழ..

“ஓவரா பேசாம.. ஒழுங்கா நோட் பண்ணு”, என்று அதட்டி விட்டு..

beyonce ஸ்பெல்லிங் சொல்லி விட்டு அலைபேசியை வைத்து விட்டு தன் வேலையில் கவனத்தை வைக்க...

மீண்டும் அழைத்தான் வாசு! “மாப்ளே.. இது என்ன கன்ஃபர்ம் பாஸ்வேர்ட்ன்னு கேட்குது?”

“மறுபடியும் அதே பாஸ்வேர்ட்டை டைப் பண்ணு”, என்றான் இவன்..

“அப்போ மறுபடியும் பியான்ஸி ஸ்பெல்லிங் சொல்லு!”, வாசுவும்  அவனைப் போலவே கேட்க... கடுப்பான ஆர்யமன்,

“ஏன் முதல்லே நோட் பண்ணலை?”,  

“நோட் பண்ணேனே! அதை மைன்ட் ல அழுத்தமா பதிய வைச்சதிலே.. அங்கே  ஒட்டிகிட்டு வர மாட்டேங்குது”, என்று வாசு சமாளிக்க..

“தூ.... ஃபோனை வை.. மெசேஜ்ல அனுப்புறேன்!”, என்றான் இவன்..

“மாப்ளே! என் நினைவாற்றலை குறைச்சு எடை போடுறே! இந்த முறை சொல்லு! மறக்கவே மாட்டேன்டா! வாசுடா!”, என்று கபாலிடா தோரணையில் பந்தா விட..

“மறுபடியும் வருவடி! அப்போ இருக்கு உனக்கு’, எண்ணிக் கொண்டே மீண்டும் கணினியில் தன் வேலையைத் தொடர்ந்தான்.

அதைப் போலவே சில நொடிகளில் வாசு மீண்டும் அழைத்து, “மாப்ளே முதல் நாள் அதுவுமா அபசகுனமா லாகின் ஃபெயில்டுன்னு வருதுடா.. ”, என்று மிகுந்த சோகத்துடன் சொல்ல...

“ஃபீலிங்க்சு!!!!! ஃபெயில்லே ஆனதில்லை பாரு!”, என்று அவனை வாருவதிலே குறியாக ஆர்யமன் இருக்க..

“டேய்! ப்ளீஸ்! ஒரே ஒரு தடவை பியான்ஸி ஸ்பெல்லிங் சொல்லு! முதல் நாளே ஆப்பு வாங்கி கொடுக்காதே!”, என்று ஆரம்பிக்க...

“உனக்கு இங்கிலீஷ் பாஸ்வேர்ட்லாம் செட் ஆகாது! நீ பேசாம 420ன்னு நம்பர்லே வைச்சுக்கோ”, என்று இவன் சொல்ல...

“நான் போலீஸ்டா!!!!”, என்று கதறினான்..

“ஒரு பொண்ணு தான் செட் ஆகலைன்னு பார்த்தா.. ஒரு பாஸ்வேர்ட் கூட... அந்த பியான்ஸி பிறந்த நாள் தெரிஞ்சா அதையாவது சொல்லு! ”, என்று அழுது ஒப்பாரி வைக்க... ‘ரொம்ப புலம்புறானே..’, என்று பாவம் பார்த்தவன்..

பாஸ்வேர்ட் தானே... பியான்ஸி - கிளுகிளுப்பு - நம்பர்ல என்று மடமடவென்று யோசித்து விட்டு..

“36 24 36! பிடிச்சுக்கோ பாஸ்வேர்ட்டை!”, என்றான் வேகமாக...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.