(Reading time: 38 - 76 minutes)

"ன்ன பிருத்வி நீங்க... எதுக்கெடுத்தாலும் ஸாரி கேக்கறீங்க... கல்யாணத்துக்குப் பிறகு என்னை நீங்க போதையில நெருங்கினப்போ நான்... நமக்குள்ள இப்படி தான் உறவு ஆரம்பிக்கனுமான்னு வருத்தப்பட்டது என்னமோ உண்மை தான்... ஆனா அதுக்கப்புறம் வந்த நாட்கள் அப்படியில்ல... 

நீங்க எப்பவும் கோபமா, டென்ஷனா இருப்பீங்க... அதுக்கு காரணம் நான் தான்னு நினைக்கறப்போ எனக்கு கஷ்டமா இருக்கும்... அதை எப்படி போக்கறதுன்னு எனக்கு தெரியல... அப்படி இருக்கப்போ அந்த நேரத்துலயாவது நீங்க டென்ஷன் இல்லாம ரிலாக்ஸா ஆகியிருப்பீங்க இல்ல... அதுமட்டுமில்ல உங்க பக்கத்துல இருக்கப்போ எனக்கும் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கும்... அதான் நீங்க என்னை நெருங்கிய போதெல்லாம் நான் அதை சகிச்சுக்கிட்டெல்லாம் இல்ல... விரும்பி தான் அதை ஏத்துக்கிட்டேன்... அதனால நீங்க இப்படி ஸாரி கேக்கறத விடுங்க..."

"இப்படியெல்லாம் எனக்காக யோசிக்கிற நீ என்னை விட்டு போக நினைச்சுட்ட இல்ல... அப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு...??"

"இல்லை பிருத்வி அப்படியில்ல... உங்க கூட இருந்து உங்க வெறுப்புக்கு நான் ஆளாகிடுவேனோன்னு தான் நான் பயந்துட்டேன்... அதான் அப்படி முடிவெடுத்தேன்... ஆனா உங்க நினைவுகளை யாராலேயும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது பிருத்வி... நீங்க எப்பவும் என்கூட தான் இருப்பீங்க... அந்த நம்பிக்கையோடு தான் நான் போக முடிவெடுத்தேன்... என்ன ஒன்னு... உங்க காதல் எனக்கு கிடைக்கவேயில்லையேன்னு தான் நான் வருத்தப்பட்டேன்..."

அவள் பேசிக் கொண்டிருந்த போதே ஏதோ யோசித்தவன்... பின் ஏர்ப்போர்ட்டிலிருந்து அப்படியே எடுத்துக் கொண்டு வந்து அறையில் வைத்திருந்த அவளின் ட்ராவல் பேகை எடுத்து அதை பிரித்தவன்... அதில் எதையோ சிறிது நேரம் தேடி... பின் அவன் கொடுத்த பொம்மையை அதிலிருந்து எடுத்தான்... பின் அதை அவளிடம் காண்பித்து..

"நீ இன்னும் இந்த பொம்மையை வச்சிருக்கறதா தேவா சொன்னான்.. கேட்டப்போ எப்படி சந்தோஷப்பட்டேன் தெரியுமா..?? நீ நானுன்னு நினைச்சு இதுக்கூட பேசுவியாமே..?? நீ என்னை ஞாபகம் வச்சிருப்பீயா.. இல்லையான்னு கூட தெரியாம இருந்தேன்... நீ என்னடான்னா இந்த பொம்மையையே நானா நினைச்சு வச்சிருந்திருக்க... ரொம்ப சந்தோஷமா இருக்கு யுக்தா.."

"தேவா இதையும் சொல்லியாச்சா... ஆமாம் நீங்க இதைக் கொடுத்து என்கிட்ட சொன்னதை நான் மறக்கல... அன்னையிலிருந்து இதுக்கூட நான் பேசிக்கிட்டு இருக்கேன்... அதுல எனக்கு ஒரு சந்தோஷம்.."

"ஆனா இனி இது கூட பேச உனக்கு அவசியம் இருக்காது... ஏன்னா நான் தான் உன் கூட இருக்கேனே..." என்று அவன் சொன்ன போது..

வேகமாக எழுந்து அந்த பொம்மையை வாங்கியவள்... "ஏன் இது தேவைப்படாது... நீங்க ஆஃபிஸ்க்கு போனதும்... உங்கக் கூட சந்தோஷமா இருந்த நேரங்களை இந்த பிருத்வி கிட்ட சொல்லுவேன்..." என்றாள்.

"அப்படி உன்னை நான் தனியா விட்டாத்தானே..." என்றதும் அவனை அவள் பார்க்க...

"என்னப் பார்க்குற... சீக்கிரமா நாம ஹனிமூன் போக ப்ளான் பண்ணப் போறேன்... அதுக்கப்புறம், நீயும் என்கூட ஆஃபிஸ்க்கு வர்ற... ஏற்கனவே நீ இல்லாதப்ப அந்த கவலையில ரெண்டு,மூனு ப்ராஜக்ட் கை நழுவி வரூன் கம்பெனிக்கு போய்டுச்சு... ஏதோ ஃப்ரண்ட் ஆச்சே... நம்ம வீட்டு மாப்பிள்ளையா வரப் போறானேன்னு நான் விட்டுட்டேன்... ஆனா இனி முடியாது... தீவிரமா தொழில்ல இறங்கனும்... நீயும் என்கூட ஆஃபிஸ்க்கு வரனும்... ஆஃபிஸ்லையும் வீட்டிலேயும் நாம ஒன்னாவே இருக்கப் போறோம்..." என்று சொல்லி அவள் இரு தோள்களிலும் அவன் கைப்போட...

அந்த நிலையில் இருந்தப்படியே... "ம்ம் அதெல்லாம் இப்போ நான் உங்கக் கூட ஆஃபிஸ்க்கு வரல... " என்றவள்... "அது நம்ம பிரணதிக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யனும்... கவிக்கும் எப்படியோ கல்யாணம் முடிவாயிடும்... அதுவரைக்கும் நான் அவங்கக் கூட கொஞ்ச நேரம் செலவளிக்கனும்... அப்புறம் அத்தை நான் இல்லாம தனியா கஷ்டப்பட்றுப்பாங்க... அதனால அவங்கக் கூட இருக்கனும்... அம்மா, சாவிம்மாவை அடிக்கடி பார்க்கனும்... அதனால பிரணதி, கவி கல்யாணம் முடியட்டும்... அப்புறம் நான் ஆஃபிஸ்க்கு வர்றேன்..." என்று அவள் சொல்ல...

"மக்களெல்லாம் பிருத்வி தான் யுக்தாவை கஷ்டப்படுத்துறதா நினைச்சுப்பாங்க... ஆனா யாருக்கு தெரியும்...?? ஆரம்பத்துல இருந்து பிருத்வியை விட்டு பிரிஞ்சு நியூயார்க் போனதுல இருந்து யுக்தா தான் பிருத்வியை கஷ்டப்படுத்தியிருக்கா... இதோ இப்பவும் அப்படி தான் செய்யறா.. மக்களே எல்லோரும் பார்த்துக்கங்க..." என்றான்.

"போதும் போதும்... நீங்க தானே தண்டனை வேணும்னு சொன்னீங்க... இது தான் நான் உங்களுக்கு கொடுக்கும் தண்டனை..." என்று அவள் கூறியதும்... அவள் தோள்களில் இருந்து கையை எடுத்தவன்... அவளை பின்னாலிருந்து அணைத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.