(Reading time: 19 - 37 minutes)

ங்கே இருந்த உணவு வகைகளை அவள் தனது தட்டில் போட்டுக்கொண்டிருக்க, அவனும் தனது தட்டில் உணவுகளை போட்டுக்கொண்டே

'இ...ந்...து...ஜா...' அவள் காதில் விழும்படி உச்சரித்தான்.

சடக்கென திரும்பி அவன் முகம் பார்த்தாள் அவள்.

'இந்துஜான்னா..  நிலாவோட பொண்ணுன்னு அர்த்தம் இல்லையா??? 'நிலாப்பொண்ணு!!! வெரி நைஸ்..' என்றான் அவன். முகத்தில் புன்னகையின் சுவடு கூட இல்லை. அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு நகர்ந்தாள் அங்கிருந்து.

'ஒரு வேளை இவன்தான் டாக்டர் விஷ்வாவோ??? ஒரு யோசனை மட்டும் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது

அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு பூச்செண்டு வந்தது அவளை நோக்கி.

'வேறெதுவும் வேண்டாம் சின்னதா ஒரு ஸ்மைல் மட்டும் பண்ணுங்க போதும். அப்புறம் பொக்கேவை தூக்கி கூட போட்டுடுங்க ப்ளீஸ்... டாக்டர் விஷ்வா..'

இப்போதும் அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. பொக்கே தனியாக போய் கிடந்தது..

சாப்பிட்டு முடித்துவிட்டு எல்லாரிடமும் விடை பெற்றுக்கொண்டு பார்க்கிங்கில் அவளுக்காக காத்திருக்கும் அந்த மருத்துவமனையின் காரை நோக்கி நடந்தாள் இந்துஜா.

'நீங்க ஆடினதுக்கு பேர் டான்ஸா??? என்னமோ தையா தக்கா ன்னு .. ஒண்ணும் புரியலை... இதுக்குதான் நயன்தாராவையோ, ஹன்சிகாவையோ கூப்பிடுங்க கூப்பிடுங்கன்னு சொன்னேன் எல்லார்கிட்டேயும். யாரவது கேட்டாதானே??? அய்யோ.. நயன்தாரா நீ எங்கே இருக்கே..'  அவன் கையெழுத்துடன் சிரித்தது மூன்றாவது பூச்செண்டு!!! அதை படித்ததும் தன்னையும் மீறி பக்கென சிரித்தே விட்டிருந்தாள் பெண்.

இப்போது அவனை அவசரமாக தேடின அவள் விழிகள். 'யாரது டாக்டர் விஷ்வா???' அவள் கண்ணில் அவன் படாது போக, இங்கமங்கும் பார்த்தபடியே அவள் நடக்க துவங்க அவளுக்கு சற்றே தூரத்தில் இருந்தவன் கைப்பேசியில் பேசும் பாவனையில் சொன்னான்

'சொல்லுங்க... நான் விஷ்வா பேசறேன்...'

சரேலென அவன் குரல் வந்த திசையில் திரும்பினாள் அவள். கவனிக்கவில்லை அவள்!!! அவளை நோக்கி வேகாமாக வந்துக்கொண்டிருந்த அந்த காரை கவனிக்கவில்லை அவள்!!!

'இ...ந்...து...ஜா!!! அவன் அலறல் அங்கே எதிரொலித்தது!!!

தே நேரத்தில் அங்கே பெங்களூரில்...

அபர்ணா, அஸ்வினி, அப்பா என அனைவரும் விமான நிலையத்தில் காத்திருக்க அவர்களை வழி அனுப்ப வந்திருந்தான் பரத். கிளம்பும் முன் அழகாக ஒரு புன்னகை அபர்ணாவின் முகத்தில்

'தேங்க்யூ பரத்...' சொல்லிவிட்டு அவள் நகர அங்கே தூரத்தில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்தான் அருண். தனது நண்பன் ஒருவனை வழி அனுப்ப வந்த அருண்.

எரிச்சல் மண்டியது அவன் மனதிலும் முகத்திலும். 'இவன் எதற்கு இவர்களை வழி அனுப்புகிறான்???'

பரத் அவர்களுக்கு கை அசைத்து விட்டு நகர, அடுத்த சில நிமிடங்களில் ஒலித்தது அருணின் கைப்பேசி. 'பெங்களூரை விட்டு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு செல்ல தவித்தது அபர்ணாவின் மனம்.

'அருண் ப்ளீஸ் பிக் அப்..' உள்ளுக்குள் கெஞ்சினாள் அவள். அவன் எடுத்திருந்தால் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டி இருப்பாள் அபர்ணா. தவிப்புடன் கைப்பேசியை காதில் வைத்துக்கொண்டு காத்திருப்பவளை பார்த்தபடியே நடந்தாள் அஸ்வினி.

அவள் அழைப்பை பார்த்ததும் அருண் மனதில் சற்று முன் மண்டிய எரிச்சல் கொஞ்சம் விலகியதுதான் நிஜம். ஆனாலும் ஏற்கவில்லை அழைப்பை.

போடி... அவ்வளவு சீக்கிரம் இறங்கி வந்திடுவேன்னு நினைச்சியா??? இன்னும் ரெண்டு நாள் போகட்டும்..' ஒலித்து ஓய்ந்து போன கைப்பேசியை பார்த்து சொல்லிவிட்டு அதை பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நடந்தான் அருண்.

தே நேரத்தில் அங்கே சென்னையில்

அவளை நோக்கி விஷ்வா பாய்ந்து வருவதற்குள் அவளை இடித்து தள்ளி விட்டு நிற்காமல் பறந்திருந்தது அந்த கார். அந்த பரபரப்பிலும் காரின் எண்ணை மனதில் குறித்துக்கொள்ள தவறவில்லை விஷ்வா.

வலியில் துடித்து, துவண்டு அழுதவளை எப்படி கைகளில் அள்ளிகொண்டான் எப்படி அவளை மருத்தவமனை படுக்கையில் கொண்டு சாய்த்தான் என அவனுக்கே தெரியவில்லை.

'ஹர்ரி அப்....' அவனது கர்ஜனையில்  அந்த மருத்துவமனையே இயங்கிக்கொண்டிருக்க...

'ஒண்ணுமில்லமா... ஒண்ணுமில்லமா யூ வில் பி ஆல் ரைட்...' அவன் குரல் அவள் காதில் கேட்டுக்கொண்டிருக்க...

படுக்கையில் சாய்ந்த பிறகும் அவள் கை அவன் சட்டையை பற்றிக்கொண்டிருக்க.....

உயிர் வரை சுண்டி இழுத்த அந்த வலியில் அப்படியே மயங்கி இருந்தாள் இந்துஜா.அவசரம் அவசரமாக அவளுக்கு முதலுதவிகள், பரிசோதனைகள் எல்லாம் முடிய அவளது காலில் மோசமான எலும்பு முறிவு இருப்பது தெளிவானது அவனுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.