(Reading time: 32 - 63 minutes)

னால், அந்த குழாயில் புகைப்பதை வித்தியாசமாகப் பார்த்து விசாரிக்க.. “அது டோப்.. ட்ரை பண்றியா??”, என்று ஃபிலோமினா கேட்க.. உள்ளூர பயம் வந்தது அஞ்சனாவிற்கு..

‘எப்பவாவது சின்ன தப்பு பண்ணலாம்! எப்பவும் பெரிய தப்பு பண்ணக்கூடாது! தம் சின்ன தப்பு.. டோப்பு பெரிய தப்பு’ இது தான் ஹர்ஷவர்தன் அவளிடம் சொன்னது!

திகைத்து நின்றவளை.. “ஹே.. கமான்! ஃபீல் ஃப்ரீ”, என்று அந்த சினிமாப் புள்ளி அவள் கையைப் பற்றி தன் அருகில் அமர வைக்கப் பார்க்க....

“இட்ஸ் ஓகே!. ஐ எம் ஃபைன்!”, என்று தன் கையை நாசூக்காக விடுவித்தவளுக்கு அவனை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் இல்லை.. சாவகாசமாக உட்காந்த நினைத்து அருகில் இருந்த சோபாவில் அமர..

அவனோ, “என்ன டிரிங் ஆர்டர் பண்றீங்க?”, என்று கேட்டுக் கொண்டே அந்த சோபாவின் ஆர்மில் உட்கார்ந்து உரசுவது போல அவளை நெருங்கி மெனுவை காட்ட… அவனை நோக்கி நிமிர்ந்தவள்...

“ஹையோ... காக்டெயில் மிக்ஸிங்ல தான் எக்ஸ்பெர்ட்! குடிக்கிறதெல்லாம் கிடையாது!”, என்று சொன்னதும்..

‘தண்ணியே அடிக்கலைனா.. இவ எதுக்கு வந்திருக்கா...’, என்பது போல அவன் மட்டுமல்ல அந்த கும்பலே அவளை விநோதமாக பார்க்க...

ஹரிபிரசாத்தோ, “என்ன மிக்ஸிங் எக்பர்ட்டா? அப்போ நான் கேக்கிற காக்டெயிலை செய்து கொடுங்க பார்க்கலாம்”, என்று ராணியை தன் வசம் நகர்த்த பாருக்கு தனியாக அழைத்து செல்ல நினைக்க... அவளோ

“வாவ்! ஸ்யூர்!!!!”, என்று கிளம்ப தயாரானவள், பின்

“ஐ எம் சர்டிஃபைட் பார்டென்டர்ன்னு எல்லாருக்கும் ப்ரூவ் பண்றேன்.. வாங்க எல்லாரும்!”, என்று அவள் மொத்த கும்பலையும் பாருக்கு இழுத்து செல்ல..

‘அவ எனக்கு தான்! டோன்ட் வொர்ரி’, என்று ஹரிபிரசாத்தை சீண்டினான்  அந்த சினிமா வாரிசு!

செல்வாக்கான கும்பல் என்றதும் அங்கிருந்த பார்டெண்டர் விலகிக் கொள்ள... பெரிய அனுபவசாலி போல மதுக் கோப்பை சுழற்றி...கண்ணாடி கோப்பைக்குள்... 

“ஃபயர் அன்ட் ஐஸ்” காக்டெயிலை ரெடி செய்து கொடுக்க...காக்டெயிலில்  ஜஸ் கட்டி மிதக்க அதை சுற்றி தீ... ஜஸ் கட்டி உருக உருக... அந்த தீ மெல்ல அணையும் வரை அந்த கும்பல் கை தட்டி ஆரவாரிக்க...

தான் செய்த காக்டெயிலை உயர்த்தி காட்டிய படி நின்ற அஞ்சனாவை.. அந்த சினிமாத் துறை வாரிசு.. அதை படம்பிடிக்கும் சாக்கில் அவளை தோளோடு அணைத்து செல்ஃபி எடுத்து..

“மை கேர்ள் ஃப்ரண்ட் ஃபார் டுநைட்”, என்று அவளறியாது மெசேஜ் அனுப்பி விட்டு...  அவளை நோக்கி திரும்பியவன் பார்வை அவள் அணிந்திருந்த ஸ்ட்ராப் ட்ரஸ்ஸில் வெளிப்பட்டு தெரிந்த முதுகு பகுதியில்  இருந்த டாட்டூ மீது சென்றது...

தண்ணீரில் பட்டாம்பூச்சி நீந்துவது போன்ற அந்த படம்.. அதையா  ரசிக்கும் அந்த காமக் கண்கள்???

“பியூட்டிஃபுல்!!!”, என்று அந்த டாட்டூவை நோக்கி குனிய...  அவன் குரலில் இருந்த மாற்றமும்.. ஒரு வித பயத்தை உண்டு செய்ய... ‘என்ன பண்றான் இவன்’, என்று அவள் கால்கள் தானாக இரண்டு எட்டு தள்ளி சென்று அவனைத் திரும்பி பார்க்க... அப்பொழுது இன்னொரு கை அவளை இழுத்தது.. இது ஹரிபிரசாத்!

இவன் அனுப்பிய செல்ஃபியை கண்டு கோபத்தில் அவளை கைப்பற்ற வந்தவன்..

“டான்ஸ் ஃப்ளோர் போகலாம்”, என்று அழைக்க..  அவளுக்கும் சற்று முன் துளிர் விட்ட பயத்தில் சட்டென்று தலையசைத்த பின்,

‘ஹய்யோ இவன் எதுவும் தப்பா நினைக்க கூடாதே’, என்று அப்பாவியாக நினைத்தவள் மற்றவனுக்கு ஒரு “ஸாரி!”,யை வேறு உதிர்த்துச் சென்றாள்!

‘செல்ஃபி எடுத்து அனுப்புறியா.. இப்போ பாரு உன்னை விட பத்து மடங்கு எடுக்கிறேன்’, என்று மனதிற்குள் கங்கணம் கட்டிய ஹரிபிரசாத்.. டான்ஸ் ஃப்ளோர் வந்ததும்... அவளுடன் செல்ஃபி எடுக்க போக.. ஆடுவதில் ஆர்வமாக இருந்த அஞ்சனாவோ மறுக்க..

அவனோ, “அவன் கூட மட்டும் தான் எடுப்பியா?”, என்று கேட்க...

‘ஓவரா குடிச்சு.. புத்தி மழுங்கி போயிருக்கும்! சின்ன பிள்ளை மாதிரி செல்ஃபி எடுக்க போட்டி போடுறேனே! அவன் போக்கிலே போய் தான் சொல்லணும்’, என்று பெரிய புத்திசாலி போல யோசித்த அஞ்சனா...

‘ஓகே.. ஓகே..இந்த செல்ஃபியோட விட்டுடணும்’, என்று கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்ல...

“ஸ்யூர் பேபி...”, என்று விஷமமாக சிரித்த படி அவளுடன் படத்தை எடுக்க அவன் சொன்ன பேபி அவளுக்கு பிடிக்கவே வில்லை!

வேகமாக அவனை விட்டு விலகி அதன் கூட்டத்துடன் சேர்ந்து ஆட ஆரம்பித்த அஞ்சனா.. அடுத்த சில நொடிகளில் தன் முன்னே நீண்ட அலைபேசியும்..அது கண்ணாடியாய் தன்னையும் தன் பின்னே இருக்கும் ஹரி பிரசாத்தையும் பிரதிபலிக்க..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.