(Reading time: 37 - 73 minutes)

ரு ஆளரவமற்ற ரெசிடென்சியல் ஏரியால….எதோ ஒரு மொட்ட காம்பவ்ண்ட் வால் பக்கமா ரோட்லயே காரை நிறுத்திய விவன் “கொலுசு போட்றுக்கியா நீ….? என இவ போடாத நகையப் பத்தி முக்கியமாக விசாரித்தான்.

“வீட்ல வச்சே சொல்லி இருந்தா அதையும் மாட்டிட்டு வந்திருப்பேன்ல….. நகை ஸ்டாண்ட் மாதிரி இத்தன  மாட்டி இருக்றது பத்தலையா?” இவளோட ரிப்ளை இது…

இதுக்கு அவனிடமிருந்து சின்னதாய் ஸ்மைல்தான் கிடைத்தது …

“அதுக்கில்ல ரியு….போட்றுந்தா கழட்ட சொல்லி இருப்பேன்…..  இன்னும் ரெண்டு வீடு தள்ளிதான் அவங்க வீடு…..காரை இங்கயே நிறுத்திட்டுப் போவோம்……” அவன் சொல்ல சொல்ல இவளுக்கு அவன் கண்மணிக்கு எதோ சர்ப்ரைஸ் கொடுக்க ட்ரைப் பண்றான் என புரிய…. கொஞ்சம் ஸ்வாரஸ்யம் வந்து ஒட்டிக் கொள்கிறது….

‘இத்தன வயசிலும் அண்ணா தங்கைனா இப்டித்தான் போல….விளையாடிக்கிடலாமோ…. ஆனா கண்மணியின் மாமியார் இத சரியா எடுத்துப்பாங்களான்னு தெரியலையே’ இப்படி எல்லாம் தோன்றினாலும்….. காரைவிட்டு இறங்கி அவனுடன் நடக்க தொடங்கி இருந்தாள் இவள்….

அந்த புத்தம் புது பெரிய வீட்டின் திறந்து கிடந்த  கேட்டில் நின்றிருந்த செக்யூரிட்டி இவர்களைப் பார்த்ததும் “வாங்க சார்….வாங்கம்மா….கார் “ என ஆரம்பிக்க…

“ என்ன குமார் சார்….எப்படி இருக்கீங்க……கார பக்கத்துலதான் நிறுத்திறுக்கேன்…. ” என அதற்கு பதில் சொல்லியபடி இவளை உள்ளே அழைத்துப் போனான் விவன்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இது பேய்க் காதல்" - காதல் கலந்த கவிதைத் தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

ரொம்பவும் புது வீடு….தோட்டம் போட இடம் இருந்தாலும்…..இன்னும் செடிகள் கூட வைக்கப்படாமல் கிடந்த காலி இடத்துக்கு மத்தியில் சென்ற சிமென்ட் பாதையில் மெல்லவே நடந்தாள் இவள்….. சப்தம் வரக் கூடாதே….

அப்படி மெதுவாய் வீட்டு போர்டிகோவில் நுழையும் போதே வீட்டுக்குள்ளிருந்து காதில் விழுகிறது……”ஏ தாயி மணி… உங்க மதினிக்கு ஒரு வார்த்த போன் போட்டு கேட்டுடேன்…..கிளம்பிட்டாவளோ இல்லையோ….” வேறு  யார் கண்மணியின் மாமியார்தான்.

அருகில் வந்து கொண்டிருந்தவளை கைபற்றி நிறுத்தினான் விவன். திரும்பி அவனைப் பார்த்தவளை தன் வாயில் ஒற்றை விரல் வைத்து சைலண்ட் சைன் காண்பித்தான்.

“அதெல்லாம் கிளம்பிருப்பாங்க அத்த…”  கண்மணியின் பதில்…

“ஏம்ல….? தாலி கட்டின மறுநாள் காலைலதான் போய் கதவ தட்டினா இங்கிதமா இருக்காது…..இப்ப கூடவா ஃபோன் போட கூடாது….? அப்டி எதுவும் இந்த ஊர் பழக்கம் இருக்கோ….. ?” மாமியார் கேள்வி.

“அச்சோ அப்டில்லாம் இல்ல அத்த….அண்ணா ட்ரைவ் பண்ணிட்டு இருப்பான் இப்ப….அந்த டைம் நாம கூப்ட வேண்டாமேன்னு பார்த்தேன்….” இது மருமகள்…

“ஆமாமா அது சரிதான்…இங்க எம்புட்டு காரு…..எவ்ளவு சாதி சனம்……ரோடே கொள்ளாம ஒரே திபுதிபுன்னு கூட்டம்…. பாதசாரியா நடந்து போகவே பக்குன்னு இருக்கு……இதுல வண்டி ஓட்றதுன்னா சும்மாவா…?” ஒத்து ஊதும் ஓர் மதர் இன்லா…

“ஆனா மணி எனக்கு இந்த ஊர் பழக்கமெல்லாம் மறக்காம சொல்லி கொடுத்துடுல…….என் பட்டிகாட்டு கட்டப் பார்த்து உன் மதினுக்கு  நம்ம வீட்டோட சேரக் பிடிக்காதோன்னு மனசுக்கு இன்னுமே திகிலாதான் இருக்கு….” அவர் சொல்ல..

ஓ மை காட் எஃபெக்ட் இங்கு கேட்டிறுந்த ப்ரியாவிடம்.

அருகில் நின்ற விவன் காதுக்கருகில் எவ்வி “நான் ஒரு டைம் கூட அவங்கட்ட அப்டில்லாம் நடந்துக்கவே இல்ல விவன்…” கிசுகிசு குரலில் நம்புவானோ மாட்டானோ என்ற தவிப்போடே ஜெட் ஃபாஸ்ட் விளக்கம் இவளிடமிருந்து…. அழுது விடுவாள் போல் இவள்….

ப்ச்…. என இவள் பயத்தை மறுத்தவன்…. “உன்னப் பத்தி தெரியாதா ரியு…?” என இவள் காதில் இவளைப் போலவே சிறு குரலில் கிசுகிசுத்தான்.

அதற்குள்” அப்டில்லாம் அண்ணி ஒருநாளும் நினைக்க மாட்டாங்க அத்த….. அவங்களும் என்ன மாதிரிதான்…” கண்மணி அங்கு டிஃபென்ட் செய்து கொண்டிருக்க….இங்கு வாசலில் நிழலாடுகிறது….. வீட்டு வாயிலுக்கு வந்திருந்தார் கண்மணியின் மாமியார் சுடர்.

வெளியில் நின்ற இவர்களைப் பார்க்கவும் ஒரு திடுக்கிடல் அவர் முகத்தில்……அவர் பேசியதை இவங்க கேட்றுப்பாங்களோன்னு அவர் நினைப்பது ரியாவுக்கு புரிகிறது….

ஆனால் அடுத்து எதையும் காண்பித்துக் கொள்ளாமல் “வாங்க மாப்ள… வாம்மா “ என அவரது வழக்கமான அழுத்த குரலில் வரவேற்றார்.

அதில் இவர்கள் வந்துவிட்ட விஷயம் புரிந்து கண்மணியும்  வந்து வரவேற்க…. பின் ஃபார்மலான விருந்து உபச்சாரம்…

“மஹி….உன் மச்சான் வந்தாச்சு…..உடனே வா…”

“மஹிஅப்பா பிள்ளைங்க வந்தாச்சு இன்னும் அங்க என்ன செய்தவிய?”

“முதல் தடவ வந்திருக்காங்க…பால் பழம் கொடு மணி…”

“பூ எடுத்து வைக்க சொன்னனே…அத கொண்டு வந்து உன் அண்ணிட்ட கொடு…”

“நேரமாயிட்டு இல போடு…. போட்டோவெல்லாம் அப்றம் காமிச்சுகலாம்…”

“விருந்துன்னா உன் மாப்ளைக்கு அடுத்துதான் எப்பவும் நீ உட்காரனும்…”

“மணி நீயும் மஹியோட உட்காரு…..”

“சாப்பாட இப்டி கொறிக்க கூடாது…அள்ளி சாப்டனும்….”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.