(Reading time: 32 - 63 minutes)

நீங்க சொல்றதை பார்த்தா ஆசையா தான் இருக்கு! ஆனா...“, என்று யோசித்தவளுக்கு நன்றாக தெரியும்! பவதாரிணி இரவில் வெளியே செல்ல அனுமதி கொடுக்க மாட்டார் என்பது!

“ஸாரி ஃபிலோ! எட்டு மணிக்குள்ளேன்னா கூட வீட்டிலே ஏதாவது சமாளிச்சிடுவேன்! பப்லே தி ஃபன் ஸ்டார்ட்ஸ் அட் நைட் தானே! உங்க கூட ஜாயின் பண்றது கஷ்டம்!”, என்றாள் வெள்ளந்தியாக!

“என்ன அஞ்சனா! லெட்ஸ் பி ஃப்ரண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு என் பர்த் டேக்கு வர இவ்வளோ யோசிக்கிறே! எட்டு மணிக்குள்ளே உன்னை வீட்டில் விடணும் அவ்வளவு தானே! நானே கூட்டிகிட்டு போய்.. நானே கூட்டி வந்து விடுறேன்! ஒகே வா?”,

சட்டென்று ஒருமைக்கு மாறி உரிமையாக கேட்டாள் ஃபிலோமினா! அவள் அருகில் நின்றவன் தனக்குள் சிரித்தான். ‘மப்புல இவ கரை சேர்க்கிறதே கஷ்டம்... இதில்... ட்ராப் வேற செய்வாளா?’, ஆனால் தடுக்கவில்லை!

அஞ்சனாவிற்கு வீட்டிற்கு போனால்.. மறுபடியும் அதே தனிமையில் இருக்க வேண்டுமே..  அவளுக்கும் மாற்றம் தேவைப் பட ஃபிலோமினாவுடன் செல்ல ஒத்து கொண்டதுமே...

‘ஹை க்ளாஸ் ஹாட் சிக் ஜாயின்ஸ்  அஸ் டுநைட்! யாரை அவளை கரக்ட் பண்றான்னு பார்க்கலாம்’, என்ற செய்தியை தன் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தான் ஃபிலோமினாவின் நண்பன்..

பப்பில் ஒரு கூட்டம் உற்சாக வெள்ளத்தில் ஆடித் திளைக்க... பாரை ஒட்டி அமைக்கபட்டிருந்த உயர்ந்த பார் ஸ்டூல்களில் அமர்ந்து மதுவை பருகிய படி அதை வேடிக்கை பார்த்த படி ஒரு கூட்டம் இருக்க...

அங்கிருந்த சோபாவிலும்..  டேபிள்களிலும்.. சிறு சிறு கும்பலாக அமர்ந்து மதுவை குடித்த படி அரட்டை அடித்து கொண்டு ஒரு கூட்டம் இருக்க.... ஒரு தனியறையில் நீண்ட குழாயில் போதையை ஊதி தள்ளிய படி ஒரு கூட்டம்..

அப்படி ஒரு சிறு கும்பலை நோக்கி.. ஃபிலோமினாவுடன்.... மெல்லிய ஸ்பாகடி ஸ்ட்ராப் கொண்ட முட்டிக்கு மேலே ஏறியிருந்த அந்த க்ளாசிக் ப்ளாக் காக்டெயில் ட்ரெஸில்... ஹை ஹீல்ஸ்ஸில்  ஒய்யாரமாக நடந்து வந்தாள் அஞ்சனா!

ஆம், அஞ்சனா பார்ட்டி உடைக்கு மாறியிருந்தாள்! தன் டிரைவரை அனுப்பி விட்டு ஃபிலோமினாவுடன் ஸ்கூட்டியில் கிளம்பிய அஞ்சனாவிடம்,

“பார்ட்டிக்கு இப்படி கேஸ்வல் வியர்ல போக முடியாது!”, என்று தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தன் வாட்ரோபில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொள்ள சொல்ல..

“இவ பார்ட்டி வியர் எல்லாம் ஸ்விம் சூட் கவர் அப் மாதிரி இருக்கே”, என்று தயங்கினாலும், ‘இது தான் இங்க ட்ரெஸ் கோட் போல’ என்று எண்ணி அதிலிருந்த ஒன்றை அணிந்து வந்தாள்!

ஃபிலோமினாவுடன் ஒய்யார நடையிட்டு வந்த அஞ்சனாவை அத்தனை கண்களும் மொய்த்தன!

இவர்கள் அலுவலக நண்பனிடம், “இந்த குட்டி தான் நீ சொன்ன அந்த ஹைகிளாஸ் ஹாட் சிக்கா?”, கேட்டான் அவள் வதனத்தை பார்வையால் அளந்த படி.. கும்பலில் இருந்த ஹரிபிரசாத்! ஹரிபிரசாத் ஒரு அரசியல் புள்ளியின் வாரிசு!

“ஆளு செமையா தான்டா இருக்கிறா..... நான் கரக்ட் பண்றேன்”, என்றான் இன்னொருவன். அவன் சினிமா நடிகரின் வாரிசு!

“ஹே.. நான் பேசிகிட்டு இருக்கேன்லே... நீ ஏன் மூக்கை நுழைக்கிறே!”, அதட்டினான் ஹரிபிரசாத்..

“நான் ஏன் கூடாது.. ஐம்பதாயிரம் பெட்! இன்னைக்கு அவளை முடிக்கிறேன்!”, என்று தீர்க்கமாக அஞ்சனாவை பார்த்துக் கொண்டே அந்த சினிமா புள்ளி சொல்ல..

“ஓகே டீல்! அவ யாருகிட்ட மடியுறான்னு தான் பார்த்துடுவோமே”, என்று ஹரிபிரசாத் சிகரெட்டை பத்த வைக்க.... அதற்குள் பெண்கள் இருவரும் அந்த கும்பலை நெருங்கி இருக்க...

அத்தனை பேரும் கோரஸாக ஃபிலோமினாவிற்கு வாழ்த்து சொல்ல...

அப்படியே கேக் கட்டிங்!!! ஆரவாரத்துடன் பார்ட்டி அரங்கேற... அறிமுகப் படலம்.. எல்லாரும் நட்பாக பேசுவது போல தான் தோன்றியது அஞ்சனாவிற்கு! அப்பொழுது, அந்த சோபாவில் அமர்ந்திருந்த படியே...

“கமான் பேர்த் டே பேப்”, என்று ஒருவன் ஃபிலோமினாவை  திடுமென இழுத்து மடியில் அமர வைக்க... அவனுக்கு பக்கத்தில் உள்ளவனோ தான் உரிந்து கொண்டிருந்த நீண்ட குழலை அவள் வாயில்  கொடுக்க.. அவன் மீது சரிந்து அமர்ந்து படி..

“தம் அடிக்கிற கெத்தை பார்க்கணும்னு சொன்னியே!”, என்று அஞ்சனாவிடம்  சொல்லிக் கொண்டே அதை உள்வாங்கி இழுத்தாள்...

ஒருவன் மடியில் அமர்ந்து.. மற்றவன் தோளில் சரிந்திருந்த ஃபிலோமினாவைக் கண்ட அஞ்சனா, ‘இன்டிமேட் ஃப்ரண்ட்ஸ் போல’, என்று தான் எண்ணிக் கொண்டாள். மேற்கத்திய கலாச்சார முறை அவளுக்கு அறிமுகமான ஒன்று தானே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.