(Reading time: 32 - 63 minutes)

ருந்தாலும் கேம் விளையாடி.. மற்றவர்களுடன் பேச்சு கொடுத்து ஒருவாறு சமாளித்தாள் மதியம் வரை! அதற்கு மேல் முடியாமல் வீட்டிற்கு கிளம்பி விடலாம் என்று நினைக்கும் பொழுது,

சைலஜாவின் அழைப்பு!

அவர், “அஞ்சும்மா... திடீர்னு ஒரு துக்க செய்தி! உடனே கிளம்பணும்!”, என்று பதைபதைப்புடன் ஆரம்பிக்க... திகைத்த அஞ்சு என்ன ஏதென்று விசாரிக்க..

“தூரத்து சொந்தம் தான்... பையன் சின்ன வயசு! ஏதோ கடன் தொல்லைன்னு சூசைட் செய்..”, என்று சொல்ல ஆரம்பித்தது தான் தாமதம்..

“சைலு!”, என்ற பின்னிருந்து அவர் கணவர் அதட்டவும்... சுதாரித்த  சைலஜா... பின்னர் அப்படி இப்படி சமாளித்து,

“அதான் வர முன்ன பின்ன ஆகும், நீ ஆபிஸ் விட்டு வந்ததும் சாப்பிட்டு டிவி பார்த்துட்டு இரு! நானும் சீக்கிரம் வர பார்க்கிறேன்”

என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்தவர்  தான் சொன்ன “சூசைட்” வார்த்தையிலே அவள் விதிர் விதிர்த்து போனதை அறியவில்லை!

உடல் மொத்தமும் உண்டான அதிர்வில் ஏதோ இயந்திரத்தனமாக “ஓகே ஓகே”, என்று சொல்லி விட்டு... அப்படியே தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் அஞ்சனா!

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ...

“அஞ்சு, ஆர் யு ஓகே”, என்று தன் டெஸ்கின் பக்கத்தில் இருந்தவள்  தோளைப் பற்றி கேட்டதும் கொஞ்சமாக தன்னிலைக்கு வந்தவள்..

“ஐ எம் ஓகே”, என்று அவளிடம் சொன்னாலும்..  ‘சேஞ்ச் யுவர் மூட் அஞ்சு’, தனக்கு தானே சொல்லிக் கொண்டு காஃபடேரியாவிற்கு விரைந்து  ஒரு டீயை ஆர்டர் செய்து.. அதில் மணக்க மணக்க ஏலக்காய் கலந்து...

சிறிது நேரம் அந்த வாசனையை நுகர்ந்த படி கண் மூடி தியானித்தாள்...

‘செரோடினின் குட் மூட் ஹார்மோன்! நல்ல ஸ்மெல் செரோடினினை கூட்டி மூட் ஸ்டெபிலைஸ் பண்ணும்!’, என்று நியோராலாஜி நிபுணரான தன் மாமன் கிரிதரன் ஆலோசனையில் தான் இந்த யுக்தி!

மனம் சற்றே சமன்பட, மெல்ல அந்த டீயை சுவைக்க ஆரம்பித்தாள்...

அப்பொழுது தான் சுற்றம் உணர்ந்தாலோ என்னவோ..  அவள் காதில்

“ஹேப்பி பர்த் டே”, பாட்டு வந்து விழ... அவள் கவனம் அது வந்த திசை நோக்கி சென்றது..

சற்று தள்ளி இருந்த டேபிளில் ஃபிலோமினாவுக்கு வாழ்த்து சொல்லி பாடிக் கொண்டிருந்தனர் அவளின் நண்பர்கள்!

அதைக் கண்டதும்... நொடிப்பொழுதில் மனதில் முழுமைக்கும் மகிழ்ச்சி மட்டுமே நிரம்ப அவளருகே வேகமாக விரைந்து சென்று..

“ஹேப்பி பர்த் டே ஸ்மோகிங் சூப்பர் கேர்ள்! ”, என்று வாழ்த்த சொல்ல...

அஞ்சனாவைக் கண்டதும் அவள்  வாழ்த்தை ஏற்ற ஃபிலோமினா பின் தன் நண்பர்களிடம் அவளை அறிமுகப் படுத்த...

“அந்த போர்ச்சே கார்லே வருவீங்க தானே”, என்று விசாரித்தான் அதில் ஒருவன்! அவனுக்கு மட்டுமில்லை..அந்த அலுவலகத்திற்கே அவள் வரும் உயர் ரக  காருக்கு சொந்தக்காரி என்றே அவளைத் தெரிந்து வைத்திருந்தனர்!

‘இப்படி ஹை க்ளாஸ் பொண்ணை ப்ரண்ட் பிடிச்சு வைச்சிருக்காளே..’, என்று ஃபிலோமினாவை எண்ணி பெருமிதம் கொண்ட மற்றவன்,

“ப்ரண்ட்டுன்னு சொல்றே! அப்போ இவங்களையும் ஈவ்னிங் பார்ட்டிக்கு கூப்பிடு!”, என்றான் ஃபிலோமினாவிடம்! அவளும்,

“ஆமால!”, என்று அஞ்சனாவிடம் திரும்பியவள், “பர்த்டே  ட்ரீட் ECR ல உள்ள பப்லே ப்ளான் பண்றேன்! எங்க கூட ஜாயின் பண்றியா?”, என்று அஞ்சனாவை அழைக்க..

கல்லூரி விடுமுறை நாட்களில் அமெரிக்காவிற்கு செல்லும் பொழுது அங்குள்ள பப், டிஸ்கோத்தேகளுக்கு ஹர்ஷ் தன் நண்பர்களுடன் அவளையும் அழைத்து சென்றிருக்கிறான் - ஹர்ஷைப் போலவே இவளுடன் சினேகத்துடன் பழகும் நண்பர்களுடன் - ஆட்டம், பாட்டம் கேலி கிண்டல் என்று அந்த சூழல் அவளுக்கு ரம்யமான அனுபவமே கொடுத்திருக்க.. இவர்கள் சொல்வதையும் அப்படியே எண்ணியவளாக...

“பப் லயா பார்ட்டி?  பாஸ்டன் நைட் லைஃப்  என் கசின் கூட சேர்ந்து செமையா என்ஜாய் செய்து இருக்கேன்! அது போல தான் இங்கேயும் இருக்குமா? ராக் மியூசிக்.. டான்ஸ் ஃப்ளோர்.. பார்டென்டிங்.....”, என்று ஃபிலோமினாவிடம் என்று கண்கள் மிளிர ஆர்வத்துடன் அவள் கேட்ட விதம்,

‘ஓ... ராத்திரி நல்லா ஆட்டம் போட்டவ தானா!’ என்பது போல அனைவரையும் நினைக்க வைக்க..

ஃபிலோமினாவும்,

“பாஸ்டனை விடவே சூப்பரா இருக்கும்! வந்து பாருங்க அப்போ தானே தெரியும்!”, என்ற அவள் ஆர்வத்தை தூண்டி விட..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.