(Reading time: 38 - 76 minutes)

"தேவா அப்போ நீங்களும் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப்போறீங்க... வாழ்த்துக்கள் ப்பா.." என்று செந்தில் கைகுலுக்க.. வளர்மதியும் சங்கவிக்கு வாழ்த்து சொன்னார்...

பின் தேவாவின் அருகே வந்த சுஜாதாவோ... " தேவா... முன்னாடியே உனக்கும் கவிக்கும் கல்யாணம் செய்யனும், அதே போல பிருத்விக்கும் யுக்தாக்கும் கல்யாணம் செய்யனும்னு உங்க மாமாக்கிட்ட சொல்லுவேன்... ஆனா நடுவுல உங்க அம்மா பண்ண குழப்பத்துல நான் அந்த பேச்ச எடுக்கல... இப்போ நான் ஆசைப்பட்டா மாதிரியே நடக்கப்போகுது... ரொம்ப சந்தோஷமா இருக்கு..." என்றாள்.

"ஆமாம் தேவா... யுக்தா உன்னை வேண்டாம்னு சொன்னதும்... கவியை உனக்கு கல்யாணம் செஞ்சுக் கொடுக்கலாம்னு சுஜா சொன்னா... நான் தான் லஷ்மி அப்படி பேசினதால வேண்டாம்னு சொல்லிட்டேன்... இப்போ தான் உங்க ரெண்டுப்பேருக்கும் இதுல விருப்பம்னு தெரிஞ்சிடுச்சே.. கவலைப்படாதீங்க ஜமாய்ச்சிடலாம்..." என்ற மாதவன்... சாவித்திரியை பார்த்து...

"என்ன அண்ணி... ஒன்னும் பேசமாட்டேங்கிறீங்க.." என்று கேட்டார்...

"என்ன சொல்றது... இப்போ தான் பிருத்வியும் யுக்தாவும் சேர்ந்ததும்... அடுத்து கவிக்கும் நல்லப்படியா கல்யாணம் முடிக்கனுமேன்னு நினைச்சேன்... இப்போ இந்த விஷயத்தை கேக்க சந்தோஷமா தான் இருக்கு... ஆனா லஷ்மி இதுக்கு ஒத்துப்பாளான்னு தான் தெரியல..." என்று கவலையாக கூற... கவிக்கும் மனதில் அந்த கேள்வி இருந்தது...

"என்ன அண்ணி... பிள்ளைங்க விருப்பப்படும் போது... நாம லஷ்மிய சரிப் பண்ணிடலாம் விடுங்க... நானே அவக்கிட்ட பேசறேன்..." என்று மாதவன் சமாதானப்படுத்தினார்..

"சரி அப்போ நாம எல்லோரும் கிளம்புவோமா..?? ரொம்ப நேரம் இங்கேயே இருந்தா... ஏதோ சினிமா கிளைமாக்ஸ் ஷூட்டிங் எடுக்கறதா நினைச்சுக்கப் போறாங்க..." என்று வரூன் சொன்னதும்...

"என்ன வரூன்... ஹீரோ, ஹீரோயின் சேர்ந்ததும் கதையை முடிச்சு... நம்மள டீல்ல விட்றப்போறாங்க..." என்றான் தேவா...

"ஆமாம்ப்பா நானும் பிரணாவும் கூட 7வருஷமா லவ் பண்றோம்... எங்கள டீல்ல விட்டுடாதீங்க.." என்று வரூன் சொன்னதும்... அவனை கை முட்டியால் குத்தியவள்... அவன் பார்த்ததும்... "அப்போ நான் சின்னப்பொண்ணு.. என்ன பேசறீங்க நீங்க..." என்றாள் பிரணதி.

"ஆமாம் அவங்க மட்டும் 12வருஷ லவ்ன்னு சொல்லிக்கிறாங்களே... அப்போ அவங்க பெரியவங்களா.." என்று வரூன் கேட்டதும்... எல்லோரும் சிரிக்க... யுக்தாவும் பிருத்வியும் கண்களாலேயே காதலை பரிமாறிக் கொண்டனர்...

"சரி எல்லோரும் கிளம்பளாமா..?? இன்னிக்கு என்னோட மகனும், மருமகளும் சேர்ந்ததால... எல்லோருக்கும் வடை பாயசத்தோட என் கையால நைட்டு விருந்து... வாங்க போவோம்..." என்று வளர்மதி சொன்னதும்...

"அதுக்கும் முன்னாடி நாம வேற ஒரு இடத்துக்கு போகனும் மதி..." என்றாள் சாவித்திரி.

முருகன் சன்னிதானத்துல இரண்டுப்பேருக்கும் திருமணம் ஆகியும்... இருவரும் அந்த முருகனை வழிபடாமல் வந்தது சாவித்திரிக்கு ஒரு குறையாகவே மனசுக்குள் இருந்தது... அதை இப்போது அவள் சொல்ல... எல்லோரும் வடபழனி முருகன் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்குப் போகலாம் என்று முடிவெடுத்தனர்.

முருகன் சன்னிதானதுக்கு முன் இருவரும் ஜோடியாக நின்று மனநிறைவுடன் கண் மூடி முருகனை வேண்டிக் கொண்டிருக்க... அதை முருகன் எப்போதும் போல சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்...

அவர்கள் இருவரையும் அவர் ஏன் சோதிக்க நினைத்தார்... யுக்தாவின் காதலில் உள்ள அந்த நேர்மையை சோதிக்க நினைத்தாரா..?? இல்லை தன் மனதில் இருப்பது தெரியாமலேயே தினம் யுக்தாவிற்காக வேண்டிக் கொள்ளும் பிருத்வியின் காதலை அவன் உணர வேண்டும் என்று நினைத்தாரா.?? எதுவோ.. இனி அவர்கள் வாழ்வில் இருவருக்கும் எந்த பிரச்சனையுமில்லை என்ற புன்னகை தான் முருகனிடத்தில்...

பின் அனைவரும் வீட்டிற்கு செல்ல... சாவித்திரியின் மனதில் ஒரு குறை இருந்தது போல... சுஜாதாவின் மனதிலும் ஒரு குறை இருந்தது... மணமக்களாக அன்று இருவரும் இந்த வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கவில்லை... அதிலும் மதி யுக்தாவிற்கு ஆரத்தி எடுக்கவில்லை என்பது தான் அவளின் குறை...  மதிக்கே அது ஒரு குறையாக தான் மனசில் இருந்தது...

அவர்கள் மனக் குறை நீங்க... வளர்மதி இருவருக்கும் ஆரத்தி எடுத்தாள்... பிருத்விராஜின் காதல் மனைவியாக அந்த வீட்டில் திரும்பவும் வலது காலை எடுத்துவைத்தாள் சம்யுக்தா...

பின் பெரியவர்களில் பெண்கள் மூவரும் சமையற்கட்டில் விருந்து தயார் செய்துக் கொண்டிருக்க... மாதவனும் செந்திலும் தனியே பேசிக் கொண்டிருந்தனர்... சிறியவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஒருவரையொருவர் கலாட்டா செய்துக் கொண்டிருந்தனர்...

சாப்பிட்டு முடித்ததும் பிருத்வியும், சம்யுக்தாவும் பெரியவர்களோடு பேசிக் கொண்டிருக்க... மற்றவர்களை காணவில்லை...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.