(Reading time: 37 - 73 minutes)

காகதீயத்திற்கு டெல்லி சுல்தானிடமிருந்து எப்போதும் போர் ஆபத்து…..இங்கே பாண்டியர்களுக்கு சேரர்களிடமிருந்து எந்நேரமும் போர் சூழும் நிலை…..இதில் பாண்டியரும் காகதீயரும் உறவினர் ஆகும் பொழுது அவர்கள் இணைப்பைக் கண்டே அண்டை  நாட்டினர் போர்தொடுக்க தயங்குவர்தானே….நாம் வெறும் போர் நிறுத்தம் செய்து கொள்வதைக் காட்டிலும் இது இன்னுமாய் பிரயோஜனமுள்ளதாய் என் அமைச்சர்களுக்கு தோன்றியது….

எனக்கோ அதற்கும் மேலாக அந்த மணப் பெண்,  பெண்கள்  அரசாளக் கூடாது என்ற  சமூக நிர்பந்தத்தை தன் வாள் முனையால் மாற்றி எழுதிய வீர் மங்கை ருத்ரமாதேவியின் குடும்ப இளவரசி என்பது முக்கிய விஷயமாக தோன்றியது.

மேலும் மன்னர் பரம்பரையினர் அனைவரும் தங்களை  ஷத்ரியர் குலம் என அழைத்துக் கொள்வதும், ஆகையால் பிறப்பால் நாங்கள் உயர்ந்தவர் என மார்தட்டிக் கொள்வது நமது பிராந்தியம் முழுவதுமே வழமையாக இருக்கிறது….

ஆனால் அதற்கு நேர்மாறாக காகதீய அரசகுடும்பம்தான் நாங்கள் அரசாண்டாலும் பிறப்பால் எங்களை சூத்திரர் எனவே சொல்லிக் கொள்ள பிரியம் கொள்கிறோம்….. சூத்திரர்கள் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல….பிறப்பால் யாரும் மேலோரோ தாழ்ந்தவரோ  ஆக இயலாது ….அவரவர் சமூகத்திற்காற்றும் தொண்டால் மட்டுமே  உயர்ந்தவராயும் தாழ்ந்தவராயும் கணிக்கப்படுவர் என பிரகடனபடுத்துகிறது…. அதை தன் ராஜிய மக்கள் பின் பற்றும்படியும் செய்கிறது..….

 வேடர்களுக்கு விவசாய நிலம் கொடுப்பதும்….. தன் மக்களுக்கு நன்மை செய்தவர் எச் சாதியை சேர்ந்தவராய் இருந்தாலும் அவருக்கு நாட்டின் ஒரு பகுதியை ஆளும் பத்மநாயக்கா பதவியை கொடுப்பதுமென…..சாதி அமைப்பால் இன்னார் இத்தொழிலைத்தான் செய்ய வேண்டும் என எத் தடையும் கிடையாது என்ற பழங்கால முறையை பின் பற்றுகிறது…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

அக் குடும்ப சூழலில் வளர்ந்தவர் என்பதால் அரசகுமாரி ருயம்மாதேவியும் நான் எதிர்பார்க்கும் சமூக அழுத்தங்களுக்கு தலைவணங்காத இரும்பு இதயம், போரை வாழ்வின் அங்கமாய் பார்க்கும் குணம், எப்பிரிவினரையும் பாரபட்சம் இன்றி தாயன்போடு பார்க்கும் சுபாவம் உடையவராய் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று எனக்கு ஒரு நம்பிக்கை….

அதனால் இந்த விவாஹம் என் இதயத்திற்கு ஏற்புடையதாய் பட்டது….”

அது வரையும் மானகவசன் இவளை மணம் புரிய விவரித்த காரணங்களை பெரும் பிரமிப்பும் ஒரு வித உவகையும் சிறு கர்வமாயும் கேட்டுக் கொண்டிருந்த ருயம்மாவிற்கு, இறுதியில் இவளை கண்ணோடு கண்நோக்கி அதனால் இந்த விவாஹம் என் இதயத்திற்கு ஏற்புடையதாய் பட்டது…. என அவன் முடித்த போது அவனது பார்வையை தாங்கமுடியாமல் போயிற்று….

கணத்த ஜில்லிப்பும் தாங்கவொண படபடப்பும் அவள் இமையை தரைநோக்கி இழுக்க…..சற்றாய் தலை குனிந்தவள்…..தன் ஆண் வேடம் உணர்ந்து சமாளிப்பாய் தன் உடையில் ஏதோ இருப்பது போல் பாவித்து சிறிதாய் உடையை தட்டிவிட்டுக் கொண்டு, இயல்பு போல பார்வையை மீண்டுமாய் கடலின் புறம் திருப்பிக் கொண்டாள்.

எதிரியின் மீது இத்தனை அபிமானமா? அப்புறமேன் எங்களை இதுநாள் வரையும் எதிர்த்தார்களாம் உங்களவர் என எத்தனையோ கேட்டிருக்கலாம் இவள். ஆனால் அது எதுவும் தோன்றாமல் அல்லாடியது அவள் பெண்மை.

 அவ்வாறே பராக்கிரமனே நேரில் கோலகொண்டா வர வேண்டிய தேவையை குறித்து அவன் இன்னுமே சொல்லவில்லை என்பதும் தோன்றாமல் போனது ருயம்மாதேவிக்கு. ஆனால் அவ்விளக்கத்தை அவனோ கேளாமலே பூர்த்தி செய்தான்.

“ விவாஹ முடிவென்பது எனக்கு அதி முக்கியமானது….  அதனால்தான் நேரில் வந்தேன்……அதோடு விவாஹத்திற்கு முன் இளவரசியை நேரில் பார்ப்பது அவசியமாய்பட்டது….” ஏன் என சொல்லாமலே புரிந்தது இவளுக்கு….இவளே கூட பெண்ணை மாற்றும் நாடகத்தை அரங்கேற்ற எண்ணினாள்தானே…

மேற்கொண்டு இவள் எதையும் சொல்லும் முன்னும் “பிரபு…” என்ற அழைப்புடன் அங்கு வந்து சேர்ந்தது வரதுங்கன்….

வரதுங்கன் வந்திருக்கிறார் எனவுமே அதுவரை கயிறை தன் துணை போல் பற்றி நின்றிருந்த ருயமா அதைவிட்டு நிமிர்ந்து நிற்க….மானகவசனோ இன்னுமாய் இவளை விட்டு சற்று விலகிக் கொண்டவன்…

“வா வரதா…. ருயமருடன் சம்பாஷித்துக் கொண்டிருந்தேன்….” என வரதுங்கனுக்கு முகமன் கூறி பின் இவளை நோக்கி….

”வரதன் என் அமைச்சன் மட்டுமல்ல…..என் உடன் பிறந்த இளைய சகோதரனும் கூட…” என அடுத்த உண்மையை உடைக்க….

அதிர்ந்து போய் விழித்தது இவள் என்றால்…ஏன் சொல்கிறாய் இப்போது என தன் தமையனை கேள்வியாய் பார்த்தது வரதுங்கன்…..

“காகதீய எல்லைக்குள் இருக்கும் வரைக்கும் என்னை வெளிப் படுத்திக் கொள்வது நமக்கும் நம் வீர்ர்களுக்கும் ஆபத்தாய் முடியலாம்…. ஆனால் இப்போது எல்லை கடந்துவிட்டோம்…. இனியும் ருயமரிடம் மறைத்தால் அது நம்பி வந்திருக்கும் ஒரு உறவினரிடம் பொய்மையின் அடிப்படையில் உறவாடுவது போல் இருக்கின்றது….” என தான் இப்போது தன்னை வெளிப் படுத்திக் கொண்டதன் காரணத்தை தன் சகோதரனுக்கு விளக்கிய பராக்கிரமன்….

“உண்மையில் பாண்டிய சேனாதிபதியும் நான்தான், வரதுங்கன் அமைச்சனும்தான்….பொய் எதுவும் உங்களிடம் புகலவில்லை ருயமரே….எங்களது மற்ற பதவிகளை தெரியபடுத்திக் கொள்ளவில்லை அவ்வளவே….” என இவளுக்கு நிதானிப்புடன் மற்றுமொரு தன்னிலை விளக்கம் பகர்ந்து

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.