(Reading time: 32 - 63 minutes)

துக்காக... பொம்பளை பிள்ளை இப்படி ஒரு சின்ன பொட்டு கூட இல்லாம இருப்பாங்களா??? இரு!!!”, என்று அலுத்துக் கொண்டவர்  குங்குமத்தை தேட... அதற்குள், ஆரத்தி எடுக்க அழைக்கபட..

“வேண்டாம் ஆண்ட்டி!”, என்று நகரப் போனவளிடம், “வேண்டாம்னு எப்பவும் சொல்லக் கூடாது!”, என்று கண்டிப்புடன் சொல்லி அதை அவள் நெற்றியில் சூட்டி விட்டார்!

சிவநேசனின் வீல் சேரை ஆர்யமனிடம் கொடுத்த வாசு, அஞ்சனாவை பற்றி பேச முடியாத அளவிற்கு பிசியாகி விட்டான் (அதாங்க சைட் அடிக்கிறது!)

அங்கு வெள்ளை வெளேரென்று இருந்த வடநாட்டு யுவதிகள் ஆரத்தி எடுத்து விட்டு திரும்புவதைக் கண்டதும் குஷியானவன்... அந்த கும்பலில் ஒரு பெண்ணிடம்  பேச்சு கொடுக்க முயன்று...

“யுவர் நைஸ் நேம்?”, என்று  கேட்க.. அவனைப் பார்த்து திரும்பிய அந்த பெண்,

“ஆஹான்!!!! யுவர் நைஸ் காம் போலோ ஃபர்ஸ்ட்!!!”, என்று விவரமாக அவன் வேலையைப் பற்றி விசாரிக்க..

“காம்??? ஓ டாட் காம்மா!!!! நான் தமிழ்மேட்ரிமெனி.காம்... நீ ஹிந்திமேட்ரிமேனி.காம்....”, என்றவன்..

“நாம  ஏன் பாரத்மேட்ரிமெனி.காம் ஆகக் கூடாது!”, என்று தன் இரு கை விரல்களையும் கோர்த்து காண்பித்து ரூட் போட முயல...

“ஹே மேன்! ஜாப் போலோ! ஆப் க்யா ஜாப் கர்தா ஹயின்”, என்று அவள் விம் போடு விளக்கிய பின்.....

“ஓ! ஜாப்!!! வேலை???”, என்று புரிந்தவனாக தலையசைத்த படி..

“ஐ எம் வாசு  ஐ. பி. எஸ்”, என்று ப்ரேக் போட... அவளோ திகைத்தவளாக,

“ஐ. பி. எஸ் ஹேயின்!!!??”, என்று நெஞ்சைப் பிடித்த படி.. தன் தோழிகளைப் பார்க்க.. அவர்களும் ஆச்சர்யமாக வாசுவைப் பார்க்க..

“ஐ. பி. எஸ்.......”, என்று இழுத்தவன்.. “ஆகுறதுக்காக... ஒரு முன் அனுபவத்துக்கு தமிழ்நாடு  போலீஸ்!”, என்று சமாளித்த பொழுது..

“கான்ஸ்டபிள் சார்!”, என்று சரியாக அழைத்தாள் அஞ்சனா...

“ஹா.. ஹா.... ஏ கான்ஸ்டபிள் ஹே!!!”, என்று அந்த பெண் சொன்னதும் மொத்த பெண் கூட்டமும் கொல்லென்று சிரிக்க..

அஞ்சனாவோ அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை!

“கான்ஸ்டபிள் சார்.. ஆர்யாகிட்ட பேசுனீங்களா? என் ஸாரியை சொன்னீங்களா?”, என்று தவிப்புடன் கேட்க..

நொந்து வெந்த வாசுவோ, ‘கலைச்சு  விடுறதுலே அவனுக்கு மேல இருக்கிறம்மா’, என்று சத்தம் போட்டு புலம்ப முடியாமல்..

“அதோ... அங்கே ஸ்டேஜ் உங்களை யாரோ கூப்பிடுறாங்க”, என்று அவளை திசை திருப்பி விட்டு....தப்பி பிழைத்து ஓடி ஆர்யமனிடம் வந்தவன்...

“மாப்ளே! அந்த பாஸ்வேர்ட் பாம்கிட்ட ஏதாவது ஒரு வார்த்தை பேசிடுடா.. கான்ஸ்டபிள் கான்ஸ்டபிள்ன்னு உயிரை எடுக்குது”, என்றான் வேதனையோடு..

‘சிக்கிட்டியா’, என்று நெஞ்சார்ந்த நிறைவுடன் நண்பனை ஏறிட்ட ஆர்யமன்,

“நீ கான்ஸ்டபிளா? ஹெட் கான்ஸ்டபிள்ல்ல மச்சி!”, என்று காலை வார...

இவர்கள் பேசிக் கொண்டிருந்த பொழுது... அவர்கள்  அருகில் வந்த கமலா, “யார்ரா அந்த பொண்ணு? உன்னை ஆர்யா ஆர்யாங்குது?”, என்று ஆர்யமனிடம் விசாரித்துக் கொண்டே சிவநேசனிற்கு அடுத்து இருந்த  இருக்கையில் அமர...

சிவநேசன் தொண்டையைச் செருமிய படி தூரத்தில் அஞ்சனா வருவதை கண்களால் காட்ட.. கமலா மட்டும் அல்ல.. ஆர்யமனின் கண்களும் அவர் காட்டிய திசை நோக்கி சென்றது!!

அட்சதை தட்டை ஏந்திய படி வந்து கொண்டிருந்தவளைப் பார்த்த கமலா,

“ஆமாங்க... இந்த பொண்ணு தான்!!!”, என்றவர்.. பின் ஆர்யமனை நோக்கி,

“ஏன்டா சின்ன பொண்ணுகிட்ட போய் பேசக் கூடாதுன்னு சொல்லிட்டியாமே எவ்வளோ கவலையா சொன்னது தெரியுமா?”, என்று அவளுக்கு பரிந்து கொண்டு வர...

அதைக் கேட்டதும்,  ‘உங்ககிட்டயுமா..’, என்பது போல அவரை வியப்புடன்  பார்த்து புருவத்தை உயர்த்திவனின் கண்கள்..  மீண்டும் அவளிடமே சென்றது...

“அது சரியான ஓட்டை வாய்ம்மா... ஆபிஸ்லே என் பேரை கெடுத்து வைச்சிருக்கு! இதுக்கு மேலயும் பேச விட்டேன்! அவ்வளோ தான்!!!!”, என்று சொல்ல, அவன் பார்வை அவளையே தொடர்வதை கவனித்த கமலா,

‘வாய் இப்படி சொல்லுது.. கண்ணு வேற சொல்லுதே’, என்று சந்தேகமடைந்தவராக சிவநேசனைப் பார்க்க..  அவரும் அவனை நம்பாதே என்பது போல புன்னகையுடன் தலையை மறுப்பாக அசைக்க... 

“அப்பா சிரிக்கிறத  பார்த்தா சரியா படலையே! பொண்ணு வேற மூக்கு முழியுமா இருக்கு!”, என்று மீண்டும் அஞ்சனாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவனிடம் கேட்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.