அவன் அப்படி கேட்டதும் வெட்கத்தோடு சிரித்தாள்... பின்.. "உங்களில் பாதியா இருக்கத்தான் நான் ஆசைப்பட்றேன் பிருத்வி... அப்புறம் ஏன் நான் தயங்கனும்..." என்றாள்.
பின் அவன் கட்டிலில் சாய்ந்துக் கொள்ள அவளும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தோளில் சாய்ந்து கதைப் பேசினாள்...
ஒன்றா... ரெண்டா... ஆசைகள்..
எல்லாம் சொல்லவே...
ஓர் நாள் போதுமா..
அன்பே இரவைக் கேட்கிறேன்...
விடியல் தாண்டியும்..
இரவே நீளுமா..
என் கனவில்... ஆ..ஆ..
நான் கண்ட... ஆ..ஆ..
நாள் இது தான்...
கலாப காதலா...
அவனோடு விடிய விடிய பேச வேண்டும் என்றாலும்... அவள் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை... எத்தனையோ இரவுகள் அவனுக்காக ஏங்கி, அதுவும் சமீப காலமாக தன்னை விட்டு சுத்தமாக தொலைந்து போயிருந்த அந்த தூக்கம்... இன்று அவனின் அருகாமையில் இருக்கும் சந்தோஷத்திலும், நிம்மதியிலும் அவளை வந்து தழுவியது... அவனுடன் பேச ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே தூக்கம் வர ஆரம்பிக்க... அவள் பேச்சு தடைப்பட்டுக் கொண்டிருந்தது...
அதை அறிந்த பிருத்வி... அவளை தன் மடியில் படுக்க வைத்து... "மடியில படுத்துக்கிட்டே பேசு யுக்தா..." என்றான்... அவளும் அப்படியே பேசிக் கொண்டிருந்தவள்... சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கிவிட்டாள்....
அவனுக்குமே அவளுடன் இருக்கும் இந்த நேரம் முக்கியமான ஒன்று... அதனால் அவள் மடியில் உறங்கிக் கொண்டிருக்க... அவன் கட்டிலில் தலை சாய்த்து அந்த நேரங்களோடு லயித்திருந்தான்..
ஆனால் இப்படியே அவள் படுத்திருந்தால் கஷ்டமாக இருக்குமோ... என்று நினைத்தவன்... ஒரு தலையணையை போட்டு அவளை சரியாக படுக்க வைத்துவிட்டு... மின்விளக்கை அணத்துவிட்டு... மெல்லிய வெளிச்சத்தை அறையில் பரப்பினான்... அந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவள் முகம் கலங்கமில்லாமல் பால் போல ஜொலித்தது...
அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதிலோ... "இவனுடன் இவள் வாழப் போகும் இந்த வாழ்க்கையில் இவள் எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளை மனதில் வைத்திருக்கிறாள்... ஆனால் இவளைப் பற்றி இவன் என்னவெல்லாம் நினைத்துவிட்டான்... இப்போது அதையெல்லாம் நினைத்தால் கூட இவன் மேலேயே இவனுக்கு கோபம் வருகிறது... ஆனால் இவளோ துளி அளவும் இவன் மீது கோபப்படவில்லை... அந்த அளவுக்கு இவன் மேல் அன்பு வைத்திருக்கும் இவளுக்கு அதை விட பல மடங்கு சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்... பின் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு அவள் அருகிலேயே படுத்துக் கொண்டான்... அவளோ தூக்கத்தில் தாயை தேடும் குழந்தையை போல் அருகில் இருக்கும் அவனுடன் ஒண்டிக் கொண்டாள்.
ஃப்ரண்ட்ஸ் பிருத்வி, யுக்தாவை ஒரு வழியாக சேர்த்து விட்டாச்சு... இதோடு கதைக்கு முற்றும் போட்டு.. அடுத்த கதைக்கு போலாம்னு நினைச்சா... தேவாவும், வரூனும் என்னை துரத்தி துரத்தி அடிப்பாங்க... அதனால அவங்களுக்காகவும், இது வரைக்கும் நிறைய சோக அத்தியாயங்களாக கொடுத்ததால், உங்களுக்காகவும், இரண்டு அத்தியாயங்கள் மகிழ்ச்சியாக பயணிப்போம்... நன்றி.
இன்னும் இரண்டு அத்தியாயங்களில் நிறைவு பெறும்...
{kunena_discuss:933}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.