(Reading time: 14 - 28 minutes)

ண்டுபிடிச்சிடலாம் மாமா..அக்காவை குணப்படுத்திடலாம்..நந்தனாவுக்கு எதுவுமே ஆகாது..இது நாம வைச்சிருக்க முதற்படி..நிச்சயம் அவந்திகாவை கண்டுபிடிப்போம்..இதுநாள்வரைக்கும் நமக்கு க்ளூ கிடைக்கலை இல்லையா..ஆனால் இப்போ ஒரு க்ளூ கிடைச்சிருக்கு..நிச்சயம் அவந்திகா சம்மந்தப்பட்டிருக்கான்னு தெரிஞ்சுடுச்சு இல்லையா..நாம ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கோம் மாமா...சோர்ந்து போகாதீங்க..அடுத்து என்னன்னு யோசிங்க..உங்களால முடியும்”என்றவளது தலையை இயல்பாய் யஷ்வந்தின் கை வருட...

ஹாசினி சற்றும் யோசிக்காமல்,வர்ஷினியை யஸ்வந்த்திடமிருந்து பிரித்தாள்.

“என்ன நடக்குது வர்ஷூ இங்க..தயவு செய்து சொல்லு”அழுகையுடன் கேட்ட போதும் வர்ஷினியிடம் பதிலில்லை..

சரணுக்கு இப்போது எதுவோ புரிவது போலிருந்தது..

யாருக்காகவே அவந்திகாவை பலியிட்டுவிட்டான் போல..

சரண் தனக்கு தெரிந்த காவல் அதிகாரிகளை தொடர்புகொள்ள முயற்சி செய்ய,அதற்குள் பாண்டியனுக்கு வாய்ஸ் மெசேஜ் வந்தது.

அவந்திகா நம்பரில் இருந்து வர,அவசரமாய் பாண்டியன் மெசேஜை ப்ளே செய்தார்.

“எனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்லப்பா.எனக்கு யஷ்வந்த் போலிஸ் டிபார்ட்மெண்ட் சேர்ந்தவங்கன்னு தெரியாது..தெரிஞ்சிருந்தா இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்க மாட்டேன்..எனக்கு வரப்போற கணவன் போலிஸ் அதிகாரியா இருக்கதை நான் விரும்பலை.இதை நானா உங்ககிட்ட இதுவரைக்கும் சொன்னதில்ல.சாரிப்பா,..கடைசி நிமிஷம் தெரிய வந்த பின்னாடியும்,என்னால இங்க இருக்க முடியல.என் பிரண்ட் வீட்டுக்கு போறேன்.எல்லா பிரச்சனையும் முடிஞ்ச பின்ன வர்றேன்..சாரிப்பா..என்னை புரிஞ்சுக்கங்க”

தெளிவாக அவந்திகாவின் குரல் கேட்க..யஸ்வந்த்திற்கு ஒன்றுமே புரியவில்லை..

அவள் கடத்தப்பட்டாளா..விருப்பத்துடன் சென்றாளா..!!

செல்போன் டவர் இப்போது எங்கிருந்து வருகிறது என்பதை ஆராய அவனது சகபணியாளனுக்கு உத்தரவிட்டான்.

பாண்டியன் சோர்ந்தே போனார்..’என் மகள் இப்படியெல்லாம் யோசிப்பாளா..’அவரால் நிச்சயம் நம்பமுடியவில்லை..

சரணிடம் நேரடியாகவே,”சரண்..நம்ம பொண்ணு இப்படியெல்லாம் பேசமாட்டான்னு உனக்கு தெரியும் தானே..குட்டிமா ஒரு வார்த்தை சொன்னா,காரணமே கேட்காம இந்த கல்யாணத்தை நான் நிறுத்த தயங்கமாட்டேன்னு குட்டிமாக்கு நல்லாவே தெரியும்..நிச்சயம் இவங்க ஏதோ சதி செய்யறாங்க.நீ நமக்கு தெரிஞ்ச ஆளுங்ககிட்ட சொல்லு..”துரிதப்படுத்த அவசரமாய் சரண் அங்கிருந்து நகர்ந்தான்.

பாண்டியனால் நடக்க முடியாது என்பதால்,அவரை கைத்தாங்கலாக மல்லிகாவும்,சாரதியும் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

ஹாசினி தன்னுடைய அப்பாவிற்கு தொடர்புகொண்டு விசாரிக்க சொல்ல,அவரும் அந்த பகுதியின் முக்கியப்புள்ளி என்பதால் அவரது ஆட்களை கொண்டு தேட சொன்னார்.

வர்ஷினியை முறைத்தவள்,”உனக்கு பீஸ் கட்டணும்னு கொஞ்சம் கூட யோசிக்காம ராத்திரிப் பகல்னு பார்க்காம உனக்கு ப்ராஜெக்ட்க்கு உதவி செய்தா இல்லையா..அதுக்கு நீ நல்ல பலன் செய்துட்ட..கூட இருந்தே குழி பறிக்கற ஆளை நான் இப்போதான் பார்க்கறேன்.இனிமேல் என் முகத்திலையே முழிக்காத”அருவருப்பான பார்வையை யஷ்வந்த்தின் மேல் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

தாமரையும்,குமாருமே மகனை முறைத்துவிட்டு செல்ல,வேதனையோடு யஷ்வந்த் மனதுக்குள் அரற்றினான்..

மெல்ல மெல்ல கண் விழித்து பார்த்த அவந்திகாவிற்கு தான் ஒரு அறையில் இருப்பதும்,தன்னை யாரோ கடத்தி வந்திருப்பதும் மெல்ல மெல்ல புரிந்தது.

அவளது கை கட்டப்பட்டிருக்கவில்லை.வாயும் அடைக்கப்பட்டிருக்கவில்லை.

உதவி கேட்கலாம் என்று கத்தப் போனவளின் ,எதிரே இருந்த வாசகம்,அவளது வாயை கட்டிப்போட்டது..

“வெல்கம் டூ அவர் ஹோம் மை டியர் அந்து பூச்சி”என்பதை படித்ததும்..கவலை மறந்தவளாக புன்னகைக்க தொடங்கினாள்..

‘அவனால்’ மட்டுமே இப்படி கேவலமாக தன்னை அழைக்க முடியும்..

எங்கு இருக்கிறான் என்று அவனை பார்க்க அவளது கண்கள் பரபரத்தது..

மேகசின்களிலும்..எப்போதாவது தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே சில வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த ஆவலுக்கும்,பரபரப்பிற்கும் பெயர் என்ன..சற்றும் அவள் யோசிக்கவில்லை..காதல் என்ற பெயர் சூட்டவும் அவள் தயாராயில்லை..ஒருவேளை காதல் இதுதான் என்று எண்ணியிருந்தால்,இனி வரப் போகும் அனர்த்தங்களை தடுத்திருக்கலாம்..

‘காதலிக்கிறேன்’என்ற ஒரு வார்த்தை அவனிடம் அவள் சொல்லியிருந்தால்,அவன் செய்து வைத்திருந்த பல அனர்த்தங்களிலிருந்தும் தப்பியிருக்கலாம்..அவனையும் தப்ப வைத்திருக்கலாம்..

காதல் என்றொரு வார்த்தை இங்கு தீராத சதி செய்திருந்தது..

அதில் தவிக்கப் போவது தான் மட்டுமே என்பதை அறியாமல்..இப்போது அவனை நேரில் பார்க்கும் ஆவல் எழ..அவசரமாய் கதவை திறக்க முயற்சி செய்தாள்..

அதற்குள் அவனே கதவை திறந்திருந்தான்....

முகமெல்லாம் புன்னகையோடு அவன் வரவேற்க..அதற்கு சற்றும் குறையாமல் அவளும் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.....

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1004}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.