(Reading time: 19 - 38 minutes)

ரு நிமிஷம்..”

“என்ன?”

“நீங்க என்னை மைத்ரேயின்னு கூப்பிடுறதுக்கு பதிலாக , மையூன்னு கூப்பிடலாமே.. என் வீட்டில அப்படித்தான் கூப்பிடுவாங்க..”

“ அப்படியே கூப்பிட்டுட்டா போச்சு.. நீங்களும் என்னை வினின்னு கூப்பிடுங்க.. சரி நான் உங்களுக்கு ட்ரேஸ் எடுக்குறேன்” என்றவள் தன் அறையில் இருந்த அந்த அலமாரியின் அருகில் சென்றாள்.

செல்லும்போது, தனது உடலின் ஒவ்வொரு செல்லும் நடுங்குவது போல உணர்ந்தாள் விஷ்வானிகா. கண்கள் லேசாய் கலங்கியது. அந்த அலமாரியைத் திறந்தாள். எல்லாம் புது ஆடைகள்.

ஆசையாய் ஒருமுறை அவற்றை வருடியவளுக்கு விழிகள் கலங்கின. மைத்ரேயிக்கு மாற்று உடை கொடுத்துவிட்டு விஷ்வானிகா உறங்க சென்று விட்டாள். நிதர்சன உலகில் இதற்குமேல் பயணிக்க முடியாது என்று உடலும் மனமும் கெஞ்சிட, நித்ராதேவியின் மடியைத் தேடி ஓடினாள் அவள்.

மாற்று உடை அணிந்து வந்த மைத்ரேயி, விஷ்வானிகா கண்மூடி படுத்திருந்ததை பார்த்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

அவளுக்கு எல்லாமே புதிதாகத்தான் இருந்தது.

சகிதீபன், அவனுடனான கனவுகள், அவன் வீடு, அவன் குடும்பத்தினர், அவர்களது உபசரிப்பு ..எல்லாவற்றையும் அசைப்போட்டாள். அவளையும் மீறி ஏதோ பாதுகாப்பு உணர்வு மனதினுள் பரவியது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

தே நேரம், தனது செல்ஃபோனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்விழி. மணி பன்னிரண்டுக்கு மேலானது. இன்னும் கதிரோவியன் தனக்கு ஃபோன் செய்யவில்லை! அப்படி என்னவொரு அழுத்தம் இவனுக்கு ? தானேத்தான் பேச வேண்டுமோ?

செல்ஃபோனில் அவனது எண்ணை தட்டிவிட்டு அழைக்கலாமா வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். (அட என்னமா இப்படி புரியாம பேசுற? என்ன நடந்துச்சுனு முதலில் சொல்லு!)

சில மணி நேரங்களுக்கு முன்பு,

“ஏய் சின்னவளே, பொழுது சாய்ஞ்ச நேரத்துல எங்கடீ போற?” தனது பேத்தியைப் பார்த்து வினவினார் கயல்விழியின் அப்பத்தா. அவரது குரலைக் கேட்டு வாசுகியும், ஸ்ரீராமும் அங்கு வந்தனர்.

“தங்கச்சி, என்னடாம்மா? வெளில போகணுமா?”

“ ஆமா அண்ணா, வேணி பாட்டியை பார்த்துட்டு வரேன்!”

“ இந்த நேரத்துல எதுக்கு டீ? காலையில பேச வேண்டியதுதானே?””

“இல்லம்மா.. பாட்டிக்கு உடம்பு சரியில்லை..”

“பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு உனக்கு எப்படிம்மா தெரியும்?”

“எனக்கு வாட்ஸ் அப்ல வாய்ஸ் நோட் அனுப்பினாங்களே..” என்று கூலாய் சொன்னாள் கயல்விழி.

“ஹாஹா.. பாட்டிக்கும் சொல்லிக் கொடுத்துட்டியா? இருடா நான் துணைக்கு வரேன்..”என்று கிளம்பினான் ஸ்ரீராம்.

“அண்ணே, நீ அடங்க மாட்டியா? ரெண்டு தெரு தள்ளி தானே பாட்டி வீடு? நானே போய்க்கிறேன்.. என்னுடைய ஸ்கூட்டியில் போறேன்” என்றாள் கயல் பிடிவாதமாக.

“நல்லா இருக்குடீயம்மா.. வயசு பொண்ணை தனியா அனுப்பறதா?” என்று அப்பத்தா ஆட்செபிக்க,

“அப்பத்தா, நான் உன் பேத்தி.. தைரியசாலி..” என்று பீற்றிக் கொண்டாள் கயல்விழி. அவள் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாரால் மாற்றிட முடியும்?”

“ சரிம்மா.. சீக்கிரம் வந்திடு..” என்று தங்கையை அனுப்பி வைத்தான் ஸ்ரீராம்.

“இது கொஞ்சம் கூட சரியில்லை ஸ்ரீ.. மையூவுக்கும் கயலுக்கும் நீ ரொம்ப  செல்லம் கொடுக்குற!” என்று குறையாய் சொன்னார் வாசுகி..

“அம்மா, அவங்க எனக்கு தங்கச்சிங்க இல்லம்மா.. என் குழந்தைங்க! நான் பாசம் காட்டாமல் வேற யாரு காட்டபோறாங்களாம்?” என்றான் ஸ்ரீராம். அவனது அன்பினில் நெகிழ்ந்தனர் பெண்கள் இருவரும்.

வேணி பாட்டி அதே ஊரில் வசிப்பவர். அவருக்கு ஆதரவளிக்க மகனோ, பேரப்பிள்ளையோ யாரும் இல்லாததால், கயல்விழியின் குடும்பத்தினர் அவர் மீது பாசமாக இருப்பார்கள். அதுவும், கயல்விழிக்கு பொதுவாகவே வயதில் முதியவர்களிடம் பாசம் அதிகம் என்பதினால், அனேக நேரங்களில் கயல்விழி அவருடன்தான் இருப்பாள்.

இன்றும் அவருக்கு உதவ சென்றவள், வேணி பாட்டிக்கு சமைத்து கொடுத்துவிட்டு கிளம்ப லேசாய் இருட்ட ஆரம்பித்தது. தன்னை இருவிழிகள் நீண்ட நேரமாய் தொடர்வதை உணராமல் அங்கிருந்து கிளம்பினாள் கயல்விழி. ஏதோ தடுக்கி அவள் கீழே விழபோக,

“கயலு பத்திரம் “ என்றான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.