(Reading time: 38 - 76 minutes)

னால் இப்போது இவன் பேசுவதை கேட்டதும்... என்னையே நினைத்துக் கொண்டிருந்த இவனின் எண்ண அலைகள் தான் எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்தது போல என்று நினைத்தாள்...

இவன் பேசிக் கொண்டிருப்பதை அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பதை கண்டவன்... "என்ன யுக்தா எதுவும் பேச மாட்டேங்கிற.." என்று கேட்டதும் தன் மனதில் நினைத்ததை யுக்தா சொன்னாள்... அதை கேட்ட அவனோ...

"ம்ம்.. நீ சொல்றது போலக் கூட இருக்கலாம்... ஆனா நீயும் என்னை பத்தி தானே நினைச்சிருப்ப... அதை கூட உணராத அளவுக்கு தான் நான் இருந்திருக்கேன்...

அந்த சப்னாவிற்கு கூட தெரிஞ்சிருக்கு... இந்த சம்யுக்தா இந்த பிருத்விக்காக பொறந்திருக்கான்னு... ஆனா அது கூட தெரியாத மரமண்டையா நான் இருந்திருக்கேன்.. நீ வந்ததுக்குப் பிறகும் கூட நான் எதையும் உணராம... உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன்... வார்த்தைகளால காயப்படுத்தியிருக்கேன்... அதுக்கு எனக்கு எதுவும் தண்டனை கிடைக்காதது தான் எனக்கு கஷ்டமா இருக்கு..."

"என்ன பிருத்வி.... ஏ இப்படியெல்லாம் பேசறீங்க... நான் தப்பு செய்ய போய் தானே நீங்க என் மேல கோபப்பட்டீங்க... கேக்ல போதை மருந்து கலந்தது என் தப்பு தானே..." ஏனோ  இப்போதும் இவள் குற்றமற்றவள் என்று அவனிடம் அவளுக்கு சொல்ல தோன்றவில்லை... ஏற்கனவே தண்டனை கிடைக்க வேண்டும் என்று சொல்பவனிடம்... நான் செய்யாத தப்புக்கு நீ என்னை குற்றம் சாட்டினாய் என்று அவளுக்கு அவனிடம் சொல்லவே தோன்றவில்லை...

ஆனால் அவனுக்கு தான் அது தெரியுமே... அவள் அப்படி சொன்னதும்... அவளை வியப்பாக பார்த்தவன்... அவள் தலையை மெல்ல கோதினான்...

"இப்பக் கூட இந்த தப்பை நீ செஞ்சதா சொல்றல்ல... எப்படி யுக்தா செய்யாத தப்புக்கு நீயே உன்மேல பழியை தூக்கிப் போட்டுக்குற..." என்று அவன் கேட்டதும் ஒன்றும் புரியாதவள் போல் அவள் பார்த்தாள்...

"என்னப் பார்க்குற... இதை நீ செய்யலன்னு எனக்கு தெரியும்... இதை யார் செஞ்சாங்கன்னு கூட எனக்கு தெரியும்..."

"என்ன பிருத்வி சொல்றீங்க... இது செஞ்சது யாருன்னு தெரியுமா..?? நான் இது ஏதோ தவறுதலா நடந்த ஒரு விஷயம்னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்... நீங்க இப்படி சொல்றீங்க.. இதை யார் செஞ்சது பிருத்வி.."

"வேற யாரு... எல்லாம் அந்த சப்னா தான்.." என்றவன்... சப்னா கூறிய அனைத்தையும் அவளிடம் கூறினான்..

அதைக் கேட்டவளுக்கு அதிர்ச்சி தான்... "என்ன சொல்றது பிருத்வி.. வரூன் சொன்னதை வச்சு, சப்னாவை புரிஞ்சிக்கிட்டாலும்... உங்க மேல அவளுக்கு இருக்க காதலாவது உண்மையா இருக்கும்னு நினைச்சேன்... ஆனா இப்போ நீங்க சொல்லும் போது தான்... அவ எவ்வளவு மோசமானவளா இருந்திருக்கான்னு தெரியுது... நம்ம பண்ண தப்புல அவ ஏமாந்துட்டாலேன்னு நான் கவலைப்பட்டேன்.. அதுக்காக தான் அன்னைக்கு உங்கக்கிட்ட கோபமா பேசி... இந்த பழியை என் மேலேயே போட்டுக்கிட்டேன்... ஆனா அவ இப்படி இருந்திருக்காளே..."

"நான் உன் மேலே என்ன பழியை சுமத்தினேனோ அதெல்லாம் அவ செஞ்சிருக்கா... அது தெரியாம உன்னை நான் வருத்தப்பட வச்சிருக்கேன்...  ஸாரி யுக்தா... ஆனா இதுக்கு கூட என்மேலே நீ கோபப்படாம இருப்பது தான் எனக்கு குற்ற உணர்வா இருக்கு... எனக்கு இதுக்காக ஏதாவது தண்டனை கிடைக்கனும்..."

"ஓ.. இதுக்கு தான் தண்டனை கிடைக்கனும்னு சொன்னீங்களா..?? நிஜமாவே எனக்கு இதுல உங்க மேல கோபம் இல்லை பிருத்வி... அப்போ உங்களுக்கு எங்க ரெண்டுப்பேரையும் ஏமாத்திட்ட குற்ற உணர்ச்சி... அதனால தான் நீங்க அப்படியெல்லாம் பேசுனீங்க... என்னால உங்களை புரிஞ்சிக்க முடிஞ்சிது... அதனால நீங்க இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க.."

"நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசே கேக்கல யுக்தா... அத்தனை பேர் முன்னாடி நிக்க வச்சு உன்னை எப்படியெல்லாம் பேசிட்டேன்... அதுக்கு மன்னிப்பு கேக்க தான் நான் ஏர்ப்போர்ட்டுக்கே வந்தேன்... ஆனா அங்க உன்னைப் பார்த்ததும்... என்னோட மனசுல இருக்கறதெல்லாம் வெளிய வந்துடுச்சு... அதுமட்டுமில்லாம ஏர்போர்ட்ல பல பேர் முன்னாடி இதை பேச வேண்டாம்னு நினைச்சேன்...

ஆனா எல்லாருக்கும் முன்னாடி உன்னை அசிங்கப்படுத்தினதுக்கு... எல்லார் முன்னாடியும் உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்... அத்தை, மாமா, அம்மா, அப்பா, சாவித்திரி அத்தை, கவி எல்லாருக்கும் முன்னாடியும் நீ எந்த தப்பும் செய்யலன்னு சொல்லனும்... அப்போ தான் எனக்கு திருப்தியா இருக்கும்..."

"இல்லை பிருத்வி... அப்படி எதுவும் செஞ்சிடாதீங்க... பிருத்வி... நமக்குள்ள அன்னைக்கு நடந்ததுக்கு சப்னா தான் காரணம்னு அவ மேல பழியை தூக்கிப் போட முடியாது... போதையில நம்ம புத்தி மழுங்கியிருந்தாலும்... அன்னைக்கு நடந்ததெல்லாம் ஞாபகம் வச்சிக்கிற அளவுக்கு தான் நாம இருந்திருக்கோம்... நாம கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டோம்... அதனால அதுக்கு நாம பொறுப்பில்லைன்னு சொல்ல முடியாது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.