(Reading time: 19 - 37 minutes)

ட்டிலில் கண் மூடி கிடந்தவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் விஷ்வா.

'ச்சே ... சற்று முன் மேடையில் அழகு மயிலாக சுழன்றவள் இப்படி படுத்துவிட்டாளே..' நினைக்கும் போதே அவன் மனமெங்கும் பாரம்.

'கண்ணு பட்டிருக்கும்...' வீட்டில் மற்றவர்கள் சொல்லும் போது கேலி செய்வான் விஷ்வா. 'ஆமாம் அவங்க கண்ணு பரந்து வந்து என் மேலே பட்டிருச்சு...'

இப்போது ஏனோ அவனுக்கே தோன்றியது அது!! 'ஒரு வேளை என் கண்தான்  பட்டு விட்டதோ இவள் மீது???'

அதன் பின் அவள் கண் திறந்த போது ஒரு மணி நேரம் கடந்திருந்தது. காலில் இருந்த அந்த பெரிய கட்டு தனக்கு என்ன நிகழந்திருக்கிறது என்பதை அவளுக்கு புரிய வைத்தது. சற்று முன் நடந்தவைகள் எல்லாம் அவள் மனத்திரையில் படம் போல விரிந்தன.

மெதுமெதுவாக  அவள் அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் பக்கம் திரும்பினாள் அவள். சரேலென எழுந்து விட்டான் விஷ்வா.

'ஐ ஆம் டாக்டர் விஷ்வா.. 'சாரிமா.. ரொம்ப சாரி.. நான் ஏதோ விளையாட்டுக்கு செய்ய போய்... அது இவ்வளவு தூரம்...  ரொம்ப வலிக்குதாமா???'

'இல்லை என்று தலை அசைக்க அவள் நினைத்த அதே நேரத்தில் சோர்வும், வலியும் சேர்ந்து அழுத்த.. அவள் கண்களை தாண்டி வழிந்தது கண்ணீர்.

'யார் கொடுத்ததாம் அந்த உரிமையை அவன் கைகளுக்கு. அவை தன்னாலே துடைத்தன அவள் கண்ணீரை.

'சரியாயிடும். எல்லாம் சரியாயிடும்' அவன் சொல்ல கஷ்டப்பட்டு புன்னகைத்தாள் அவள்.

'குட்.. உன்னோட பிளஸ்சே இந்த ஸ்மைலும் உன்னோட தன் நம்பிக்கையும் அதை மட்டும் விட்டுடாதே சரியா???" அவன் வார்த்தைகளில் அவனே அறியாமல் தன்னாலே ஒருமை வந்திருந்தது.

'இதோ வந்திடறேன்.. ஒரு நிமிஷம்..' அவன் நகரப்போக அவன் கையை சட்டென பற்றிக்கொண்டாள் அவள். அவனை அழைக்க வேறு வழி தெரியவில்லையே அவளுக்கு!!!

அதை புரிந்துக்கொண்டவனாக 'என்னமா???' என்றான் இதமாக.

'என்னால் மறுபடியும் நடனமாட முடியுமா???' துடிக்கும் விழிகளும் அவனிடம் அதை புரிய வைக்க தவிக்கும் விரல்களுமாக கேட்டாள் அவள்.

'முடியும்!!!! முடியணும்!!! ஆட வைப்பேன்!!! கவலைப்படாதே' அழுத்தம் திருத்தமாக சொன்னான் விஷ்வா. 'இது கூட முடியலைன்னா நானெல்லாம டாக்டர்ன்னு சொல்லிகிறது வேஸ்ட்..' புன்னகைதான் அவன்.

எப்படியும் இரண்டொரு நாளில் அவளுக்கு அறுவை சிகச்சை செய்ய வேண்டுமென அறிந்துதான் இருந்தான் அவன்.

அவள் வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல் சொல்ல வேண்டுமே என்று யோசித்தபடியே அவளிடம் அவன் அவர்களை பற்றி கேட்க அவளுக்கு தந்தை இல்லை என்பது புரிந்தது அவனுக்கு. அவளுக்கென இருப்பது அம்மா மட்டுமே. அம்மா கூட ஊரில் இல்லை. இப்போது தகவல் சொன்னாள் பதறிப்போவாள் நாளை சொல்லிக்கொள்ளலாம் என்றாள் அவள்.

சில நிமிடங்களில் மருந்துகளின் தாக்கத்தில் அவள் மறுபடியும் உறங்கிப்போக அவள் அருகிலேயே அமர்ந்திருந்தான் விஷ்வா. இப்போது வீட்டுக்கு செல்லவும் மனமில்லை அவனுக்கு.

வீட்டுக்கு சென்றாலும் இப்போது நிம்மதி இருக்கபோவதில்லை என்றே தோன்றியது. இவள் நிலை ஒரு பக்கம் இருக்க, பல நாட்களாகவே வீட்டில்  நடப்பவை அவனுக்கு எரிச்சலையே கொடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில்....  இப்போது சில நாட்களாக புதிதாக இன்னொன்றும் சேர்ந்துக்கொண்டிருக்கிறது.

அப்பாவின் அறுபதாம் கல்யாணம்!!! இன்னும் சில நாட்களில்!!!

பெற்றவர்களின் அறுபதாம் கல்யாணம் பிள்ளைகளுக்கு பெரிய சந்தோஷம் தரக்கூடிய விஷயம்தான். சில நாட்களுக்கு முன்னால் அம்மாதான் அவனிடம் ஆரம்பித்தார் இந்த விஷயத்தை.

அம்மா!!!!

அவன் அம்மாவுக்கு அவனென்றால் உயிர். அவனை கண்ணுக்குள் இல்லை உயிருக்குள் வைத்துதான் வளர்த்திருக்கிறார். அவர். அம்மா இல்லை என்றால் அவனது வாழ்க்கை பெரிய சூனியம் தான் என்று அவனுக்கும் தெரியும். அதே நேரத்தில் அவர் அவன் கண் முன்னே செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்க முடியவில்லையே!!!!

'அப்பாவுக்கு அறுபதாம் பிறந்தநாள் வருதுடா விஷ்வா...' ஒரு நாள் தனது அறை பால்கனியில் அமர்ந்து ஒரு பேஷண்டின் எக்ஸ்ரே வை ஆராய்ந்துக்கொண்டிருந்த போது அவனருகில் வந்து அமர்ந்தார் அம்மா.

அம்மா சொன்னது காதில் விழுந்த போதும், கேளாதது போலவே படு தீவிரமாக அந்த எக்ஸ்ரேவை ஆரய்ந்துக்கொண்டிருந்தான் விஷ்வா. 

'டேய்... உன்கிட்டேதான் பேசறேன். ஒரு பத்து நிமிஷம் அம்மா முகத்தை பார்த்து பேசுடா.... ' அவர் குரல் ஆதங்கத்தில் கரைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.