(Reading time: 37 - 73 minutes)

ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்டில்…”அங்க வச்சுட்டுப் போன்னு சொன்னேன்ல….” அவன் சொல்லும் தோரணை தான் நியாபகம் வருகிறது இவளுக்கு… அட்மையர் செய்ய தோணினாலும் அதற்கு பதில் சொல்ல மனம் இல்லை.

கேஷுவலாய் திட்டிக் கொண்டிருந்தவன் “உங்க பூர்விக்காவ அவங்க இன்லாஸ் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா ரியு…? அதுவும் நீ அவங்க கூட இருந்தன்றதுக்காகவா….?” ஆறுதலா…. அட்டெம்ட் ஆஃப் கன்சர்னா…. ‘ஐயோ என் செல்லமே’ டோனோ…. எதோ ஒன்றில் அவன் இக் கேள்வியைக் கேட்க…..

 அவள் அடி மனதில் அழுத்திக் கொண்டிருந்த உண்மையை அப்படியே கேட்பான் என  சற்றும் எதிர் பார்த்திருக்காத ரியா.

“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றபடி துள்ளி எழுந்து உட்கார்ந்திருந்தாள். அவன் பூர்விக்காவை எப்போதும் பாசிடிவாய் பேசியதே கிடையாது இவளறிந்தவரை……தென் இதை எப்படி தெரிந்து கொண்டான் இவன்?

அவனும் இந்நேரம் இவள் அருகில் பெட்டில் உட்கார்ந்தான்…..”உன் நேச்சர் தெரியும்…..அதை வச்சு சொல்றேன்…..மத்தபடி உன் அக்காவப் பத்தி எதுவும் தெரியாது…. ஆனா அவங்களுக்கு நடந்ததை வச்சு நீ சுடர் ஆன்டிய யோசிக்கிறது சரி இல்ல…” சொல்லியவன் அடுத்து  

“இங்க வா…” என்றபடி இவளை அழைத்துக் கொண்டு கீழே படி இறங்கினான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்...

வரவேற்பறையை  தாண்டவும் காதில் கேட்கிறது…… விவன் முகத்தை சற்று சங்கடமாய் பார்த்தபடி நின்றுவிட்டாள் ரியா.

“அதுக்கில்ல மஹி அப்பா….. மஹி நம்ம மணிய பொண்ணு கேட்ட பிறகு  ஆறேழு மாசமா ஆமான்னும் சொல்லாம இல்லைனும் சொல்லாம அவ அண்ணா எதுக்கு இழுத்தடிச்சு பிறகு சம்மதம் சொன்னாவ….?

அதுக்கு அவரு மோசம்னா அர்த்தம்….? அப்படி இல்ல….. மணி இந்த பெரிய ஊர்ல பிறந்து வளந்தவா….நான் கிராமம்….மஹியும் நம்ம வீட்லதான் வளந்தாம்னாலும்… படிப்பு அது இதுன்னு வெளிய வந்து…..அடுத்து வெளி நாடெல்லாம் போய்ட்டு வந்த பிறகுதான் மாப்ளட்ட மணிய கேட்டான்….வெளிய எப்படி பேசனும், யார்ட்ட எப்படி பழகனும்னு எல்லா நாகரீகமும் அவனுக்கு வரும்…..

அவன, அவன் குணத்த, அவன் பழக்க வழக்கம்ன்னு எல்லாம் பிடிச்சுட்டாலும் கூட என்னைப் பார்த்துதான மாப்ளதம்பி யோசிச்சுப் போய் உடனே கல்யாணத்துக்கு சம்மதிக்கல…..இந்த வீட்டுக்கு  தன் உடன் பிறந்தவா வந்தா நாம எப்படி வச்சுப்போம்னு மாப்ளைக்கு பயம்….

அது பயம் கிடையாது….பாசம்…. அப்றம் நம்மளப் பத்தி எல்லா வகையிலும் விசாரிச்சு திருப்தியான பிறகும், மணியே சரின்ன பிறகும், கல்யாணதேதிய அஞ்சு மாசம் கழிச்சுல்லா வச்சாவ மாப்ள….

நானும் நம்ம மணியும் ஓரளவு பழகிக்கனும்….  இந்த வீட்டுக்கு வந்துட்டு அவ தனியா நிக்ற மாதிரி முழிக்க கூடாது… எனக்கும் பட்டணத்து பொண்ணு எப்டி இருக்கும்…எப்டி இருக்காதுன்னு தெரிஞ்சாகனும்னு எல்லாம் நிதானிச்சு அப்றம்தான தன் வீட்டு பொண்ண மஹி கைல பிடிச்சு கொடுத்தாவ…..

எனக்கு மாப்ள மேல மரியாதையே அதால தான்… தாய் தகப்பன் இருந்தா கூட இத்தன பார்த்து  கல்யாணம் செய்வாவன்னு சொல்ல முடியாதே… நாம நம்ம  மவளுக்கு இவ்ளவு பார்க்கலையே….

அதுலெல்லாம் எனக்கு சந்தோஷம்தான்….கௌரதையும்தான்….

ஆனா அவ்ளவு நல்ல மனசு உள்ளவரே என் பேச்சையும் உடயவும் பார்க்கவும் பொண்ணு கொடுக்கவா வேண்டாமான்னு யோசிச்சுட்டார்ல…

இப்ப மணி மதினியும் மாப்ள பார்த்துகிட்ட பொண்ணுதான்….. மஹியையும் நம்ம வீட்டையும் தெளிச்சு எடுத்து முடிவு செய்தாப்ல தான் நிதானிச்சு இந்த பிரியா பொண்ணயும்  கட்டிட்டு இருப்பாக….

அப்படினாலே அந்த பிள்ளயும் தங்கமாதான இருக்கும்…. ஆனா அதுக்கும் என் சேலையும் பேச்சும் என்னதா தெரியுமோன்னு இருக்குல்ல….. அதுவும் அது முழுக்க முழுக்க இந்த ஊராமே…..கிராமம்னா என்னனே தெரியாதாமே…

நம்ம மஹி வயசு பையன்….தாயும் தகப்பனுமா நின்னு தனியாளா உடன் பிறந்தவளா வளக்கிறதுன்னா சும்மாவா…? கல்யாணத்துக்கு முந்தின நாளும்…கல்யாணம் முடியவும் இந்த மணிப் பிள்ள அவ அண்ணன் கழுத்த கட்டிட்டு அழுததை பார்தீஹல்ல….

அவுகள பிரிச்சா நல்லாவா இருக்கும்??

இதுல மணியோட மதினிக்கு நம்மள பார்க்க பயங்கரமா தெரிஞ்சுதுன்னா…அவ நம்மட்ட எப்படி சேருவா….? இங்க எப்டி வந்து போவா..…என்ன உறவாடுவா…? அப்றம் மணிக்கும் அவ அண்ணாவுக்கும் இது விரிசலாகிடாதா….அதான் என் கவலையே…

அதான் அவட்ட நான் இந்த மெட்ராஸ்காரவிய போல பேச கொள்ள நினைக்கிறது…..

ஆனா நான் என்ன செய்தாலும் அந்த பிரியா பிள்ள இடி விழுந்த எலிகணக்காவே மிரளது….. எல்லாமே தப்பாவே போகுது…..

அக்காவையும் அவர் வீட்டுகாரரையும் தொலச்சுட்டு விழுந்து கிடக்கிற பிள்ளய எப்டி தனியா விடன்னுதான் நான் மறுநாளே நம்ம மணிய கூட்டிட்டுப் போனது…. மணிக்கும் அண்ணனுக்கு வரப் போறவளை பார்க்க ஆசையாடுமே…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.