(Reading time: 19 - 38 minutes)

வன் குரல் கேட்டு நிமிர்ந்தவளின் முகம் பரிட்சயத்தினாலேயே தன்னால் மலர்ந்தது அப்போதுதான் அவன் காலருகே ஏதோ ஊர்வதை கவனித்தாள் கயல்விழி.

“மாமா.. பாம்பு” என்று அவள் கத்த அவன் நகருவதாய் நினைத்து பாம்பின் பக்கமாய் நகர, பாம்பு அவனை கொத்திவிட்டிருந்தது.

“ஐயோ கதிரு மாமா” என்றபடி ஓடி வந்தவள், உடனே குனிந்து அவன் காலுக்கு கட்டு போட்டுவிட்டாள்.

“பார்த்து வர்றது இல்லையா? வாங்க டாக்டரை வீடு பக்கம் தான்.. வாங்க என் கூட” என்று பதறினாள் கயல்விழி. இதுபோன்ற பாம்பையெல்லாம் அவன் வயலில் பார்க்காததா? ஆனால் தனக்காக ஒரு பெண் இந்த அளவிற்கு பதறுவதை இப்போதுதான் பார்க்கிறான் கதிரோவியன்.

எதையும் உடனுக்குடன் சாதித்து செய்து முடிக்கும் திறன் இருந்தும் அவளது பேச்சுக்கு கட்டுபட்டு நடக்க பிடித்தவனாய் கயல்விழியின் சொல் கேட்டு நடந்தான் கதிரோவியன். (இப்போவே தலையாட்ட ஆரம்பிச்சுட்டீங்களா ஓவியன்? குட் குட்!)

டாக்டரின் வீட்டிலிருந்து வெளிவந்தனர் இருவரும்.

“ இப்போ எப்படி இருக்கீங்க மாமா?”

“ம்ம் ஃபைன்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

“நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?”

“..”

“உங்களைத்தான் கேட்குறேன் மாமா..”. மூச்சுக்கு முன்னூறு மாமா போட்டு பேசுபவளை மனதிற்குள் ரசித்தவன், “உனக்காகத்தான் வந்தேன்!’ என்று சொல்லாமல்,

“எனக்கு டைம் ஆச்சு.. கிளம்புறேன்” என்றான்.

“ உங்களால பைக் ஓட்ட முடியுமா மாமா? நான் கூட வரவா?”

“நீயா?”

“ஆமா”

“உன்னால என்கூட வரமுடியுமா?” இருபொருளில் கேட்டான் கதிரோவியன்.

“ஏன் முடியாது?” என்று கேட்டாள் பேதை அவள்.

“ ஹ்ம்ம் தைரியசாலிதான் நீ.. நான் போயிக்குவேன்// நீ கிளம்பு!”

“ நீங்க பத்திரமா வீட்டுக்கு சேர்ந்துட்டீங்கன்னு எனக்கு எப்படி தெரியும்?”. அவள் கைகளில் இருந்த செல்ஃபோனை பிடுங்கினான் கதிரோவியன்.

“இது என் நம்பர்.. உனக்கு என்ன  தெரியணுமோ அதை நீயே கேட்டு தெரிஞ்சுக்கோ”என்றவன் அங்கிருந்து விடுவிடுவென கிளம்பினான். முடியவில்லை அவனால்! அவளது அருகாமையில் அவனால் தனது தந்தைக்கு கொடுத்த வாக்கினை காப்பற்ற முடியவில்லை! உடனே அங்கிருந்து சென்றுவிட்டிருந்தான்.

நடந்ததை நினைத்து முடித்த கயல்விழி பெருமூச்சு விட்டாள். சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீராமின் முகமும், மைத்ரேயியின் முகமும் நினைவிற்கு வந்தது. முதன்முறையாய் கதிர் தன் வீட்டிற்கு வந்து சென்றபின் இருவரும் தன்னை கவலையாய் பார்த்ததை நினைவுக் கூர்ந்தாள்.

“ இப்போ நலம் விசாரிக்கணும்னு தோணும்.. அப்பறம் கொஞ்சம் பேசணும்னு தோணும்.. கூடவே இருக்கனும்னு தோணும்னு.. இதெல்லாம் எல்லாருக்கும் கஷ்டத்தை தான் தரும்.. தன்னை பாதுக்காக்க தெரியாத அளவுக்கு சின்ன பையனா இந்த கதிர் மாமா? நாளைக்கே அவருக்கு உதவி செஞ்ச விஷயத்தை வீட்டில் எல்லாருக்கும் சொல்லிடணும்.. மனசுல பொய்யை சுமக்க கூடாது!” என்று தெளிவான முடிவுக்கு வந்தாள் கயல்விழி. அதோடு அவளது மனபாரங்களும் விலகி, அவளுக்கு நித்திரையை வழங்கின.

றுநாள், புது இடம் என்பதினால், உடனே கண்விழித்து விட்டிருந்தாள் மைத்ரேயி. ஏதோ ஒரு உந்துதலில், அவள் விஷ்வானிகா பக்கம் திரும்ப, அவள் வாயிலிருந்து நுரைத் தள்ளிக் கொண்டிருந்தது.

“வினி.. வினி.. என்னம்மா.. என்னாச்சு?” என்று விஷ்வானிகாவின் கன்னத்தை அறைந்து உலுக்கிட, அவளோ மண்ணுலகை நிரந்தரமாய் பிரியும் பயணத்தில் இருந்தாள்.

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.