(Reading time: 37 - 73 minutes)

துவும் நம்ம பக்கம் அது கட்டுதானே…. மாப்ள வீட்டு பொண்ணுங்க கல்யாணம் நிச்சயமானதும் கல்யாணப் பொண்ண தினமுமே சாயங்காலமா பார்க்கப் போவமே… சரி சாயந்தரம் போனா என்ன காலைல போனா என்னனு நான் காலைல கூட்டிடுப் போனா அது அப்ப வரைக்குமே சாப்டாம அழுதுட்டு கிடந்திறுக்கும் போல…. மனசு கஷ்டமா போச்சு….

அங்க மாப்ளைக்கும் தங்கச்சிய அழ அழ அடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு தனியா  உட்கார்ந்திருக்கதால சோறு தண்ணி இறங்கி இருக்காதுன்னு தோணிச்சா….. அதான் உன் மாப்ளய பட்னி போடாம பார்த்துக்கோன்னு சொல்லிட்டு வந்தேங்க….

இந்த பிரியா பிள்ள அவர கூப்ட்டு தினமும் பேசி சாப்ட சொல்லிட்டு இருந்தா அவருக்கும் தனியா இருக்காப்ல இருக்காது….இதுவும் அழுதுட்டு இருக்காதேன்னு எனக்கு தோணிச்சு…..

நம்ம காலம் மாறியா…? நம்ம மஹி எத்தனையா நம்ம மணிட்ட பேசுவான்….அப்டித்தானே அதுங்களும் நினைக்கும்னு நினச்சு நான் சொல்ல….. அதுக்கு அந்த பிரியா முழுச்சுது பாருங்க ஒரு மிரண்ட முழி….அப்பதான் எனக்கு எப்டி பேசுனாலும் அந்த பிள்ளைட்ட பேச தெரியலைனு புரிஞ்சுது…….

.அதான் அடுத்து அந்த பிள்ளைட்ட பேசுறதை குறச்சுட்டேன்….

அடுத்து அவிய கல்யாணத்துக்கு அந்த கார பிடிவாதமா வாங்கி கொடுக்க சொன்னதும் இப்டித்தான் தான்…. வில கூடுனா காரா வாங்கி கொடுத்தா, மணி என்ன வேணாலும் எவ்ளவுனாலும் செய்ய இங்க உரிமை இருக்கு… நாங்க குறுக்க வர மாட்டோம்னு காமிக்கிறதா அது இருக்கும்னு நினச்சேன்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

மாப்ளைக்கே அதுல ஒரு கணம் முகம் மாறிப் போச்சு……. நாங்களும் உங்கள மாதிரி பணக்காரங்கதான்…. எங்களையா சந்தேகப் பட்டு பொண்னு தர இழுத்தடிச்சன்னு நான் கேட்கிறாப்ல அவர் நினச்சுட்டாரோன்னு எனக்கு திக்குன்னு ஆகிட்டு….

இதுல இன்னைக்கு மணி வீட்டுக்கு முத தடவ வந்தவ அவ மதினி….. கொஞ்ச நாளா பிள்ள துக்கத்துல ஒன்னும் சாப்டாம, குச்சி வெள்ளரி கணக்கா சூம்பி போய் சோர்ந்து கிடக்காளேன்னு பார்த்து பார்த்துதான் சமச்சேன்….. ஆனா என் கையால சாப்டுட்டு படுத்துட்டா……எனக்கு எப்டில்லாம் பதறுது தெரியுமா…?... நிஜம்மா நல்ல மனசோடதாங்க சமச்சேன்…….

ரெண்டுவளுக்கும் கல்யாணம் இப்டி ஒத்த வார இடவெளியில நடந்திறுக்கு….. நாளைக்கு உண்டாறதும் ரெண்டு பேருக்கும் ஒன்னு போல இருக்கும்….அப்ப ரெண்டு மக்களும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்க முடியாது…..மணிய பார்த்துக்கிறாப்ல இந்த பிரியா பொண்ணையும் நம்ம வீட்ல கூட்டி வச்சு பிரசவம் பார்க்கனும்….

எனக்குதான் பிரசவம் பார்க்க என் அம்மாவும் மாமியாரும் இல்லாம இழுபடுறதுன்னா என்னதுன்னு அனுபவமா தெரியுமே…..அப்டி இந்த பிரியா பிள்ளைக்கும் ஆயிடக் கூடாதுன்ற நினப்புதாங்க சமைக்கிறப்பல்லாம் ஓடிச்சு…. இதுல என்னங்க தப்பு இருக்கு…? அந்த பிள்ளைக்கு சாப்பாடு ஒத்துகாம போச்சு…??”  கண்மணியின் மாமியார் தன் கணவரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார் என ப்ரியாவுக்கு சொல்ல தேவை எதுவும் இல்லை…

“சைலண்டா நான் முதல்ல வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததே உனக்கு அவங்க ஒரிஜினல் ஸ்லாங் தெரியனும்ன்றதுக்காகதான்…..நீ சொன்ன பிறகு தான் எனக்கு ஸ்ட்ரைக் ஆச்சு அவங்க உன் முன்ன ஸ்லாங் மாத்றங்கன்னு….. அதான் உனக்கு அவங்க ரூடா ஃபீலகிறாங்களே தவிர ரொம்ப டென்டர் ஹார்டட் தான் அவங்கன்னு காமிக்க நினச்சேன்….பட்  அவங்க  ஸ்லாங் சேஞ்சுக்கு  இப்டி ஒரு காரணம்ன்றது எனக்கே இப்பதான் தெரியும்…” இவளுக்கு கேட்கும்படியாய் சொல்லியபடி விவன் ப்ரியாவை சுடர் ஆன்டி இருந்த அந்த அறைக்கு அழைத்துப் போனான்.

அறை என்று அதை சொல்ல முடியாது….வரவேற்பறைக்கும்  டைனிங்க் அறைக்கும் இடையில் ஒரு மினி ஹால் போல அது…அதில் நடுவில் ஒரு  ராக்கிங் சேரில் மஹியின் அப்பா அமர்ந்திருக்க….. அருகில் தரையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார் சுடர் ஆன்டி….

அவரது கையோ சிஸ்டமேட்டிக்காய் ஜெட் வேகத்தில்  மடியிலிருந்த சுளவிலிருந்த புளியிலிருந்து விதையை நீள கோணி ஊசி மூலம் குத்தி நீக்கிக் கொண்டிருந்தது…..

இவர்களைப் பார்க்கவும் ஆன்டி அவரது பெரிய சரீரத்தை தூக்கிக் கொண்டு எழும்ப முயல…

அதற்குள் அவர் அருகில் போய் தரையில் அமர்ந்தான் விவன்….அவர் கையைப் பற்றி அவர் எழும்புவதை தடுக்கவும் செய்தான்.

“உட்காருங்க ஆன்டி… ஒரு நிமிஷம் ரெஸ்ட் எடுக்ற பழக்கம் கூட கிடையாது என்ன..?” இவன் கேட்க

அவரோ “என்ன மாப்ள தரையில உட்கார்ந்துகிட்டு……?”  என  அவசரமாய் இவனை தடுப்பதிலேயே கவனம் செலுத்தினார்….

 “தரைதான் ரொம்பவே வசதியா இருக்கு ஆன்டி….” என்று அவரை சமதான படுத்திய விவன்,

“ஏன் நீங்க உட்கார்றப்ப நாங்க உட்கார கூடாதா?” என விளையாட்டாய் சீண்டவும் செய்தான்.

இதற்குள் தான் எழும்பும் முயற்சியை அறவே கைவிட்டிருந்த சுடர் ஆன்டியோ “  நீங்க உட்கார கூடாதுன்னு யாரு சொன்னா…? மஹி இப்டி உடை போடுதப்ப தரைல உட்கார கஷ்ட படுவான்…..அதான் சொன்னேன்….மத்தபடி வயசு மக்க தரையில உட்கார்றதுல என்ன இருக்கு…? வயசானாதான் இவிய கணக்கா நாக்காலி தேடும் முதுகெலும்பு…..” என தன் கணவரை சுட்ட…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.