(Reading time: 19 - 38 minutes)

து, நீங்கல்லாம் அளந்து பேசுற ஆளுன்னா, அப்போ நாங்க யாராம்?” என்று அவனுக்கு ஈடாக பேச ஆரம்பித்தாள் மைத்ரேயி. என்ன பேசினார்கள் என்று கேட்டால் யோசிப்பார்கள்..ஆனால் இடைவிடாது பேசினார்கள்.

“ஹும் நீங்க டீச்சர்ன்னு தெரிஞ்சுபோச்சு.. ஆனா இன்னமும் பேரை சொல்லாம இருக்கீங்களே?”

“ மைத்ரேயி..”

“மை..த்..ரே..யி..” மிகவும் பொறுமையாய் அவளது பெயரை உச்சரித்து பார்த்தான் சகி. சில நொடிகளுக்கு பின்,

“மாயா” என்றான்.

“ஹான்??”

“இனிமே நான் உங்களை மாயான்னு தான் கூப்பிடுவேன்..”

“உங்க பேரு?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“சகிதீபன்”. பெயரை சொல்லும்போது கூட ஸ்டைலாகத்தான் சொன்னான் சகி.

“ரொம்ப அழகான பெயர்..”

“ஆஹான்.. நீங்களே சொல்றீங்களே அப்போ சரியாகத்தான் இருக்கும்”

“ஹ்ம்ம்ம்”

“சரி சொல்லுங்க”

“என்ன சொல்லனும்?”

“எனக்கும் ஒரு நிக் நேம் வெச்சுருப்பீங்களே ? அதென்ன சொல்லுங்க?”

“ கேடி! நாம கீதன்னு நிக் நேம் வெச்சதை கண்டுபிடிச்சிட்டானே!”

“சரி .. அதை அப்பறமா சொல்லுங்க.. இப்போ இறங்கி வாங்க” என்றான் சகி.

அவனது வீட்டிற்கு வந்திருந்தனர் இருவரும்.

“என்னதிது? நாம ஹாஸ்டல் போகலையா?”

“நல்ல கதையா இருக்கே? நீங்க அட்ரஸ் சொல்லலைன்னா நான் எப்படிமா போக முடியும்?”

“நீங்க கேட்ருக்கலாம்ல?”

“நீங்க சொல்லியிருக்கலாம்ல?”

“இப்போ என்ன பண்ணுறது?”

“ரிலாக்ஸ் மாயா.. இதுவும் உங்க வீடு மாதிரி நினைச்சிக்கோங்க.. எப்படியும் ஹாஸ்டல் இந்நேரம் பூட்டி இருப்பாங்க. நீங்க அங்க போனாலும், தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதா இருக்கும்..சோ..” என்று சகி பேச வரவும்,

“டேய் கண்ணா வீட்டுக்குள்ள வராமல் என்ன பண்ணுற ?” என்று குரல் கொடுத்துக் கொண்டே அங்கு வந்தார் சாரதா.

“ அம்மா, இ.. இவங்க மைத்ரேயி.. என்னுடைய ப்ரண்ட்.. ஹாஸ்டலில் தங்கி இருக்காங்க.. இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிப்பாங்க.. மாயா, இவங்கதான் என்னை சுமந்த பெண் தெய்வம்” என்று இரு பெண்களையும் அறிமுகப்படுத்தி வைத்தான் சகிதீபன்.

“டேய், நீயே இன்னைக்குத்தான் வந்த, அதுக்குள்ள ப்ரண்டா? உனக்கு நல்ல நண்பனே கிடைக்கலயாம்மா? இப்படி மாட்டிக்கிட்டியே! உள்ளே வாம்மா” என்று புன்னகைத்தபடி அவளை கைப் பிடித்து கொண்டு உள்ளே சென்றார் சாரதா.

மிகவும் ஆச்சர்யமாய் அவரைப் பார்த்தாள் மைத்ரேயி. சாரதா மட்டுமல்ல, அருண் தாத்தா, வேணுகோபாலன், அபிநந்தன், நந்திதா, விஷ்வானிகா அனைவருமே அவளிடம் ஸ்னேகத்தை வெளிப்படுத்தினர்.

“போதும் போதும் மிச்சத்தை காலைல பேசலாம் ரொம்ப நேரமாகுது. வினி, மயூவை உன்னோடு கூட்டிட்டு போ.. எல்லாரும் தூங்குங்க! குட் நைட்” குடும்பத் தலைவியாய் ஆணை பிறப்பித்து அனைவரையும் உறங்க அனுப்பி வைத்தார் சாரதா.

அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு எழுந்துக் கொண்ட மைத்ரேயி, பார்வையினாலேயே சகிதீபனிடம் அனுமதி வேண்டினாள். அவனும் தன்னிரு விழிகளினால் அவளுக்கு பச்சைக் கொடி காட்டிட, விஷ்வானிகாவை பின் தொடர்ந்தாள் கீதனின் மாயா.

பேரனுக்கும், மைத்ரேயியுக்கும் நடுவில் நடக்கும் மௌன உரையாடல்களை கவனித்த தாத்தா அவனை தனியாய் இழுத்துக் கொண்டு வந்தார். ஏனோ, இந்த முறை அருண் தாத்தாவின் முகத்தைப் பார்த்ததுமே சகிக்கு சாம்பவி பாட்டியின் ஞாபகம் வந்தது.

“தீப்ஸ்..”

“என்ன அருண்?”

“யாரு இந்த பொண்ணு?”

“அதான் ப்ரண்டுன்னு சொன்னேன்ல?”

“டேய் நம்ம வீட்டு தூணும் துரும்பும் கூட உன் பேச்சை நம்பல..!”

“இருக்கட்டும்.. எல்லாரும் எல்லா நேரமும் உண்மையாகத்தான் இருக்காங்களா?” துளைக்கும் பார்வையுடன் தாத்தாவை பார்த்தான் சகிதீபன்.

“தீப்ஸ்??”

“உண்மை எப்போ வெளிவரணுமோ அப்போ வரும் தாத்தா.. நான் வர வைப்பேன்!” சவால் விடும் தொனியில் பேசி விட்டு அங்கிருந்து சென்றான்.

விஷ்வானிகாவின் அறை..!

“ நீங்க ட்ரெஸ் சேன்ச் பண்ணிக்கிறிங்களா மைத்ரேயி? என்கிட்ட புது ட்ரெஸ் இருக்கு!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.