(Reading time: 14 - 28 minutes)

ரணும் அறைக்குள் நுழைந்து தேட,அதற்குள் அறைக்குள் இருந்து வெளியே வந்த சிலர் யஸ்வந்த்திடம்,”நாம ஏமாந்துட்டோம் யஷ்வந்த்.நம்மகிட்ட இருந்த ஒரே க்ளூ இந்த பொண்ணு தான்...நாம இப்போ என்ன செய்யறது”என்று கோரசாக கேட்க..ஆத்திரத்தில் அங்கிருந்த பைக்கை எட்டி உதைத்தான் யஷ்வந்த்.

கோபத்தில் அவன் முகம் இறுகிப் போயிருந்தது.

பைக்கை எட்டி உதைத்ததில்,காலில் ரத்தம் வழிய..அதை கண்டுகொள்ளாமல் அவசரமாய்..”எல்லா சிக்னலையும் செக் பண்ண சொல்லுங்க சங்கர்..உடனடியா நாம கண்டுபிடிச்சு ஆகணும்..”என்று துரிதபடுத்த அவனுடன் இருந்த நான்கு பேரும் அவந்திகாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

யஷ்வந்த் வேகமாக அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆராய..இருபது நிமிடத்திற்கு முன்பு சரியாக வேலை செய்து கொண்டிருந்தது..இப்போது பழுதாகிப் போயிருந்தது.

“எப்படி இது சாத்தியம்”அரற்றியவனின் அருகே செல்ல,அவனது பெற்றோர்களுக்கு பயமாக இருந்த போதும்,பாண்டியன் அப்படி இருக்க முடியாது இல்லையா..

“என்ன நடக்குது தம்பி இங்க”குரல் நடுங்க கேட்டவரிடம்,தயவு தாட்சண்யம் காண்பிக்காமல்..

“தெரில..தெரிஞ்சா சொல்றேன்”என்றதோடு முடித்துக் கொண்டான்.

“இதென்ன பதில்”என்று சரண் யஸ்வந்திடம் முறையிட..

குரலில் கடுமையை தேக்கியவன்,”அவந்திகா என்னோட காதலியா திரும்ப கிடைப்பான்னு எனக்கு நம்பிக்கையில்ல சரண்..”என்று சொன்னான்.

“இதுக்கு என்ன அர்த்தம்”சரண் அடக்கப்பட்ட ஆத்திரத்தில் கேட்க..

“இனி அவந்திகா கிடைச்சாலும்,அவளுக்கு முழுசா மெடிக்கல் செக்அப் செய்யாம,நான் காதலியா கூட ஏத்துக்க மாட்டேன்னு அர்த்தம்”என்றான்.

சரணுக்கு சர்வமும்,பதறியது என்றாலும்..அந்த இடத்திலும் அவனது செவ்வந்தியை யஸ்வந்திடம் விட்டுக் கொடுத்து பேச முடியவில்லை.

“நீ என்னடா அவளை ஏத்துக்கறது..எங்க வீட்டு இளவரசிடா அவ..எங்களுக்கு கிடைச்சா மட்டும் போதும்.கண்ணுக்குள்ள வைச்சு காலம் முழுக்க நான் பார்த்துப்பேன்”எனவும்..உள்ளர்த்தத்தை புரிந்த ஹாசினி அதிர்ந்து போய் சரணை பார்த்தாள்.

அவளது கண்ணில் நீர் வழிந்தாலும்,உடனே சுதாரித்துக் கொண்டவள்,சரணை பார்த்துக்கொண்டே மெல்ல இதழ் அசைத்தாள்.

“என்னால புரிஞ்சுக்க முடியும்”என்றவள் கண்ணீரை துடைத்துக்கொண்டாள்.

இதைவிட புரிதல் வேண்டுமா என்று எண்ணிய போதும்,பாண்டியனுக்கு துணையாய் அருகில் நின்றுகொண்டான்.

அவரோ முற்றிலும் நிலை இழந்து,”இங்க என்ன நடக்குது சரண்.என் பொண்ணு எங்க..குட்டிமா எங்கேயும் போகாதுடா சரண்.உனக்கு தெரியுமில்ல..குட்டிமாவை காணோம் சரண்...ஏதாவது புரியற மாதிரி பேச சொல்லு”என்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்தே விட்டார்..செயற்கை காலும் தனியாக விழுந்துவிட்டது.

மல்லிகாவும் சாரதியும் அவரை தாங்கிப் பிடித்துக்கொள்ள,சட்டென ஒரு தீவிரம் வந்தவராய்..”யாரும் சொல்ல வேண்டாம்.என் பொண்ணை எப்படி கண்டுபிடிக்கன்னு எனக்கு தெரியும்..இவன் பெரிய சிஐடி ஆபிசரா இருந்தா என்ன..என் பொண்ணை கண்டுபிடிக்க நான் சிஎம் வரைக்கும் போய் பிரஷர் கொடுப்பேன்..என்னை யாருன்னு நினைச்சுட்டாங்க”என்று சொல்ல..

தாமரை முதற்கட்ட பயம் தெளிந்து,மகனை நெருங்கியவர் சற்றும் யோசிக்காமல் மகனை அடித்துவிட்டார்.

அவன் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க..”உன்னோட சிஐடி புத்திய கல்யாணத்திலையும் காமிப்பேன்னு நான் நினைக்கவே இல்லடா..நீ எல்லாம் மனுஷனா..இந்த மண்டபத்தையே நீ சுத்தி சுத்தி வந்ததை நான் கவனிச்சுட்டு தானே இருந்தேன்.நீ அவந்திகாவை பாதுகாக்கணும்னு நினைச்சிருந்தா..இன்னும் அதிகமா போலிஸ் பாதுகாப்பு போட்டிருக்கமாட்டியா..நீ வேணும்னே அவளை காணாம போக விட்டிருக்க..உன்கிட்ட இத நான் எதிர்பார்க்கல”என்றார்.

குமாருக்கு கூட மகன் செய்தது புரியவில்லை.ஆனால் தாமரை அவனது ஒவ்வொரு செயலையும் கூர்ந்து கவனிப்பார்..

அவனது எண்ணத்தை சரியாக சொல்லியும்விட்டார்.

திருமணத்திற்கு நெருங்கியவர்களை  தவிர வேறு யாரையும் அழைக்க வேண்டாமென்று சொன்னதன் பொருள் இப்போது தான் தாமரைக்கு விளங்கவே செய்தது.

அடுத்து என்ன செய்ய அவர்களுக்கு தெரியவில்லை..

யஷ்வந்த் எதையும் விளக்க முன் வரவில்லை..

அம்மா அடித்ததும் சோர்ந்து போனவனாய் சுவற்றில் சாய்ந்து,”நந்தனா..நந்தனா”என்று புலம்ப...யாரும் எதிர்பாராத விதமாய்..

வர்ஷினி யஷ்வந்த்தின் தோளில் சாய்ந்துகொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.