“இலையில இருக்கிறது ஒன்னும் மிச்சமிருக்க கூடாது…”
அடுத்து அனைத்தும் இப்படியாய் சுடர் ஆன்டியிடமிருந்து கட்டளைஸ் கமென்ட்மென்ட்கள்…. ஏவல்ஸ்…..
இதில் அரண்டு போன ரியா…
இது நம்ம ஊரு சுக்கா…இது மூள பிரட்டல்….. கோழிய இப்டி எலும்பு கூட சேர்ந்து வறுப்பாங்களாம் இங்க……மணி செய்தா…..இப்டி சின்னசின்ன துண்டா வறுக்கிறது தான் நம்ம பக்க வழக்கம்…. இது எங்க ஊர்ல கல்யாண விருந்துக்குன்னு செய்ற குறும்பாடு கூட்டு…. வஞ்சரம் சாப்டனும்…. இறாவ அவரக்காய் கூட போட்டு செய்வோம்….
இப்படி இன்ட்ரோவுடன் இலையில் லேண்டாகி இருந்தவைகளை பார்த்து மிரண்டு போய் மெது மெதுவாய் சாப்பிட ஆரம்பித்தாள்.
பொதுவாக ப்ரியா நான் வெஜ் ஃபேன்…. அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்…..இப்டி ருசியா சமச்சு கொடுத்தா வெட்டு வெட்டுன்னு வெட்ற ஆள்தான்….. ஆனா என்னமோ இப்ப இதல்லாம் பார்க்கவே எப்படியோ இருக்கு…
இதில் அருகிலிருந்த விவன் டேபிளுக்கு அடியிலாக அவள் கையைப் பிடித்து… “கட்டாயம் எல்லாம் சாப்டனும்னு இல்ல ரியு…உன்னால முடியலைனா விட்டுடு…” என சப்போர்ட்டுக்கு வந்தான்.
இவ சாப்டுற ஸ்டைல்லயே அவனுக்கு இவள் கஷ்டப்படுவது புரிந்துவிட்டது….
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
பொதுவாக ப்ரியாவுக்கு பரிமாறினா சாப்பாட மிச்சம் வைக்க பிடிக்காது…..இதில் விருந்து வீட்ல வேண்டாம்னு சொன்னா நம்ம செய்தது பிடிக்கலையோனு சமச்சவங்களுக்கு தோணுமோன்னு வேற டென்ஷன்….இங்க சமச்சது கண்மணியோட மாமியார்ன்றப்ப….. விவன் சொல்றதை செய்யல்லாம் இவளுக்கு தாட் கூட வர மாட்டேங்குது….
ஒருவாறு சமாளித்து இவள் சாப்பிட்டு முடிக்க….கை கழுவ எழும் போது விவன் இவளை முறைப்பது புரிகின்றது….
அடுத்து ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும்….. எல்லோரும் ஹாலில் இருந்து பேசிக் கொண்டிருக்க….விவன் “வா ரியு வீட பார்க்கலாம்……ஜஸ்ட் இப்பதான் வர்க் கம்ப்ளீட் செய்தாங்க…. வெட்டிங்க்கு கொஞ்சம் முன்னாலதான் ஹவுஸ் டெடிகேஷன் செய்தாங்க….” என்றபடி கேஷுவலாய் அவளை வீட்டின் உள்ளறைகளுக்கு அழைத்து சென்றான்…
உடன் ஓடி வந்த கண்மணி… மாடி போர்ஷன் போகவும்…. “விவா இங்கயே நீங்க ரெஸ்ட் எடுத்துக்கலாம்…. வெயிட் பண்ணு ஆல்பம் எடுத்துட்டு வரேன்…..” என்று இவர்களுக்கு தனிமை கொடுத்து ஓடிப் போனாள்..
“ இப்டி தனியா இருக்றோம்னா அவங்க தப்பா எடுக்கமாட்டாங்களா? “ ரியாவுக்கு என்னவெல்லாமோ செய்கிறது வயிற்றுக்கும் வாயுக்கும் இடையில்….இந்த அறையும் ஓய்வும் டைம்லி நீட்….
ஆனாலும் அவ பயத்தை அவ கேட்டு வச்சா…
“தப்பா எடுக்கவா? தப்பா நினைக்க என்ன இருக்கு?” இது விவன்..
அவன் என்ன சொல்ல வந்தான் என்றெல்லாம் அடுத்து கவனிக்க இவளுக்கு வழி இல்லை…..
அடிவயிற்றின் ஆர்பாட்டாம் அந்நேரமாய் முன்னறி த்ரோட்ல டொன்டொடொய்ங் எஃபெக்ட் கொடுக்க, அட்டாச் பாத் கதவை திறந்து கொண்டு உள்ளே ஓடினாள்….
சற்று முன் இன்டஸ்டைன்ல என்டர் ஆனதெல்லாம் இப்ப வாஷ் பேசின் வந்து சேர்ந்தது…..
எப்ப விவன் வந்தான்… எப்ப பின்னாலிருந்து இவள் நெற்றியை அவன் பிடித்துக் கொண்டான்…. எதுக்கப்புறம் திரும்பி அவன் மார்பில் புதைந்தாள்…..’ரொம்ப முடியலபா’ என எப்ப சொன்னா எதுவும் இவளுக்கு தெரியாது….
மயங்கி இருந்தாள்.
மெல்ல விழிப்பு வரும் போது எதிரில் நின்றிருந்த விவன் முகம் உர்ர்ர்ர்ர்…
சுற்று முற்றும் அறையைப் பார்த்து அங்கு யாரும் இல்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு….”இந்த டைம் இப்டித்தான் ஆகும்…..” ப்ரெக்னெனஸியில் வாமிட் காமன் என அவனுக்கு புரிய வைக்க முனைந்தாள் ரியா …
“ஆனா இப்ப ஆன்டி என்ன நினைப்பாங்க….அவங்க சாப்பாட சாப்டுட்டு நான் வாமிட் செய்துட்டேன் எனக்கு அவங்கள பிடிக்கலைனு நினைப்பாங்களா? அடுத்து இவள் பதற…
“சோ இந்த பயத்துல தான் மயக்கமா….?” ஸ்மால் வாய்ஸில் எகிறினான்…. பின் அவனே அடுத்த நொடி வெகு கன்சர்னாய்…
“ரியு நீ நினைக்கிற மாதிரில்லாம் இல்ல ரியு….ஆன்டிக்காக இவ்ளவு பயப்படாத….எதுனாலும் நேர்ல பேசிடு…..அப்படியே நீ பேசுனது பிடிக்கலைனாலும்…அதுக்காக நிமுவ விட்டு கொடுக்கிற ஆள் மஹி கிடையாது…..ஆன்டியும் கிடையாது….” எடுத்து சொன்னான்.
அவனையே விழி கொட்டாமல் பார்த்திருந்தாள். ‘உங்களுக்கு ரொம்ப தெரியுமோ?’ என கேட்க தோன்றுகிறது…..ஆனால் கேட்கவில்லை இவள்…
“இந்த மாதிரி டைம்ல நான்வெஜ் பிடிச்ச சிலருக்கு நான்வெஜ் நேம் கேட்டா கூட வாமிட் ஆகுமாம்….ரீசண்டா படிச்சேன்……அதான் வேண்டாம்னு சொன்னேன், சொன்னத கேட்டியா நீ…” அவனது அடுத்த accusation.