அதுவரை நின்று கொண்டிருந்த ப்ரியாவோ…. மெல்லமாய் சென்று விவனுக்கு அடுத்து அமர்ந்து கொண்டாள். ஏனோ அந்த சூழல் அவளுக்கு மிகவும் பிடித்தது…. அதோ முழுக் குடும்பத்துக்குள் இருப்பதாய் முதல் முறையாய் உணர்வு….
இவள் மீது ஒரு நொடி அக்சப்டிவ் அண்ட் அப்ரிஷியேட்டிவ் பார்வையை வீசிய விவன்…
மீண்டுமாய் ஆன்டியின் புறம் திரும்பியவன் “சரி ஒட்டுக் கேட்கிறவங்களுக்கு என்ன பனிஷ்மென்ட் கொடுக்கலாம்னு சொல்லுங்க முதல்ல…?” என டாபிக்கை ஆரம்பித்தான்.
ஆன்டி அதற்கு ஒரு கணம் திகைத்துப் பார்க்க “என்ன தண்டன கொடுக்கலாம்னு கேட்கேன்…” அவரிடம் பேசியபடி அவரது கையிலிருந்த சொளவிலிருந்து ஒரு சின்ன புளித் துண்டை கையில் எடுத்துக் கொண்டான்…
“நம்ம தோப்பு புளி மாப்ள…. குத்தி வச்சுட்டு போனா இங்க சமையலுக்கு ஆகும்னு நினச்சேன்….” ஆன்டி முதல்ல புளிக்குதான் ப்ராப்பர் எக்ஸ்ப்ளனேஷன் கொடுத்தவர்..…
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“ நான் புலம்புனத கேட்டியளோ…? எதுவும் புரிஞ்சுதா என்ன….புரியாதே” என அடுத்து தான் மாட்டிக் கொண்டாலும் மாட்டலையாங்கும் என்ற ரேஞ்சில் பதில் கொடுத்தார்.
“அதெல்லாம் நல்லாவே புரிஞ்சுது…..தமிழ புரியாதா என்ன…” என ஆன்டி புளி குத்தும் வேகத்தை பார்த்தபடியே ஆரம்பித்த விவன்… அவர் முகத்தைப் பார்த்து…
“நீங்க பேசுறது தேன் சொட்ற தமிழ் ஆன்டி….கேட்க கேட்க அவ்ளவு ஆசையா இருக்கும்…அது போய் நல்லா இல்லைனு இப்டில்லாம் மாத்திக்கவே வேண்டாம்….நீங்க பேசுறது எனக்கு மட்டுமில்ல உங்க பிரியா பிள்ளைக்கும் நல்லாவே புரியும்… பிடிக்கும்” சொல்லிக் கொண்டு போனவன் இயல்பாய் தன் அருகில் உட்கார்ந்திருந்த ப்ரியாவிடம் அவன் கையிலிருந்த புளியை நீட்ட…
சின்ன துணுக்குதான் அது…..ப்ரியாவோ அதை கையில் வாங்காமல்… கேஷுவலாய் வாயில் வாங்கிக் கொண்டாள்…. மே பி அந்த மொமன்ட் அந்த மூட் எல்லாம் அவளுக்கு ரொம்பவும் மனதுக்கு அன்யோன்ய உணர்வை தந்திருந்தது காரணமாய் இருக்கலாம்.
விவனுமே ஆ…என எந்த ஷாக் லுக்கும் கொடுக்காமல் சாதாரணமாய் அடுத்து ஆன்டியிடம் எதையோ சொல்லப் போக…
ஆன்டிதான்… அவரும் அதிர்ச்சி பாவம் எதுவும் கொடுக்கவில்லை… ” பிள்ளைக்கு புளிய போய் கொடுக்றீய… ?” என அவனை முந்தி பேசினார்.
“அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் போகனுமாங்கும்….” அவர் சொன்ன பிறகுதான் புளி சாப்பிடுவது நேரடியாய் எதைக் குறிக்கும் என ப்ரியாவுக்கு புரிய…
அதற்குள் ஆன்டியோ…. “ஆனா பொம்பிளபிள்ளைகளுக்கு என்னைக்குமே புளி பிடிக்கத்தான் செய்து….” என அதை சாதாரண நிகழ்வாக்கியவர்
“பிரவாயில்ல தாயி…. என் கையால இனி எத சாப்டவும் யோசிப்பியோன்னு இருந்துச்சு…..” என்றார் இவளிடம்.
இப்போது அவர் அருகில் சென்ற ப்ரியா அவர் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தாள்….. “எங்க ஊர்ல அம்மாவ இப்டில்லாம் கிஸ் செய்ய மாட்டாங்க…..ஆனா நான் இப்டித்தான் செய்வேன்….என் அம்மா நீங்க…”
அடுத்து ஆன்டியின் ஆல் புலம்பலுக்கும் சரியான விளக்கம் சொல்லி “அவ்ளவு காஸ்ட்லி கிஃப்ட்னதும் எதோ ஒன்னு தப்பா போகுதுன்னு உறுத்தல் ஆன்டி….மத்தபடி நானும் உங்கள எதுவும் நினைக்கல… “ என கார் விஷயத்தில் விவன் பாய்ன்ட்டையும் விளக்கி என ஆன்டி குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்து
அடுத்தும் இரவுவரை அங்கிருந்துவிட்டு வீடு திரும்பிய ப்ரியா மனதில் நின்றது ஆன்டிக்கு அவ கொடுத்த கிஸ்தான்….. நிஜமாவே ஆன்டி கூட இருப்பது அம்மா கூட இருக்ற ஃபீல கொடுத்திருந்தது அவளுக்கு…
அவர் எல்லா விஷயத்திலும் கொஞ்சினர் என்றெல்லாம் இல்லை….சில விஷயத்தில் அவர் ஸ்ட்ரிக்ட் தான்…. ஆனாலும் அவரிடம் ஃபீல் அட் ஹோம் நிலையில் மனம்….
இதில் எதுக்கு இப்படி ஒரு அழுகாச்சி கனவு???
அதையே நினைத்தபடி எழுந்தவள்…. ப்ரெஷில் பேஃஸ்ட் வைத்து அதை எடுத்து வாயில் வைக்க…. குவக்…. குமட்டிய குமட்டலில்…. அவசரமாய் பேசின் நோக்கி வேகமாய் குனிய அவள் கண்ணில் படுகிறது நீண்டு ஆடிய அவளது தாலி செயின்….
ஓ மை காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்………
அலறிவிட்டாள் ரியா….
“ஹேய் என்னாச்சு ரியு…?” அவள் சத்தம் கேட்டு வந்திருந்த வியன்…. அவள் அதிர்ந்து நின்ற கோலத்தைப் பார்த்து அருகில் வேகமாக வந்தான்….
“இது……இது…” இவளால் சொல்ல கூட முடியவில்லை….
“என்ன ரியு…?” அவனும் இப்போது அவள் கை காட்டிய அவளது செயினைப் பார்த்தான்…
இவன் அணிவித்த செயினில்….இவன் அணிவித்த அந்த ஆர்டின் ஷேப் பென்டன்ட் தவிர ஒரு குண்டு வளையமும் தொங்குகிறது….வளையம் என்றால் வளையம் என மொட்டையாய் சொல்ல முடியாது….அதீத வேலைப் பாடுகள் உள்ள தங்க வளையம்…..
அதை அவள் கனவில் பாண்டியன் பராக்கிரமனின் கையில் பார்த்திருக்கிறாள்….. அவரது மோதிரம்……
அப்படியானால்?????
தொடரும்
{kunena_discuss:1063}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.