(Reading time: 32 - 63 minutes)

ல்லாருக்கும் பாரமா இருக்கிறதுக்கு அந்த ஆண்டவன் என்னை எடுத்துகிட்டா என்ன?’ என்று எங்கோ ஆரம்பித்த நினைவு வேறு எங்கோ செல்ல.. அவர் வருத்தத்தை களைவது போல,

“ஹாய்!!! ஐ எம் அஞ்சனா!”, என்று துள்ளலாக அறிமுகப் படுத்தியவள் முகத்தில் மீண்டும் அதே புன்னகை - ஆர்யமனிடம் போராடி தோற்றவளின் பார்வை அவர் மீது சென்றதும்.. இன்முகமாய் மாற....

‘என்ன இது! இந்த பொண்ணு இப்போ தானே பாவம் போல இருந்தது.. சட்டுன்னு அதை மறந்துட்டு சிரிக்குதே’, என்று சிவநேசனின் எதிர்மறை எண்ணங்கள் பின் சென்று வியப்பு மட்டுமே நிலைக்க....

இப்பொழுது தான் கவனித்தார் - ஆர்யமனின் நெடிய உருவத்திற்கு அவனை விட சில அங்குலங்களே குறைவான அஞ்சனா மிகவும் பாந்தமாக பொருந்தி இருப்பதை!!!

சற்று முன் தன் எதிர்காலத்தை அழித்து விட வேண்டிய அதே உள்ளம் இப்பொழுது மகன் எதிர்காலத்தை காண ஆவல் கொள்ள வைக்க.. அப்போது,

“நீங்க ஆர்யாவோட தாத்தாவா?”, என்ற அஞ்சனாவின் கேள்வி அவரை திகைப்பூட்டியது! அதுவும் அவள் சொன்ன தாத்தாவில் திகைத்து தான் போனார் என்றாலும்.. அதை விட.. அவள் சொன்ன ஆர்யாவும்... அதை கண்டு கொள்ளாத தன் மகனையும்  பார்க்க வியப்பாக இருக்க..

“உங்க பேரன் சரியான சண்டைக்காரன் தாத்தா! என் கூட காயாம்! பேச மாட்டாராம்! கொஞ்சம் சொல்லி வைங்க!”, என்று அவள் அடுக்க..

ஆர்யமனை ஆராயும் பார்வை பார்த்தார். எந்த உணர்ச்சியும் காட்டாது கவனமாக மறைத்தவன் முகத்தில் அவரால் எதுவும் கண்டுபிடிக்க முடியாது தான்!!!

ஆனால், அவன் நடை???!!!!

அசைய முடியாமல் அத்தனையும் முடங்கி போன பின்... மற்ற அசைவுகளை உன்னிப்பாக கவனிக்க பழகி விட்ட அவர் மூளை  கோபத்தில் வேக நடையிட்டவன் .... அவள் பேச ஆரம்பித்ததும்...  அவன் வேகம் தானாக குறைந்ததை கண்டு கொண்டது!

அதற்குள் ஹை டெசிபலில் அலறிக் கொண்டிருந்த அந்த மண்டப பந்தலுக்கு மூவரும் வந்து விட.. அவர்களை விட்டு விலகி குடையை மடக்க அஞ்சனா திரும்பியதும்..

தன்னையே யோசனையாக பார்த்துக் கொண்டிருந்த தந்தையின் மனதில் அஞ்சனாவைப் பற்றிய எண்ணம் ஓடுகிறது என்பது ஆர்யமனுக்கு புரிய, அவரைப் பார்த்து முறுவலிப்புடன்,

“அது ஒரு லூசுப்பா! கண்டுக்காதீங்க”, என்று சொல்லி விட்டு தன் இயல்பான வேகத்தை மீட்டவனாக தன் நடையை துரிதப்படுத்த... சிவநேசன் முகத்தில் ஒரு நமுட்டு சிரிப்பு சற்றே கோணலாய் படர்ந்தது!!!!

மழைக்கு ஒதுங்கி அஞ்சனாவை கண்களால் கண்காணித்த படி வாயிலிலே நின்று விட்ட சைலஜா... அவள் வந்ததும்.. ஓடிச் சென்று

“என்ன குட்டி? இப்படி போய் நனைஞ்சிட்டு வந்திருக்க? யார்  அவங்க?”, என்று புடவைத் தலைப்பால் அவள் தோள்பட்டையை துவட்டி விட்டே  விசாரிக்க.. அப்போது,

“மாப்ளே! மாப்ள!!!”, என்று அழைத்த படி ஓடி வந்த வாசுவின் குரல் அங்கிருந்த ஸ்பீக்கர் சத்தத்தில் சன்னமாக கேட்க... அவளை விட்டு பல எட்டுகள் தள்ளி சென்று விட்ட ஆர்யமனுக்கோ சுத்தமாக கேட்கவில்லை!

ஆம், வாசுவும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தான். ஆர்யமனுடன் அல்ல. அஞ்சனாவுடன்!!!

போலீஸ் கமிஷனரான சைலஜாவின் கணவருக்கு மாப்பிள்ளை வீட்டார்  பழக்கம்! தனக்கு முக்கிய வேலை இருந்ததால், தன் மனைவியை போக சொல்ல.. அவர் தனக்கு துணையாக அஞ்சனாவை கூப்பிட.. இருவருக்கும் துணையாக ஒரு கான்ஸ்டபிள் அனுப்ப பட்டார்! அந்த கான்ஸ்டபிள் தான் வாசு!

ஆர்யமனை அழைத்த பின் தான் வழியில் இருந்த வீல் சேரைப் பார்த்தவன்.. ஒரு கையால் குடையைப் பிடித்துக் கொண்டு மறு கையால் அதை அப்புறப் படுத்த முயல... அவனுக்கு உதவ ஓடி வந்த அஞ்சனா,

“என்ன கான்ஸ்டபிள் ஸார்? கல்யாண மாப்பிள்ளை உங்களுக்கு பழக்கமா? உள்ளே நுழையுறதுக்கு முன்னாலே மாப்ளே மாப்ளேங்கிறீங்க!”, என்று கேட்ட படி  அவளும் ஒரு கை கொடுத்து அந்த வீல் சேரை தள்ள...  அந்த உதவிக்கு,

“தேங்க்ஸ் மேடம்!!!”, என்று அவளைப் பார்த்து நன்றி  சொல்லி விட்டு.. “என் ஃப்ரண்ட்டை தான் அப்படி கூப்பிட்டேன்!”, என்றான் ஆர்யமனை பார்த்த படி.. அவன் பார்வையைத் தொடர்ந்த அஞ்சனா..

“யாரு? ஆர்யாவா??? உங்க ஃப்ரண்ட்டா?”, என்று வியப்பாய் கேட்டதும் திகைத்த வாசு

‘ஆர்யாவா!!! இதை மட்டும் அவன் கேட்டான்??? கடிச்சு கொதறிடுவானே...’, என்று எண்ணிய படி ஆமாமென்று சொன்னது தான் தாமதம்.. அவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.