(Reading time: 31 - 62 minutes)

36 24 36!!! ஆஆஆ!!!! எப்புடி ராசா!  நீ என்னன்னமோ கண்டு பிடிச்சு பேடடன்ட்டா வாங்கி குவிக்கிறப்போ கூட நம்பலைடா... இப்போ ஒத்துக்கிறேன் உனக்கு ஐ.க்யூ அதிகம்!”, என்ற வாசு மேலும்,

“மாப்ளே... இதே பாஸ்வேர்ட்டை நீயும் வைக்கிறே!”, என்றதும்..

“ஹே!!!! என்னை என்ன உன்னை மாதிரி நினைச்சியா??? நான் ரொம்ப டீசன்ட் ஃபெல்லோ! போடா போ!” - ஆர்யமன்!

வாசுவோ, “உன்னோட அற்புதமான படைப்புடா இது!! நீயும் இதைத் தான் வைக்கிறே! இல்லைன்னா நான் லாகின் பண்ணவே மாட்டேன்! இங்க வந்த முதல் நாளே... இந்த யூனிஃபார்ம்மை கழட்டுற நிலைமைக்கு இழுத்து விட்டுடாதேடா…”,

என்று உணர்ச்சி வசப்பட்டு பேச...

“டேய்! விட்ரா!!! விட்ரா!!! எல்லாம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்! இப்போ போனை வை”, என்றான் ஆர்யமன்!

“நீ பாஸ்வேர்டை வை… நான் போனை வைக்கிறேன்!”, என்றான் வாசு பிடிவாதமாக சொல்லி முடிப்பதற்குள் ஆர்யமன் அலைபேசியை வைத்திருக்க.. அந்த சோகம் வாசுவை வெகுவாக தாக்க... ஆர்யமனுக்கு  விடாமல் குறுந்தகவலாக அனுப்பி தள்ளினான்!

“ஒரே தட்டிலே சாப்பிட்டு வளர்ந்த நாம.. ஒரே பாஸ்வேர்ட் வைக்கிறதுலே என்ன தப்பு இருக்கு! அதுவும் ஒரே ஒரு நாள்”, என்று ஆரம்பித்து.. பிழிய பிழிய சென்டிமென்ட் குறுந்தகவல், வாட்ஸ் அப், முகநூல் செய்தி என அவனுக்கு மும்முனை தாக்குதல் கொடுக்க...

‘மீட்டிங் இருக்கிற நேரத்தில் ஓவர் எமோஷனலாகி நெஞ்சை நக்குறானே... பயபுல்ல ஒரு பாஸ்வேர்ட் தானே கேட்குது! ஜஸ்ட் ஒன் டே தானே.. இதை மட்டும் செய்யலை நைட் முழுக்க சென்டிமென்ட் டயலாக்கா பேசி காதை தீய வைச்சிடுவான்’, என்று அவன் அன்பு தொல்லைக்கு பயந்த ஆர்யமன்..

“சரி! ஒரு நாள்! இன்று ஒரு நாள்!! நீ லாகின் செய்த முதல் நாள்!! பாஸ்வேர்ட் வைக்கிறேன்!”, என்று அவனுக்கு தகவல் அனுப்பி தன் தலையில் மண்ணை வாரி இறைக்க தயாரானான்!

அந்த மாலை வேலையில், சசி சொல்லி கொடுத்த ஒரு வரி ப்ரோகிராம்மை அடித்து முடித்த களைப்பில் இருந்த அஞ்சனா ‘ஒரு டீ குடிக்கலாம்’ என்று எண்ணும் பொழுது  டீம்மில் உள்ளவர்கள் எல்லாம் பரபரப்பாக எங்கோ கிளம்பிக் கொண்டிருப்பதை கண்டு...

“என்ன நடக்குது?” என்று சுற்றும் முற்றும் பார்க்க...

அந்த பக்கமாக வந்த சுகுமார் அவளைப் பார்த்ததும்,

“ஹே.. காஞ்சனா தலயோட வொர்க்ஷாப்க்கு  வரலையா?”, என்று கேட்க...

“தலையா???!!!”, என்று அவனை நோக்கி திரும்பி, “ஆர்யா ஆபிஸ்க்கு வந்திருக்கிறாரா?”, வியப்பும் ஆர்வமும் கலந்து வினவினாள் அஞ்சனா! கடைசியா கேக் வெட்டிய பொழுது பார்த்தது.. அதன் பின் அவன் கண்ணிலே படவில்லை! அவள் தொடர்பு கொள்ள முயன்ற பொழுதும் எந்த பதிலும் இல்லை!

“தினமும் வர்றாரே! நம்ம டீம் விங் பக்கம் தான் வரலை! அடுத்த வாரம் யு. எஸ் கிளம்புறதாலே பிஸியா இருக்கிறதா சொன்னார்!”, என்றதும்..

“இங்க வர்றதுக்கு முடியலைன்னா அந்த மெக்கானிக் ஷாப் நடத்த மட்டும் ஃப்ரீயா இருக்கிறாமா?”, என்றாள் போலியான கோபத்துடன் அஞ்சனா! அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற ஆதங்கத்தில்!

“மெக்கானிக் ஷாப்பா? ஹா.. ஹா..”, என்று சிரித்த சுகுமார்.. பக்கத்தில் இருந்த சசியையும் அழைத்து...  அவள் சொன்னதை சொல்லி சிரிக்க...

“பெர்பெக்ட் அஞ்சு! கார் ட்ரைவிங் பத்தின க்ளாஸ் தான் அது”, என்று சிரிக்க...

“சீரியஸ்லி?????!!!!!! கார் ட்ரைவிங் க்ளாஸ்சா  எடுக்கிறார் ஆர்யா???”, என்றாள் அஞ்சனா இருவரையும் பார்த்து..

“இது டிரைவரே தேவையில்லாத ஆட்டோமெடிக் காரை பத்தி.. அந்த காரை ஓட்ட வைக்கிற ரோபாடிக் ப்ரோகிமிங் வொர்க்ஷாப்! என்ன வர்றீங்களா?”, கேட்டான் சுகுமார்!

“ப்ரோக்ராமிங்கா?”, கேட்டதுமே அஞ்சனாவுக்கு மயக்கமே வர.. அப்படியே மயங்கி சரிவது போல நடித்து காட்டினாள்! அதைக் கண்ட சுகுமார் சிரித்துக் கொண்டே,

“அடடா! பச்ச புள்ளையை ஏன் பயங்காட்டி வைச்சீங்க!”, என்று சசியிடம் கேட்க...

“இவ காலேஜ் லேப்ல செய்த கரையான் அரிச்ச அந்த ஃபைல்ல கொண்டு வந்துகிட்டு  ப்ரோகிராம் பண்ணியே ஆவேன்னு நிக்கிறா! அவ ஆசையை தீர்த்து வைக்க ஒரு லைன் கோட் அடிக்க - சொல்லி கொடுத்திருக்கேன்ங்கிறதை விட உயிரையே  கொடுத்திருக்கேன்னு சொல்லலாம்”, என்று  பாவமாக  சசி சொல்ல..

‘நல்ல வேளைக்கு இந்த பொண்ணு நமக்கு கீழே வரலை!’, என்று எண்ணிக் கொண்டே சிரித்த சுகுமார் பேச்சை மறுபடியும் வொர்க்ஷாப்பிற்கே கொண்டு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.