(Reading time: 31 - 62 minutes)

வொர்க்ஷாப்க்கு வாங்க காஞ்சனா! தல  நடத்துற ஸ்டைல்லே தனி! வார்த்தைக்கு வார்த்தை காமெடியும் இருக்கும் கன்டென்ட்டும் இருக்கும்! இப்படி ஒரு க்ரவுட் ப்ளீசிங்  சூப்பர் கூல் ஆர்யமனை பார்த்திருக்கவே மாட்டீங்க!”, என்று பில்டப் பயங்கரமாக கொடுக்க..

கலகலப்பாக பேசும் ஆர்யமனை பார்த்ததே இல்லையே - அதை காண வேண்டும் என்ற ஆவல் அஞ்சனா மனதில் பெரிதாக எழுந்து நின்றது!

ஆர்யமன், வொர்க்ஷாப் நடக்க இருந்த கீழ் தளத்திற்கான பட்டனை அழுத்தி விட்டு காத்திருக்க... மேல் தளத்தில் இருந்து ஒவ்வொரு தளமாக இறங்கி வந்த லிஃப்ட் அந்த ஐந்தாவது தளத்தில் வந்து நிற்க...

‘கடவுளே அந்த லூசை மட்டும் கண்ணுல காட்டிடாதே’, என்று வேண்டி முடிக்கவில்லை...சுகுமாருடன் அஞ்சனா அங்கே ஆஜராகி இருந்தாள்!

ஆர்யமனைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியாகிப்  போக...

“ஹே ஆர்யா!”, என்று குழந்தையைப் போல குதூகலித்தவள்..

“ஒரு ஹாய் சொல்லவாவது டீம் பக்கம் வந்திருக்கலாமே! உங்களை  மிஸ் பண்ணோம் தெரியுமா?”, என்று கேட்க... சலனமின்றி அவளையே பார்த்த படி நிற்க.. அதற்குள் அவன் கையில் வைத்திருந்த பொருள் அஞ்சனாவின் கண்களை ஈர்த்தது..

“ஹே.. இது என்ன டாயா? உங்க மெக்கானிக் ஷாப்.. ஸாரி வொர்க்ஷாப்லே இன்னும் இது போல நிறைய வைச்சிருப்பீங்களா?”, என்று அதை வாங்க வர...

எரிச்சலாக முகத்தை சுழித்து.. கையை பின்னுக்கு இழுத்த ஆர்யமன், ‘இவளை ஏன் கூப்பிட்டு வந்தே’, என்பது போல சுகுமாரை முறைக்க....

அதைக் கண்ட சுகுமார் அவளிடம் திரும்பி, “ஆத்தா காஞ்சனா!!! அது விஷன் ரோபாட்! உங்க கையை கொஞ்சம் கன்ட்ரோலில் வைம்மா!“, என்று கெஞ்சாத குறையாக சொல்லி வைக்க..  

அவளை விரட்டுவதே குறியாக இருந்த ஆர்யமன் நேரடியாகவே “இந்த வொர்க்ஷாப்புக்கே  நீ லாயக்கு இல்லை! உனக்கு எல்லாம் க்ரீக் அன்ட் லேட்டீனா இருக்கும்!”, என்று முகத்தில் அடிப்பது போல சொல்ல...

கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், “எகோ போரோ!!!!”, என்றாள் கண்களை உருட்டி..

“என்னாலே முடியும்”, என்பதை க்ரீக்கில் சொல்வதைக் கண்ட ஆர்யமன்  எரிச்சலானாலும் இன்னொரு மனது லூசு க்ரீக் கூட கத்து வைச்சிருக்கே என்று ஆச்சரிய பட..

கண்களோ அந்த பாவனையில் தன் கட்டுபாட்டை இழப்பது போல தோன்ற அவளை தடுக்க முயலாமல்... தவிர்க்க முயன்று விறு விறுவென்று அந்த அறைக்குள் நுழைந்தான்..

கையோடு கொண்டு வந்த அந்த மதர்போர்ட்டுடன் கூடிய லென்ஸ் - அதாவது கம்யூட்டர் விஷன் கொடுக்கும் ரோபாட் வடிவமைப்பு .. என்று அத்தனையையும் டேபிளில் பரத்தி அதை செட் செய்வதற்குள்.. அந்த அறை நிரம்பியிருந்தது!

அடுத்த தலைமுறை டெக்னாலஜி என்பதால் அதை அறிந்து கொள்ளும் அனைவருக்கும்!

தனது லேப்டாப்பை டேபிளில் வைக்க இடம் இல்லாததால் எதிரே இருந்த டெஸ்க்கில் வைத்திருக்க... சரியாக அந்த பெஞ்ச்சில் வந்து அமர்ந்தாள் அஞ்சனா!

“வாழ்க்கையில் முதல் முறையா.. ஆர்யாக்காக லாஸ்ட் பென்ச்சை தியாகம் செய்றேன்!”, என்று சுகுமாரிடம் சொல்லிக் கொண்டே..

எல்லாத்தையும் செட் செய்து விட்டு தன் பேச்சை ஆரம்பித்த ஆர்யமன்,

“இன்னைக்கு டாபிக்கை டிரைவிங் ஸ்கில்ல இருந்து ஆரம்பிக்கலாம்! கார் ஓட்ட எது ரொம்ப ரொம்ப முக்கியம்?”, என்று கேட்க..

அஞ்சனா முந்திரி கொட்டையாய், “கார் ஓட்ட பெட்ரோல் இல்லை டீசல் போட்ட... நல்ல ஒர்க்கிங் கண்டிஷன்லே உள்ளே கார் தான் முக்கியம்! ஏன்னா  கார் இல்லாம கார் ஓட்ட முடியாதே!”, என்று அறிய தத்துவத்தை உதிர்த்தாள் அஞ்சனா...

அத்தனை பேரும் சிரிக்க.. “இப்படி கேஸ்யூ நட் வெர்ஷன் இல்லாம இன்னும் கொஞ்சம் பெட்டரா திங் பண்ணி சொல்லுங்க.. அதுக்குள்ளே நான் லாகின் பண்ணிக்கிறேன்”, என்று தனது கணினியின் முன் வந்து லாகின் செய்ய...

அவனது லேப்டாப் அஞ்சனாவிற்கு எதிரில்... கணினித் திரையும்.... கீபோர்ட்டும் அவள் பார்வைக்கு தெளிவாகத் தெரிய..

அஞ்சனா பொதுவாக வாசிக்க தான் திணறுவாள்.. ஆனால், செயலாக கண் முன் தெரிவது படம் பிடித்தது போல மனதில் பதித்து விடுவாள்.. அப்படி தான் அவன் விரலசைவில் கீபோர்ட் ஸ்ட்ரோக் பதிந்து விட்டது அவளுக்கு... வீட்டிலும் விளையாட்டாக இதை செய்வது தான் - ஹர்ஷ்ஷில் துவங்கி சிபியின்  பாஸ்வேர்ட் வரை அத்தனையும் அத்து பிடி..

திரையில் பாஸ்வேர்ட் தெரியாவிட்டாலும்...அவன் டைப் செய்வதையே ஊன்றி கவனித்தவள்... மடமடவென்று ஒப்பித்தாள்..

“ஹே... 36 24 36 தானே உங்க பாஸ்வேர்ட்!!!!”, என்றாள் ஆர்வக் கோளாறில் சற்றே சத்தமாக - இல்லை நல்லாவே சத்தமாக!!!.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.