(Reading time: 19 - 38 minutes)

தோ அடை மழைப் பெய்து, அதில் நனைந்து, குளிரில் நடுங்குபவனுக்கு ஃபில்டர் காஃபி கிடைத்தது போல ஒரு நிம்மதி உணர்வு வந்தது அவனுக்கு. சகிதீபனை நன்றியுடன் பார்த்தான் அந்த புதியவன். மைத்ரேயியிக்கு கேட்காதபடி சகியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான் அவன்.

“தேங்க்ஸ் பாஸ்.. நல்ல வேளையா நீங்க வந்தீங்க!”

“ஹா ஹா யாமிருக்க பயமேன்?” என்று அபயமளிப்பது போல சிரித்தான் சகி.

“பயமே இந்த பொண்ணுதான்.. நான் ஏதோ கோபத்துல அப்படி பேசினேன்தான்.. ஆனா இந்த பொண்ணு கத்தவும் ஒரு மாதிரி ஆகிடுச்சு.. நல்ல வேளையாய் வாய்ச்சண்டையில் இருக்கும்போதே நீங்க வந்துட்டீங்க.. அந்த பொண்ணு பாட்டுக்கு அடிக்க வந்திருந்தால் என்ன ஆகிருக்கும்!” என்று அவன் சொல்லவும்,

“இவ்வளவு காமிடி பீஸா டா நீ?”என்று சகிதீபனின் மைண்ட்வாய்ஸ் கேலி செய்தது. இருந்தும் அதை வெளிப்படுத்தாமல் ரொம்ப நல்லவன் போல, பேசினான் சகி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ ஆனாலும் பாஸ் எதுக்கு இவ்வளவு கோபம்? எல்லாருக்கும் பிரச்சனை இருக்கத்தானே செய்யுது? யாரோ ஒருத்தர்கிட்டயே இப்படி வார்த்தையை விடுறீங்களே! அப்போ உற்றவங்க மேல கோபம் வந்தா நீங்க நெற்றிக் கண்ணையே திறந்திருப்பீங்க போல!” என்றான் அவன் கனிவான தொனியில்.

மைத்ரேயி சொன்னதைத் தான் சகியும் சொன்னான். ஆனால், அதை அவன் சொன்ன விதம் தான் வேறு. யாரோ ஒருவன் அக்கறையாய் தன்மையாய் பேசுவது போலத்தான் அந்த இளைஞனுக்கு தோன்றியது.

“நானும் என் கோபத்தை குறைக்கணும்னு ட்ரை பண்ணுறேன் பாஸ்! ஆனால் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. அந்த பொண்ணும் இதே தான் சொன்னா.. ஆனா அவ சொன்ன விதம் எனக்கு கோபத்தை தான் தூண்டினிச்சு! உங்களுக்கு ரொம்பவும் தெரிஞ்ச பொண்ணு போல?” என்று கேட்டான் அவன்.

“ ஹா ஹா எதை வெச்சு சொல்லுறிங்க?”

“ பின்ன, பொதுவா இந்த மாதிரி சூழ்நிலையில் ஹீரோ எண்ட்ரீ கொடுத்துக்கிட்டு ஒரு பையன் வந்தால், அவன் நிச்சயம் அந்த பொண்ணுக்கு வேண்டியவனாக இருக்கனுமே!” என்றான் அவன். சட்டென புன்னகைத்திருந்தான் சகிதீபன்.

அவளுக்கும் எனக்கும் என்ன பந்தம்?

உடன் பிறந்தும் ரத்தம் பகிர வில்லை!

அவள் எனக்கு ரத்த தானமும் செய்ததில்லை!

எனினும் எனது ஒவ்வொரு செல்லிலும்

ஊடுருவி பயணிக்கின்றாள்!

அவள் என் உறவு இல்லை!

சொல்லிக் கொள்ளும்படி சொந்தம்

இன்னும் அமைக்கவில்லை!

ஆனால், எனக்குள் சொர்க்கத்தை  காட்டிக் கொண்டிருக்கின்றாள்!

தோழி இல்லை ! இன்னும் தோளில்

சாய்த்துக்கொள்ளவில்லை!

எதிரியும் இல்லை! எதிரில் நின்றாலும்,

என்னிடம் எதிர்வாதம் செய்யவில்லை!

இது தான் எங்கள் உறவு என்று சொல்ல

எந்த மொழியிலும் வார்த்தையே இல்லை!

எந்த கவிஞனும் எங்களுக்காக மை சிந்தியதில்லை!

உலகமே அறியாத உத்தம பந்தம்,

கனவிலேயே கை கூடிய பிணைப்பு!

நானே அவள்! அவளே நான்!

 என்று வாய்மொழிய ஆசைப்பட்டான் சகிதீபன்.. ஆனால் இந்த நேரத்தில் அதை சொல்வது எப்படி சரியாகும்?

சின்ன சிரிப்புடன், “தெரிஞ்ச பொண்ணுதான்” என்றான் சகி. அந்த இளைஞன் மீண்டும் ஏதாவது பேச முனைவான் என்று அறிந்துவைத்திருந்தவன்,

“ஓகே பாஸ் ..இன்னொரு நாள் பார்க்கலாம்!” என்றபடி அங்கிருந்து மெதுவாய் நகர்ந்தான். அந்த இளைஞனுக்கு முன் நின்று கொண்டிருந்தவள், எப்போதோ தனது கைப்பேசியில் பாடலை நிறுத்திவிட்டு, போலியாய் ஹெட்போனை காதில் மாட்டியிருந்தாள்.

அவர்கள் பேசியது மொத்தமாய் கேட்டிருந்தாள் மைத்ரேயி.

“தெரிஞ்ச பொண்ணு” னு சொன்னானே? யாரிவன்?என்ற கேள்வி ஆர்வத்தை தூண்டினாலும், சட்டென திரும்பினாள் அவளது கெத்து என்னாவது?

பணத்தை எடுத்துவிட்டு, தனக்கு பின் நின்றவனிடம்,

“சாரி.. ஆனால் தன்மையாய் பேசி பழகுங்க.. இந்த அறிவுரை எனக்கும் பொருந்தும்னு புரியுது.. பாய்” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.