(Reading time: 14 - 28 minutes)

ருக்கு விஷயம் இருக்கு.. உன் ஊருல அர்ஜுன்னு எனக்கொரு ப்ரண்ட் இருக்கான்.. சொந்தமா கன்பனி எல்லாம் வெச்சுருக்கான்டா.. அவனுக்கு பீ ஏ வாக ஒரு நல்ல ஆளு வேணுமாம்.. அதான் உன்னை பேசி விடலாம்ன்னு நினைக்கிறேன்.. இதைபத்தி நீ என்னடா நினைக்கிற?” என்று கண்மணி இயல்பாக கேட்க இப்போது வெற்றியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“ கோபம் வருது போல”

“..”

“ வரனும்.. வந்தால்தான் உனக்கு உன் கனவு மேல இன்னும் பிடிப்பு இருக்குன்னு நான் நம்ப முடியுது..”

“ப்ச்ச் என்ன சொல்ல வந்த?”

“ ஓஹோ இப்போ அப்படியா? நான் கிளம்புறேன்.. அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்”

“..”

“இது பாருப்பா,எனக்கு ஒன்னும் சாப்பாடு, தூக்கம், கனவு எல்லாமே சினிமா சினிமா சினிமா இல்ல.. என் நண்பன் அசிஸ்டண்ட் டைரக்டராய் இருக்கான்.. அவனுக்கு துணையா இருக்கனும்ன்னு நினைச்சுத்தான் பல தடங்கள் தாண்டி சம்பளமே வேணாம்ன்னு சொல்லி நான் உன்கூட சுத்திட்டு இருக்கேன்..உனக்கே இது பிடிக்கலன்னா எனக்கென்ன வந்தது? பாய்”

“ஏய் இறுடீ.. என்னடீ பிரச்சனை உனக்கு?”

“ உனக்கு என்ன பிரச்சனை இப்போ”

“ நல்ல ஸ்க்ரிப்ட்டை குப்பை ஆக்குறாங்க கண்ணு”

“அப்படின்னு உனக்கு யாரு சொன்னது?”

“எனக்கே தெரியுதே..ஹீரோ கதைப்படி உத்தமனாய் இருப்பானாம்..நல்லவனாய் இருப்பானாம்.. ஆனா ஒரே ஒரு ஐட்டம் சாங்க்காக வேற யாரோ பொண்ணு கூட ஆடுவானாம்.. படத்தைபார்க்குற ஜனங்களும் எல்லாத்தையும் ரசிப்பாங்களாம்.. ஒரு படம் எடுத்தா அதுல லாஜிக்  இருக்கனும்..மக்களை சேருர மாதிரி உண்மையான பார்வை இருக்கனும்.. “

“ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லு”

“ கேளு”

“ இது உன் படமா? உன் கதையா?”

“ கண்ணு”

“ கண்ணு மண்ணுன்னு பேசிட்டு இருக்காத..பைத்தியமா நீ? நீ அசிஸ்டண்ட்டா இருக்குறது படம் இயக்குறதை பத்தி கத்துக்கிறதுக்கும் அனுபவத்துக்கும் தான்.. இதே படத்தையா நீ எடுக்க போற?”

“..”

“ஒன்னு சொல்லவா? டைரக்டர் பேச”

“டைரக்டர் பேச கூடாது ..அவரோட படம்தான் பேசனும்.. இதுதானே? ஆயிரம் தடவை நீ எனக்கு சொல்லிட்ட கண்ணு.. ப்ளிஸ் தூக்கத்துல கூட உன் குரல் எனக்கு கேட்குது..ஏதோ அஞ்சு நிமிஷம் பைத்தியம் மாதிரி பிஹேவ் பண்ணிட்டேன்.. அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்.. “ என்று அவன் கெஞ்ச,முறைத்துகொண்டே அவன் கையில் செல்ஃபோனை திணித்தாள் கண்மணி.

“ போதும்.. உங்க படம் ஹீரோவுக்கு கொஞ்சம் ஃபோன் போட்டு வர சொல்லு.. வழக்கம் போல இன்னைக்கும் லேட்” என்று முறைத்தவள் அவன் பேசும் முன்னரே

“ நான் டைரக்டர் சார்கிட்ட பேசுறேன்” என்று ஓடினாள். அவள் ஓடிடும் திசையை சில நொடிகள் புன்னகையுடன் பார்த்த வெற்றி அந்த படத்தின் கதாநாயகனுக்கு ஃபோன் போட்டான்.

ன்னும் ரெண்டு இட்லி வெச்சுக்கோங்கம்மா”

“ போதும் சத்யா இப்போவே நாலு சாப்பிட்டேன்பா..”

“ இந்த வயசுல சாப்பிடாம எப்போ சாப்பிட போறிங்க?”

“ டேய் நான் உனக்கு சொல்லவேண்டியதை நீ சொல்லுறியா சத்யா?” சுலோட்சனா வாஞ்சையுடன் கேட்க சைலண்ட் மோட்டில் இருந்த சத்யாவின் ஃபோன் வெளிச்சமாய் மின்னியது. திரையை ஒருமுறை பார்த்தவன் கடிகாரத்தை பார்த்தான். பின்பு அலட்சியமாய் தாய்க்கு பரிமாற ஆரம்பித்தான்.

“இப்படி பண்ணாத சத்யா... நீ எப்பவும் ஷூட்டிங்க்கு லேட்டா போறன்னு விமர்சனம் பண்ணுறாங்க டா”

“நிஜமாவா ?”

“ஆமா ஏன் சந்தேகமாய் கேட்குற?”

“இல்லை..என்னை பத்தி உண்மையை கூட விமர்சனமாய் எழுதுறாங்களா? பரவாயில்லையே”

“ சத்யா போதும்.. ஏன்டா இப்படி பண்ணுற ?”

“..”

“ஷூட்டிங்க்கு லேட்டாகுது கண்ணா”

“ இன்னும் 15 நிமிஷம் இருக்கும்மா..காரை இப்படி அப்படின்னு 5 நிமிஷம் திருப்பினா சேர்ந்திடுவேன்.. ஆனா அங்க போயிட்டா என்னால உங்ககிட்ட ப்ரீஃயா பேச முடியுமா? பாசத்துல உனக்கு உம்மா கொடுக்க முடியுமா சொல்லு? வெளில உங்க பையன் கண் சிமிட்டினா கூட நியூஸ் ஆகுதும்மா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.