(Reading time: 19 - 37 minutes)

'ல்லாம் காதிலே விழுந்தது...' என்றான் விஷ்வா அடுத்த எக்ஸ்ரேவை கையில் எடுத்தபடியே. 'நீ சொல்ற விஷயத்திலே நான் செய்ய ஒண்ணுமில்லை... வேணும்னா உன் மூத்த பிள்ளைகிட்டே கேளு அவன்தான் இதெல்லாம் முன்னாலே நின்னு செய்யணும்...' இன்னமும் அம்மாவின் பக்கம் திரும்பவில்லை அவன்.

விஷ்வா பரத்தை தான் குறிப்பிடுகிறான் என்று புரிய அம்மாவின் முகத்தில் நிறையவே மாற்றம்.

'ஏன்??? அவன் பேரை எடுத்தாலே ஏன் உன் முகம் இப்படி மாறுது??? 'எஸ்... மூத்த பையன் தான்...' சட்டென திரும்பி அவன் அம்மாவின் முகம் பார்த்து சொல்ல அவன் பார்வையும் அந்த வார்த்தைகளில் அவன் கொடுத்த அழுத்தமும் அம்மாவை கொஞ்சம் உலுக்கி இருக்க வேண்டும்.

'நீ இல்லை இல்லைன்னு சொன்னாலும் உண்மை மாறிட போறது இல்லைமா...' என்றான் விஷ்வா நிதானமாக

பதிலே பேசவில்லை அம்மா. கண்களை மூடிக்கொண்டு தலையை அழுத்திக்கொண்டார் அவர். அவருக்கு தலை வலிக்கிறது என்று புரிகிறது விஷ்வாவுக்கு.

'ஏம்மா ரொம்ப தலை வலிக்குதா??? இப்போதெல்லாம் அடிக்கடி அம்மாவுக்கு இந்த தலைவலி வருகிறது.

'அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் சொல்றதை நீ கேளு எனக்கு எல்லாம் சரி ஆகிடும்..' சொன்னார் அவர்.

'மா நான் என்னமா தப்பா சொல்றேன். இங்கே பாரு இத்தனை நாள் போனது போகட்டும்மா... இனிமேலாவது கொஞ்சம் மாத்திக்கோ உன் மனசை. இருக்கறது ஒரே வாழ்கை. அதிலே அட்லீஸ்ட் நம்மை சுத்தி இருக்கறவங்கவங்களை மட்டுமாவது சந்தோஷமா வெச்சுப்போம்மா. அவனை கூப்பிடு... அது மட்டும் நீ செஞ்சா போதும் ....  மதத்தை நான் பார்த்துக்கறேன்.. ஜாம் ஜாம்னு நடத்திடுவோம்...'

...........................................

என்னமா??? பேசாம இருந்தா என்ன அர்த்தம்???

'எதுக்கு??? அவன் வந்து நம்ம சொத்திலே உரிமை கொண்டாடவா??? பட்டென கேட்டார் அம்மா. அவர் கேட்ட கேள்வியில் சிரிப்புதான் வந்தது விஷ்வாவுக்கு

'நீ இன்னும் அவனை பழைய பரத்தாவே நினைச்சிட்டு இருக்கியா என்ன??? அவன் ஊருக்கே சொத்து சேர்த்து வெச்சிருக்கான். உன் சொத்தை எதிர்ப்பார்த்து உட்கார்ந்திருகான்னு நினைச்சியா நீ???' சிரித்தான் விஷ்வா. 'அவனுக்கு இப்போ தேவை பாசம் மட்டும்தான்மா... ரொம்பவே தனியா இருக்கான்..' சொல்லும்போதே கொஞ்சம் வலித்தது விஷ்வாவுக்கு.

'நீ என்ன சொன்னாலும் நான் அவனை மறுபடியும் சேர்த்துக்கற மாதிரி இல்லை...'  அம்மாவின் பார்வை வேறு பக்கம் வெறித்தது.

'இந்த வீட்டிலே நான் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு??? உனக்கு ஞாபகம் இருக்கா?? ' அவன் கேட்க மெல்ல திரும்பினாள் அம்மா  'இங்கே பாரு... நீ இப்படியே இருந்தேனா  உன் சொத்தை நானும் அனுபவிக்க போறதில்லை... இந்த சொத்தை மட்டும் வெச்சிட்டு ஒண்ணுமே பண்ண முடியாதேன்னு நீ யோசிக்கிற மாதிரி செஞ்சிடுவேன் சொல்லிட்டேன் ...'

'நீ அவனுக்காக என்னை விட்டுட்டு போயிடுவியா விஷ்வா...' அவன் முகத்தை ஊடுருவினார்' அம்மா.

'கண்டிப்பா மாட்டேன்...' என்றான் உறுதியாக.. அப்படி செய்யறதா இருந்தா நான் எப்பவோ செஞ்சிருப்பேன். வயசான பெத்தவங்களை தனியா விட்டுட்டு ஓடற அளவுக்கு நான் கேவலமானவன் இல்லை ஆனா உன் கூட இருந்திட்டே என்னாலே உனக்கு எல்லாத்தையும் புரிய வைக்க முடியும்....'

பதில் பேசாமல் எழுந்து விட்டார் அம்மா. அவர் திரும்பி நடக்க..

'மா... ' என்றான் விஷ்வா ' இந்த ஃபங்ஷனுக்கு அண்ணா வரலைன்னா நானும் வர மாட்டேன். அப்புறம் மானம் போச்சு மரியாதை போச்சுன்னு குதிக்க கூடாது..'

அவன் சொன்னதை விட அந்த 'அண்ணா' என்ற அந்த வார்த்தை அம்மாவை சுட்டிருக்க வேண்டும். ஒரு முறை அவனை திரும்பி பார்த்தார். பின்னர் இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டு நடந்தார் அவர்.

'வாழ்கையின் ஆரம்ப காலத்தில் பெரிதாக வசதிகள் ஏதும் இல்லைதான் அம்மாவுக்கு. வசதியாக வாழ வேண்டும். தனக்கென நிறைய சொத்து சுகம் வேண்டுமென்பது அவரது குறிக்கோளாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் அளவுக்கு அதிகமாகவே வந்த பிறகும் இன்னமும் அந்த தேடல் தீரவில்லை என்றால்??? உள்ளம் இன்னமும் குறுகியே கிடந்தால்???

மனம் கொஞ்சம் கூட ஆறாமல் அவர் சென்ற திசையையே பார்த்திருந்தான் விஷ்வா.

இப்போது அறுபதாம் கல்யாணதிற்கான நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் நன்றாகவே நடந்துக்கொண்டிருக்கின்றன. அம்மா பரத்தை மட்டும் இன்னும் அழைக்கவில்லை. இவனும் எந்த ஏற்பாடுகளிலும் பங்கு கொள்வதாக இல்லை!!!

விஷ்வா  இங்கே அமர்ந்திருக்க....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.