மீண்டும் தன் சகோதரனை நோக்கி “ருயமர் மீண்டுமாய் காகதீயம் திரும்பும் முன் உன்னைப் பற்றி அவரிடம் நல் அபிமானம் உண்டாக்கிவிடு…அப்பொழுதுதான் பின்பு நீ மும்மியை பெண் கேட்கும் போது சரியாய் இருக்கும்…” என கேலித் தொனியில் மற்றொரு ரகசியத்தையும் உடைத்தான்.
“விந்தா…” என்ற வரதுங்கனின் உவகையும் கடிதலுமான அழைப்பே அவன் இந்த அறிவிப்பில் அதிர்ந்து போயிருக்கிறான் என்றாலும்..…விஷயம் முற்றிலும் உண்மையே என பறைசாற்றுகிறது ருயம்மாவுக்கு….
விஷயம் புரிபட அதீத வியப்புக்குட்பட்டாலும் துரிதமாய் வரதுங்கனை ஆராயந்தது இவள் மனது.
முதலில் இருந்தே வரதுங்கன் மீது தனக்கு நல்ல விதமான எண்ணமே இருந்திருக்கிறது என இவள் உணர்ந்து கொண்டிருந்த வேளை…..வரதுங்கனோ..
“தவறாக எண்ணிக் கொள்ளாதீர் ருயமரே…. மும்மியின் துடுக்குத்தனமும் பொறுப்புணர்வுமான அந்த சுபாவத்தின் மீது எனக்கு அபிமானம் இருக்கின்றது அவ்வளவே…. பண்டியர் என அறிந்தும் வீடு தேடி வந்த எங்களை எதிரி என ஒதுக்காமல்….. உண்மையாய் விருந்தோம்பி…..ஒற்றுமையாய் உறவாடி….எங்களிடம் இருந்த நல்லவைகளை நியாயம் தவறாமல் அங்கீகரித்து ஏன் சிலவைகளை அபிமானித்து என அத்தனை உயர்ந்த அவரது சுபாவத்திற்கு அவர் எம் தேச மகராணியாக வர தகுதி உள்ளவர்….. நான் அவர் மீது ஆவல் கொள்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத காரியமாகவே எனக்கு தோன்றுகிறது….” என்பதாய் ஒரு விளக்கம் சொல்ல….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்...
ருயம்மாவுக்குள்ளோ எதுவெல்லாமோ சில்லுகளாய் நொறுங்கும் உணர்வு…..உடைந்து விழுந்த அனைத்தும் கூர் முனையால் குத்துவதாய் கிழிப்பதாய் கொடும் மன நிகழ்வு…..
அதுவரைக்கும் அவளை ஆண்டு வந்த அத்தனை உவப்பும் பூரிப்பும் புது மழையொத்த மனமகிழ்வும் மாயைபோல மடிந்து போக…..அப்பட்டமாய் அதீதமாய் அடிசுருட்டுகிறது வலி வேதனை……ஏன்?????
அடுத்து யாரும் எதுவும் பகரும் முன்னும் அங்கு யாரோ வரும் அரவம்….
“ருயமரே நீர் கீழே என் அறையில் சென்று தங்கி இரும்……. நாங்கள் சற்று நேரத்தில் வருகிறோம்…” என இவளை அனுப்பி வைத்தான் பாண்டிய பராக்கிரமன்.
ருயம்மாவோ பெரும் பாறையாய் கணக்கும் இதயமோடும், எதிர்காலமற்ற சூனிய இருள் போன்ற ஒரு உணர்வோடும் சென்று விழுந்தாள் பராக்கிரமன் குறிப்பிட்ட அவ் வறையின் மஞ்சத்தில்.
‘பாண்டிய பராக்கிரமனை நான் நிச்சயமாய் மணக்க கூடாது…’ என்ற ஒரு ஆழ்ந்த நினைவு அவள் இதயத்தில். அழக்கூட தெம்பற்று விழுந்து கிடந்தாள் அவள்…..
இப்படித்தான் மெல்ல புரிகின்றது அவளுக்கு…..தான் மானகவசன் மீது பெருங்காதல் கொண்டிறுக்கிறேன் என்று….. கூடவே தெரிகின்றது இது பொருந்தாக் காதல்…. சொல்லொணா வேதனை தீயில் உழள்கிறது அவள் மனம்…
மெல்ல மெல்ல புரண்டு படுத்துக் கொண்டிருந்த பிரியாவுக்கு விழிப்பு வருகின்றது…. இன்னுமே அந்த கணமன உணர்வும்…. வலியும் வேதனையும்….
படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள். என்ன கனவிது…? இப்ப எதுக்கு இந்த லூசு ருயம்மா விழுந்து புரண்டு அழுதுட்டு இருக்கா? இவளும் லவ் பண்றா… அவனும் விரும்பித்தான் வந்து மேரேஜ் செய்றேன்னு சொல்றான்….அப்றம் ஏன்….? சரி எதாவதும் இருந்துட்டு போகட்டும்….அதுக்கு இப்ப இங்க இவ மனசு ஏன் இப்படி வலிக்குது….
சும்மாவே அழ நூறு காரணம் இருக்கு……அதுல இதுவும் கூடனுமா…? என்னமோ அதிசயமா நேத்துதான் கொஞ்சம் சந்தோஷமா தூங்கப் போனதே…அது பொறுக்காம இப்டி ஒரு அழுகாச்சி சீனா….?
ஒரு பக்கம் மனம் இப்படி ஓட….சட்டென அடுத்த க்வெஸ்டியன் ஆஜர்….
முந்தின நாள் விவன் மேல கோபத்துல தூங்கப் போனா….எழுந்து போய் அவன என்ன செய்து வச்சா? அந்த அளவுக்கு அவனுக்காக உருகுற மாதிரி கனவு…. நேத்து சந்தோஷமா தூங்கப் போனா இன்னைக்கு அழுது வடியுது கனவு…. ஏன் இப்படி மாத்தி மாத்தி??
நேற்றைய சந்தோஷத்துக்கும் இந்த கனவுக்கும் என்ன லிங்….??
அடிமனதின் வலிக்கு எதிராகவோ என்னவோ நேற்றைய நாளை மீண்டுமாய் நினைத்துப் பார்க்க தோன்றுகிறது இவளுக்கு…
நேத்து டாக்டர்ட்ட அப்பாய்ண்ட்மென்ட் முடியவும் விவன் இவளைக் கூட்டிப் போனது கண்மணியின் வீடு… அங்க விருந்துக்கு வர்றதா சொல்லி இருந்தாங்களே…
கண்மணி வீட்டுக்கு போகனும்னதுமே இங்க் ப்ளூவும் க்ரீனுமா அங்கங்க ஒன் ருபீ காயின் சைஸ்ல ஜரி புட்டாவோட… ஓரளவு கிராண்டாவே ஒரு சேரி கெட்டி கிளம்பி போயிருந்தது ரியு பொண்ணு…. கூடவே கொஞ்சமும் பிடிக்கலைனாலும் இவ மேரேஜப்ப கண்மணி மாட்டிவிட்டதுல இருந்து சில ஜ்வெல்ஸ் வேற…. வில்லேஜ் பீபிள் இதெல்லாம் எதிர்பார்ப்பாங்களே….. இப்டி இவ கண்மணி மாமியாரை நினைத்து அத்தனை பார்த்து பார்த்து கிளம்பி போயிருக்க….