(Reading time: 16 - 32 minutes)

ன் அறைக்குள் நாற்காலியில் அமர்ந்தபடி, விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தவனை விசாலத்தின் குரல் கலைக்க, அவன் மெல்ல திரும்பினான்…

“ஹ்ம்ம்… என்ன பண்ண?... இங்க நீங்க வந்து இப்படி உட்கார்ந்திருக்கீங்க… அங்க?.... சொல்லவே எரிச்சலா இருக்கு… எல்லாம் நம்ம தலையெழுத்து…”

விசாலம் தன் தலையில் லேசாய் அடித்துக்கொண்டு புலம்ப,

“என்னாச்சு அக்கா?...” என்றான் அவன்…

“வேணா விடுங்க தம்பி… நான் சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்…”

“பரவாயில்லை சொல்லுங்க…. இனியும் கஷ்டப்பட என்ன இருக்கு?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

அவன் விரக்தியாக சொல்ல, அது ஒன்றே போதுமானதாக இருந்தது விசாலத்திற்கு…

“சுதீப் தம்பி தான் அண்ணனாட்டாம் குழந்தை பையனா இல்லையேன்னு வருத்தப்பட்டு சொல்லுறார்… அந்த வருத்தம் கொஞ்சமாச்சும் நம்ம சரயூக்கு இருக்கா?...”

“இல்லக்கா… அவ ஏதோ விளையாட்டா…..”

அவன் சொல்லிக்கூட முடிக்கவில்லை…

“விளையாட்டா?... எது எதுல விளையாடணும்னு இல்லையா தம்பி?... எப்படி சிரிக்குறா பாருங்க… அவ சிரிப்புல என்னமோ தப்பெல்லாம் உங்க மேல இருக்குற மாதிரில்ல தெரிஞ்சது….”

விசாலம் சொன்னதும் விரக்தியாக சிரித்தான் திலீப்….

“எனக்கு வயிறு எரியுது தம்பி… கட்டின புருஷனை எப்படி அடுத்தவங்க கிட்ட விட்டு கொடுக்கலாம்? ஆயிரமே இருந்தாலும் சுதீப் உங்க தம்பி இல்லையா… அவர்கிட்ட உங்களை விட்டு கொடுக்கலாமா?... உங்க மேல இப்படி இவளே குறை சொன்னா, ஊர்ல இருக்குறவங்க பேசுறதுக்கும் இவ பேசுறதுக்கும் என்ன வித்தியாசம் இருந்துட போகுது?... சொல்லுங்க?...”

“விடுங்கக்கா… சரயூ அப்படி எல்லாம் இல்ல…”

அதை சொல்லும் போது ஏனோ அவன் குரல் நடுங்கிற்று… சற்று முன்பு சரயூ பேசிய விதம் அவனிடத்தில் குறை இருப்பதை போலத்தானே தெரிந்தது அவனுக்கு…

பின்னர் எப்படி அவனால் தன் மனைவி அப்படி ஓர் அர்த்தத்தில் சொல்லவில்லை என்று உணர முடியும்?...

எனினும் விசாலத்திடம் அவளை விட்டுக்கொடுக்க மனமில்லாது அவன் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்ல, அவன் குரலே அவளுக்கு காட்டி கொடுத்தது அவன் நொந்து போயிருக்கிறான் என்பதை…

நெஞ்சம் குளிர்ந்து போனவள், வார்த்தைகளில் அவனுக்கும் சரயூவிற்கும் இடையே உருவான சிறு விரிசலை மேலும் பெரிதாக்க எண்ணினாள் அக்கணமே…

“முடியலையே தம்பி… என்னால முடியலையே…. பரம்பரை பரம்பரையா பெருமை சேர்த்த கௌரவம் போச்சு…. ஊர் முன்னாடி அவமானமும் பட்டாச்சு…. அந்த வேதனையில நீங்க தவிச்சு போய் நிக்குறீங்க… ஆனா அவ?... பெத்ததும் பொண்ணு… இதுல அவ உங்க தலையெழுத்தை குறை சொல்லுறா… அவளுக்கு பெத்துக்கொடுக்க வக்கில்லன்னு சொல்லுறதை விட்டுட்டு உங்க மேல ஈசியா பழியை போட்டுட்டு இப்படி தப்பிச்சிக்கப் பார்க்குறாளே தம்பி?... புருஷனையே குறை சொல்லி சிரிக்குறாளே…. இந்த கொடுமையெல்லாம் எங்கயாவது நடக்குமா?...”

அவள் தன் வேலையை செவ்வனே தொடர்ந்த நேரத்தில் அவன் மறுத்து பேச வாயெடுக்க,

“உங்க அம்மா இருந்திருந்தா, இவளை கட்டி வச்சிருப்பாங்களா உங்களுக்கு?... நம்ம வம்சத்து பெருமையும் இவளால இப்படி சீர்குலைஞ்சும் போயிருக்காதே… சுதீப் உங்க தம்பி இல்லையா?... அந்த எண்ணம் கொஞ்சமாச்சும் இருக்குதா?... அதென்ன இப்படி பல்லைக்காட்டி சிரிக்குறது?... நம்ம சுகன்யா என்னைக்காவது உங்ககிட்ட இப்படி சத்தம் போட்டு சிரிச்சிருக்காளா?... ஆனா சரயூ?... சுதீப் தம்பி கிட்ட அதென்ன அப்படி சிரிச்சு பேசுறது?... இந்த பழக்கம் எல்லாம் நம்ம வீட்டுல எப்ப வந்துச்சு தம்பி?... அண்ணன் தம்பியாவே இருந்தாலும் எப்படி நடந்துக்கணும்னு தெரியவேண்டாம்?... ஹ்ம்ம்… என்ன புலம்பி என்ன பிரயோஜனம்?... அவளால எல்லாம் போச்சு… இன்னும் போகாம இருக்குறது இன்னும் ஒண்ணு தான்… எங்க அதையும் இவ காத்துல பறக்க விட்டுடுவா போலயே… சுதீப் கிட்ட இவ இப்படி உங்களை கேவலப்படுத்தி பேசுறதை யாராச்சும் பார்த்தா வேற வினையே வேண்டாம்…. எரியுற தீயில நாமளே எண்ணையை ஊத்திவிட்ட மாதிரி இருக்கும்… இதெல்லாம் அவளுக்கு யாரும் சொல்லித்தான் தெரியணுமா?... வந்த இடத்துல ஒரு மருமகளா எப்படி நடந்துக்கணும்னு கூடவா அவளுக்கு தெரியாது?.. என்ன தான் பொண்ணோ?... சமைக்க வரலை... வாக்கப்பட்ட வீட்டுல இதுநாள்வரை இருந்து வந்த பழக்கத்தை உடைச்சிட்டது தெரியலை… தம்பியாவே இருந்தாலும் எப்படி பேசணும், பழகணும்னு தெரியலை… எல்லாத்துக்கும் மேல புருஷனை, வீட்டாளுங்ககிட்ட விட்டுக்கொடுக்கக் கூடாதுன்னும் தெரியலை… எல்லாம் நம்ம நேரம்... ஹ்ம்ம்… உங்க அம்மா மட்டும் இருந்திருந்தா இப்படி எதுவுமே தெரியாத பொண்ணை உங்க தலையில கட்டி வச்சிருப்பாங்களா?.. இல்ல இப்படி பெத்த புள்ளையை கண் கலங்க தான் விட்டுருப்பாங்களா?... ஹ்ம்ம்… இப்படி போயிட்டீங்களேம்மா… உங்க புள்ளை என்ன பாவம் பண்ணினார்?... இப்படி ஒரு பழியும், அவசொல்லும் உங்க புள்ளை மேல விழுந்துடுச்சேம்மா?...”

கண்ணீர்விட்டு அழுது புலம்பி கொண்டே அந்த அறையை விட்டு அவள் வெளியேற,

எதை நினைத்து கணக்கச்சிதமாக வார்த்தைகளில் நஞ்சை நிரப்பினாளோ, அது சரியாக அவனது மனதை குறி பார்த்து தாக்கியது வெற்றிகரமாக…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.