(Reading time: 31 - 62 minutes)

ர்யமன், “ஹே!!! என்ன?? அமைதியா இருக்கீங்க? ஷாக்லயா? இல்லை சந்தோஷத்திலயா?”, என்றான் முறுவலுடன் அனைவரையும் பார்த்து!

ப்ராஜெக்ட்டின் தூண் போல் இருப்பவன் திடீரென்று போகிறேன் என்கிறானே!!! அடுத்து என்ன ஆகுமோ? என்ற குழப்பம், ஏமாற்றம் வருத்தமென அனைவர் முகமும் உணர்ச்சி கலவையாய் பிரதிபலிக்க... அதே அமைதி!!!

அந்த சில கண மவுன இடைவெளியை கலைத்து...

“நீங்க இதை ஃபீல் செய்து இருக்கீங்களான்னு தெரியலை!”, என்று பீடிகையோடு.... டேபிளில் சாய்ந்த படி... மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு... அந்த மொத்த கூட்டத்தில் பார்வையை ஓட்டி விட்டு..

“நமக்குன்னு உரிய பொருளை நாம விட்டு போனாலும்.. நம்மை விட்டு அது போகாது!!!”

உரைத்து முடிக்கும் பொழுது அஞ்சனாவை மையம் கொண்டது அவன் பார்வை!!!

அதுவரை சசி திறக்க முயன்ற அந்த  பெட்டிக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவின் விழிகள் சட்டென்று அவன் விழிகளில் மோதி உறைந்தது - சில மணித் துளிகள்!!!

ஆழ் மனத் தேடல்கள் பிரதிபலிக்கபடுமே அன்றி... பகுத்தறியப்படாதே!!!

அது சில மணித்துளிகள் தாம்! அவன் நோக்கம் அவள் அல்லவே!!! தான் பேச வந்ததிலே முனைப்பாக இருந்தவன் தன் பார்வையைப் பிரித்துக் கொண்டு,

“எஸ்!! இட்ஸ் மைன்!!! இட்ஸ் மை டீம்!!! இந்த நிமிஷம் வரை இல்லை எப்போதும்! எப்போதும் அது எனக்குள்ளே இருக்கும்! அந்த நம்பிக்கை உங்களுக்கு இருக்கா? ”, என்று ஓங்கிய குரலில் அனைவரையும் பார்த்து அவன் கேட்ட விதம்,

“எஸ்ஸ்!!!”, என்று கோரஸாக உணர்ச்சி ததும்ப பதில் சொல்ல வைத்தது!

“அப்போ அதே நம்பிக்கையை இவங்க மேலயும் வைக்கணும்”, என்று அதே உத்வேத்தில் சசியும் சுகுமாரையும் காட்டிச் சொன்ன  அதே நேரம்..

அந்த பெட்டி, “வெல்கம் நியூ லீடர்ஸ்!!!”, என்று இசைத்த படி தானாக திறந்து கொள்ள.. பெட்டிக்குள்ளிருந்த அழகிய ரெட் வெல்வெட் கேக் வெளிப்பட்டது!

“எஸ்!!! டீம் மேனேஜ்மென்ட் சுகுமார்! டெக்னிகல், டேட்டா ஓனர்ஷிப் சசி!!”, என்று தன் பொறுப்பை இருவருக்கும் பகிர்ந்ததை ஆர்யமன் அறிவித்து கூட முடிக்கவில்லை...

விசிலடித்துக் கொண்டே  துள்ளி எழுந்த அஞ்சனா..

“வாவ்!!! கங்கிராட்ஸ் சசி!! கங்கிராட்ஸ் சுக்கு”, உற்சாகமாக கத்திக் கொண்டே ஆர்யமனையும் கடந்து சென்று இருவர் அருகில் சென்று வாழ்த்து சொன்ன கையோடு...

“ஹே கமான் கைஸ்!! லெட்ஸ் கட் தி கேக் அன்ட் செலிபிரேட்”, என்று அனைவரையும் டேபிளுக்கு அழைக்க... புது மாற்றத்தை உள்வாங்க திணறிய குழுவினருக்கும் அவள் உற்சாகம் தொற்றி  ஆரவாரித்தனர்..

அஞ்சனாவின் குதூகலத்தை பார்த்த ஆர்யமன், ‘லூசு டீம்மை விட்டு போறேங்கிறேன்! கொஞ்சங்கூட பீல் பண்ணுதா!!’, என்று பொசு பொசுத்த படி அவளருகில் சென்று நிற்க..

அடுத்து இந்த நால்வரையும் குழுவினர் வந்து சூழ்ந்து கொள்ள....சுகுமாரும், சசியும் அந்த கேக்கை வெட்ட... கேக்கை வெட்டி புண்ணியத்திற்கு இருவர் முகத்திலும் அதை பூசி விட்டு குதூகலித்தனர் மற்றவர்கள்..

சசிக்கு பதவி உயர்வு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உள்ளூர பயம்... ஆர்யமன் எதுவும் உள்நோக்கத்தோடு செய்திருக்கானோ என்று! அதை ஒதுக்கித் தள்ளி கொண்டாட்டத்தில் இணைந்தவள்..

தான் கட் செய்த கேக்கின் முதல் துண்டை அஞ்சனாவிற்கு கொடுக்க, அவளுக்கு இப்பொழுது சசியை விட அந்த கேக் அதி முக்கியமாக பட இரண்டு எட்டு பின்னே வைத்து கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்ற படி.. அந்த செக்க சிவந்த மென் பஞ்சு கேக்கை ஆசை ஆசையாய் ஒரு வாய் வைத்து விட்டு..

“ம்ம்ம்ம்ம்!!!!!!  டெலிசியஸ்!!!!””, தலையை இட வலமாக அசைத்து படி கண் மூடி ரசித்து ருசிக்கும் பொழுது... திடீரென்று உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பு! சட்டென்று கண் திறந்தவள் சசி பக்கம் திரும்ப அவள் கேக்கை மற்றவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்க...

‘உன்னை யாரோ பார்த்துகிட்டே இருந்த மாதிரி ஒரு ஹன்ச் வந்ததே அஞ்சு’, என்று விரலை நாடியில் தட்டி யோசிக்கும் பாவனையில் நின்றவளின் கடை விழியில் ஆர்யமன் விழ... சட்டென்று திரும்பினாள் அவனிடம்...

சுவாரஸ்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் அவள் அதிரடியில் திகைத்துப் போக...

அவளோ, ”என்ன?”, என்பது போல வாய் திறக்காமலே  பாவனையாக கேட்ட கையோடு வாயில் எதுவும் ஒட்டியிருக்கா என்று சரி பார்த்தாள் - ஜஸ்க்ரீம் சாப்பிட்ட பொழுது இப்படி தானே பார்த்தான் என்று எண்ணத்தில்!

அவள் செய்கையில் கண்களில் திகைப்பு  நீங்கி குறும்பு அரும்ப..  அவள் கையில் இருந்த கேக்கை சுட்டி...  “கேக் சூப்பரா???”, என்று விரல்களை மடித்து சைகையில் கேட்டான்!! கன்னக்குழிக்கு அவள் கொடுத்த காம்பிளிமென்ட் போலவே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.