(Reading time: 32 - 63 minutes)

ன் தோள்பட்டை ஸ்ட்ராப் சற்றே இறங்கி இருப்பதைக் கண்டதும்.. 

“செல்ஃபி போதும்ன்னு சொன்னேனே ப்ளீஸ்!!!!”, என்று அனிச்சையாக அதை சரி செய்த கை மீது அழுத்தமாக அவன் கை பதியவும் திக்கென்றது... அஞ்சனாவிற்கு!!! ஆண் பிள்ளைகளுடன் வளர்ந்தவள் என்றாலும்.. இது வேறு தொடுதல் வேறு வகை...

‘பேட் டச்சோ’, என்று மூளை சந்தேகம் எழுப்பும் முன்னே... தற்காப்பு உணர்வு  விழித்துக் கொள்ள... அனிச்சையாக தன் கையை அவனிடமிருந்து விலக்க முயல.. அவனோ அவள் கையை இன்னும் அழுத்தமாக பற்றி அந்த ஸ்ட்ராப்பை இன்னும் இறக்க முயன்ற படி..

“இது செல்ஃபி வீடியோ பேபி... நம்ம ஆட்டத்தை ரெகார்ட் பண்றேன்”, என்றானே பார்க்கலாம்!!!!

அடிவயிற்றில் பிரளயமாய் அட்ரினலின் சுரந்து.. ‘தாக்கு இல்லை தப்பி ஓடு என்று தேகம் தயாராக... இப்படி ஒரு அத்துமீறலை எதிர்பார்க்காதவளோ அதிர்ச்சியில் அதை செயல்படுத்த திராணியற்று... அப்படியே விக்கித்து போய் நின்றாள்..

நேரம் போவதே தெரியாமல் கணினி ஆழ்ந்திருந்தவனை.. தினேஷ்ஷின் அழைப்பு கலைக்க... “கல் மார்கழி உத்சவ்.. சோ ரங்கோலி வொர்க் போகுது! ஹம் கொஞ்ச டைம் கே பாத் ஸ்டார் ஹோகா!”, என்றதும்.. இவன் மணியைப் பார்க்க.. அது ஆறரை என்று காட்ட... அனிச்சையாக அவன் கால்கள் ஜன்னலருகே சென்று வெளியே தெரிந்த  பார்க்கிங் லாட்டை ஆராய்ந்து விட்டு...

‘லூசு!! ஊருக்கு போறதுக்கு முன்னாலே ஒரு வார்த்தை பேசிடலாம்ன்னு பார்த்தா... ஷார்ப்பா கிளம்பிட்டா’, என்று தனக்குள் சொல்லி கொண்டவனை தினேஷ் மீண்டும் அழைக்க.. தானே அவனைப் பார்க்க வருவதாக சொல்லி விட்டு ரிசப்ஷனிற்கு சென்றான்..

அங்கே ரிசப்ஷனிஸ்ட் கோலம் போட்டுக் கொண்டிருக்க.. தினமும் அவளுடன் தான் வீட்டிற்கு செல்லும் கோகிலா - அவளுக்காக காத்திருக்கும் நேரத்தில் தன்னால் முடிந்த உதவியை செய்து கொண்டிருந்தாள்.

மிகவும் சுமாரான அந்த கோலத்தைப் பார்த்து..

“இது கோலமா??”, என்பது போல தினேஷ்ஷைப் பார்க்க இதைப் போட ஆள்  கிடைச்சதே பெரிய விஷயம் என்றதும்...

அவர்களை போக சொல்லி விட்டு.. கோலப் பொடியை கையில் எடுத்து குனிந்தவன் விரல்களுக்கு இடையே அதை சீராக செலுத்தி.. புள்ளிகள் வைத்து.. பின், விறு விறுவென அதை சுற்றி அடர் கோடாக இழுத்து கோலமிட்ட நேர்த்தியை...

கண் கொட்டாது பார்த்திருந்தனர் அந்த இரு பெண்களும்.... அதில் கோகிலா இன்னும் ஒரு படி மேலே போய்..

“உங்க வைஃப்பா வரப் போறவங்க கொடுத்து வைத்திருக்கணும்! சும்மா கலக்குறீங்க ஆர்யமன்”, என்றாள்!!!! அவன் மறு பாதி காக்டெயில் கலக்குவதில் தான் கில்லாடி என்பது தெரியாமல்!

ஆர்யமனுக்கோ.. அவள் விளித்த ‘ஃவைப்’ - அவன் மனதை பப்பியை சுற்றி  வளைய வர வைக்க.. மனதின் தேவையோ.. வயதின் தேவையோ.. எதையோ தீர்க்கவென உள்ளே பதிந்தவள்  இப்பொழுது மாற்றான் மனைவியாக போகிறாள் என்ற பின் எண்ணங்கள் கூட தொடக் கூடாதென  அதை அழிக்க முடியாமல்... ஒதுக்கி தள்ளி விட்டு..

அந்த தேர் வடிவிலான நெளிவு கோலத்தை போட்டு எழும் பொழுது..

அவன் அலைபேசி சிணுங்கியது.. அழைத்தது பவதாரிணி! தெரியாத எண்ணில் வந்த அழைப்பு என்ற யோசனையுடன் எடுக்க...

“நான் அஞ்சனா அம்மா! ஹர்ஷா ஃப்ரண்ட் தானே நீங்க...”, என்று ஆரம்பிக்க... ஹூம் அடுத்தது இவங்களா?? மொத்த குடும்பத்துக்கும் என் காண்டாக்ட்டை காண்ட்ராக்ட்டுக்கு விட்டுட்டானே இந்த ஹர்ஷ்... என்று எண்ணும் பொழுது,

“அஞ்சனா ஃப்ரண்ட் சசி நம்பர் தெரியமா தம்பி?”, என்று அவர் கேட்டதும்.. சசி ஊரில் இல்லையே எதுக்கு திடீர்ன்னு அவ நம்பர் கேட்கிறாங்க இவன் யோசிக்கும் பொழுதே....

அவள் வீடு போய் சேரவில்லை என்றவர்..

“ஃப்ரண்ட் கூட வர்றதா டிரைவர் சொன்னார்! போன்னும் எடுக்கலை! பொம்பளை பிள்ளை இல்லையா தம்பி... அதான்”,

பெண்ணைப்  பெற்ற தாயிற்கே உரித்தான பதற்றத்தை உணர்ந்தவனாக...

“ம்மா! இங்க மழையில் ஏதாவது டிராபிக்லே மாட்டி இருப்பாங்க! பயப்படாதீங்க! நான் விசாரிச்சு சொல்றேன்”, என்ற அலைபேசியை வைத்தவனுக்கு.. உள்ளூர உண்டான பயத்தை உந்தி தள்ளி விட்டு...

‘யார் கூட போயிருப்பா..’, என்ற யோசனையாய் ரிசப்ஷனிஸ்ட்டிடம் கேட்கலாம் என்று நினைக்க... அவளோ சற்று முன் தான் கோகிலாவுடன் வெளியேறி இருந்தாள்!!!

நீ மழை!

நான் நிலம்!!

எங்கு விழுந்தாலும் ஏந்திக் கொள்வேன்!!!

இப்படி இடையிலே முடிக்க மனதில்லை.. அடுத்த அத்தியாயம் முழுமைக்கும் தலைவனும் தலைவியும் தான் காட்சியை நிறைப்பர்! உங்கள் மனதையும் நிறைப்பார்கள் என்ற நம்பிக்கையில் எழுத தயாராகி விட்டேன்! Don’t Forget to Share Your Views! Happy Reading!!!

தொடரும்

Episode 19

Episode 21

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.