(Reading time: 14 - 28 minutes)

து உனக்கு சீக்கிரமா? எந்த காலத்துல இருக்க நீ ? சின்ன சின்ன கேமரா வெச்சே குறும்படம் எடுத்து அதற்கு அப்பறம் ஸ்ட்ரேட்டா சினிமாவில டைரக்டர் ஆகிடுறாங்க வெற்றி. இன்னும் சில பேரு சினிமாவுக்காக கூட வைட் பண்ணுறது இல்ல. யூ டியூப்லயே போஸ்ட் பண்ணி பெரிய லெவலுக்கு போயிடுறாங்க..”

“..”

“ உன்னை என்னோட அசிஸ்ட்டண்ட்ன்னு சொல்றதுல எனக்கு எந்த பெருமையும் இல்ல வெற்றி..குருவை மிஞ்சுற சிஷ்யன் மாதிரி நீ எனக்கே போட்டியா வரனும். உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு வெற்றி உன் பேருல இருக்குற வெற்றி உன்  லைஃப்ல வரனும்.”

“..”

“ என்னடா கேமரா ஆன் பண்ணினா ஒரு மாதிரி ஆஃப் பண்ணினா ஒரு மாதிரி பேசுறேனேன்னு யோசிக்கிறியா? இங்க எல்லாம் அப்படித்தான்.. போகப் போக நீயே கத்துக்குவ.. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளயும் ஒரு நல்ல விஷயம் இருக்கும் வெற்றி.. அது இன்னொரு மனுஷனை தூக்கி  நிறுத்தும்.. என்னை எப்படி சிலர் தூக்கி நிறுத்தினாங்களோ,அதே மாதிரி உனக்கு நான்னு நினைச்சிக்கோ”

“..”

“ என்ன கண்மணி நீயும் அமைதியா இருக்க?”

“ லேட் நைட்.. ஏற்கனவே கொசு கடிக்கிது இதுல நீங்க வேற செண்டிமண்ட் கடி கடிக்கிறிங்க.. தாங்க முடியல சார்.”

“ ஹா ஹா ..வெற்றி லைஃப்ல எவ்ளோ உயரம் போனாலும் இவளை விட்டுறாத.. “ என்று அவர் சிரிக்க வெற்றி கண்மணியை வாஞ்சையுடன் பார்த்தான்.

“கவலையே படாதிங்க சார்.. இந்த லூசை நான் விட்டுட்டு போகவே மாட்டேன்” என்று சொன்ன கண்மணி அவனிடம் கூட சொல்லாமல் விலகிடும் காலம் வந்துவிடும் என்பதை அறியாமல் போனது விதிதான்.

“ வெற்றி ஒரு முக்கியமான விஷயம்..”

“சொல்லுங்க சார்”

“ மனோவேகம் படத்துக்கு அவார்ட் நாமினெஷன் பண்ணி இருக்காங்க..”

“ வாவ்.. சூப்பர் சார்..” என்று குதூகலித்தாள் கண்மணி.. இயக்குனர், வெற்றி இருவருமே அவளை பார்வையால் அடக்கினர்.

“ ஷ்ஷ் அவார்ட் நம்ம படத்துக்கு தான்னு  யாருக்கும் சொல்லல கண்மணி ..சோ கொஞ்சம் மெதுவா பேசும்மா”

“ சரி சரி சொல்லுங்க சார்”

“ அந்த அவார்டை என் சார்பா, வெற்றி தான் வாங்கனும்”

“ சார் நான் எதுக்கு..?”

“ எனக்கு ஃபேமிலி ஃபங்க்ஷன் இருக்கு வெற்றி..நான் இன்னைக்கே கிளம்புறேன்.. சும்மா போயிட்டு வாங்க ரெண்டு பேரும்..நிறைய நட்சத்திரங்கள் வருவாங்க..புது அனுபவமாய் இருக்கும்..உன் அடுத்த படத்துக்கான கதாப்பாத்திரங்கள் உன் கண்முன்னாடியே இருக்கலாம்.. தேடு.. அமைதியா எல்லாத்தையும் ஒப்செர்வ் பண்ணு” என்றார் அவர். வெற்றி மறுக்க அவர் வற்புருத்த இப்படியே சில நிமிடங்களை பேச்சு தொடர,கடைசியாய் அந்த விருது விழாவிற்கு கண்மணியும் வெற்றியும் செல்வதாக முடிவானது.. அடிக்கடி சிணுங்கி கொண்டிருந்த வெற்றியின் ஃபோனை அவனிடம் கொடுத்தாள் கண்மணி. விஹாஷினியின் பெயரை கண்டதுமே இருவரிடமும் பார்வையால் கெஞ்சிவிட்டு தூரமாய் சென்று பேசினான் வெற்றி.

“ அப்பறம் சொல்லுங்க சார்.. என்ன ப்ளான்?”

“ ஹாங்?? புரியல கண்மணி”

“ வெற்றி வேணும்னா உங்க பேச்சை அப்படியே நம்பிடலாம்.. ஆனா நான் மாட்டேன்பா..நீங்க ஒரு துரும்பை தூக்கி போனாலும் அதுக்கொரு காரணம் இருக்குமே”

“ ஹா ஹா புத்திசாலி நீ”

“ பாராட்டு போதும் சார் உண்மையை சொல்லுங்க”

“ வெற்றிக்கு ரெக்கமண்டெஷன் பிடிக்காதே கண்மணி.. ஆனா அவனுக்கு எதாவது செய்யனும்ன்னு எனக்கு தோனுது.. என்னுடைய பிரதிநிதியாய் நீங்க ரெண்டு பேரும் போகும்போது நீங்க யாருன்னு கண்டிப்பா எல்லாருக்கும் ஆர்வம் வரும்.. அந்த ஆர்வமே அவன் எதிர்காலத்துக்கு உதவியா இருக்கும்”

“ வாரேவா..பெரிய ஆளு சார் நீங்க”

“ அப்படித்தான் எல்லாரும் சொல்லுறாங்க.. ஆனா உனக்குத்தான் என்கிட்ட பயமே இல்லைல?”

“பயம் தப்பு பண்ணினா வரும்.. நான் தப்பு பண்ணலயே! மரியாதை இருக்கு.. அதுவும் மனசுல பத்திரமா இருக்கு..வேற எதுவும் வேணுமா?”

“ போதும்மா.. போதும்.. சரி நான் வரேன்..”

“ஓகே சார்..குட் நைட்”.

கூட்டம் அனைத்தும் கலைந்து மீண்டும் கடலன்னைக்கு ஓய்வு தந்திருந்தனர் அனைவரும். கடிகாரத்தில் நேரத்தை பார்த்த கண்மணிக்கு தூக்கம் வந்தது. வெற்றி விஹாஷினியிடம் இன்னும் பேசிக்கொண்டு இருந்தான்.

“ ஐ மிஸ் யூ டூ டீ பட்டு” என்று அவன் கொஞ்சுவதை பார்த்து புன்னகைத்து கொண்டாள் அவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.